இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label பைபிள். Show all posts
Showing posts with label பைபிள். Show all posts

Saturday, September 12, 2009

Answering Mist: குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா


 

Answering Mist: இஸ்லாமியராக மாற பணம் கொடுத்த முஹம்மது
 
குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 
 
 
முன்னுரை: மிஸ்ட் என்ற பெயரில் இஸ்லாமிய சகோதரர் ஒருவர், ஈஸா குர்‍‍ஆன் கட்டுரைகளில் பின்னூட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார். Dr. ஜாகிர் நாயக் அவர்கள் பற்றிய கட்டுரைக்கு நான் கொடுத்திருந்த ஒரு பின்னூட்டத்திற்கு, மிஸ்ட் அவர்கள் கீழ் கண்ட விதமாக மறுபின்னூட்டமிட்டார்.
 
 
Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.. //

மூலம்: பின்னூட்ட பகுதியைக் (comments section) காணவும்.
 
(மிஸ்ட் அவர்களின் மூழு பின்னூட்டத்தையும், அதற்கான என் பதிலையும் இந்த "Answer Mist: இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அபோஸ்டசி" என்ற‌ கட்டுரையில் படிக்கவும்.

 
இந்த தற்போதைய‌ கட்டுரையில் அவரது மேலே கண்ட‌ குறிப்பிட்ட விமர்சனம் பற்றி காண்போம்.

அதாவது பணம் கொடுத்து மதம் மாற்றுவது என்பது "கூட்டிக் கொடுப்பதற்கு சமம், அல்லது அவ்வளவு கீழ்தரமானது" என்று கூறுகிறார். பணம் கொடுத்து மதம் மாற்றுவது என்பது கீழ்தரமானது என்பது தான் என் கருத்தும். ஆனால், மிஸ்ட் அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று "இப்படி செய்வது கூட்டிக் கொடுப்பது" போன்ற பாவத்திற்கு சமமானது என்று கூறியுள்ளார்.

 
இவருக்கு இஸ்லாம் பற்றி தெரிந்திருந்தால், கு‍ர்‍ஆன் ஜகாத்தை யார் யாருக்குக் கொடுக்கச் சொல்கிறது போன்ற விவரங்கள் தெரிந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். இந்த கட்டுரையில் சில விவரங்களை நாம் காணப்போகிறோம். இந்த ஆதாரங்களின் படி "கூட்டிக் கொடுப்பது போன்ற பாவத்தை முஹம்மது செய்துள்ளார்" என்ற முடிவிற்கு மிஸ்ட் வரவேண்டியிருக்கும். ஏனென்றால், குர்‍ஆன் வசனமும், சஹீஹ் புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களும் சொல்கின்றபடி, பணத்தை கொடுத்தாவது ஒரு சிலரை இஸ்லாமியராக முஹம்மது மாற்றியுள்ளார்.

 
நம்முடைய ஆதாரங்கள் கீழ் கண்ட இஸ்லாமிய நூல்களிலிருந்து கொடுக்கப்படுகிறது:
 
  • குர்‍ஆன்
  • சஹீஹ் புகாரி ஹதீஸ்
  • சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்
  • இபின் கதீர் விரிவுரை
  • இபின் இஷாக்:முஹம்மதுவின் வாழ்க்கை சரிதை (சீரத் ரஸுல் அல்லாஹ்)

 
இனி குர்‍ஆன் 9:60ம் வசனத்தின் விளக்கத்திற்குள் செல்வோம்
 
 
1) பணத்தைக் கொடுத்து இதர மக்களை இஸ்லாமுக்கு ஈர்க்க குர்‍ஆன் கட்டளை:

 
குர்‍ஆன் 9ம் அதிகாரம் 60ம் வசன கூற்றின்படி, "ஜகாத்" அல்லது "ஸகாத்" என்றுச் சொல்லக்கூடிய பணத்திலிருந்து ஒரு பகுதியை "இஸ்லாமியரல்லாதவர்களை ஈர்க்க பயன்படுத்தவேண்டும்". இந்த வசனத்தை இரண்டு தமிழாக்கத்தில் படிப்போம்.
 
முஹம்மது ஜான் தமிழாக்கம்

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (குர்‍ஆன் 9:60)

 
பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும்204. அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும்,205 நாடோடிகளுக்கும்206 தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்130 (குர்‍ஆன் 9:60)
 
மிஸ்ட் அவர்களே, இஸ்லாமின் பக்கம் உள்ளங்கள் ஈர்க்கப்பட பணத்தை பயன்படுத்தலாம், கொடுக்கலாம் என்று இவ்வசனம் சொல்கிறதே, உங்களின் விளக்கம் அல்லது கருத்து இந்த வசனத்தைச் சொன்னவருக்கு பொருந்துமா? தெரிவிக்கவும்.
 
 
2) பீஜே அவர்களின் "உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்கள்" பற்றிய விளக்கம்:

 
பீஜே அவர்களும் "உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்கள்" என்பது "இஸ்லாமியரல்லாதவர்களைக் குறிக்கும்" என்று கூறுகிறார்.
 
204. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும் :

ஸகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிமல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உளமாற அன்பு செலுத்துகிறார்களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம். (திருக்குர்‍ஆன் 9:60)

உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது. பகைமை பாராட்டும் முஸ்லிமல்லாதவர்கள் பகைமையைக் கைவிடுவார்கள் என்றால் அத்தகையோருக்கும் கொடுக்கலாம். 'உள்ளங்கள் ஈர்க்கப்பட' என்பதில் இவர்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழங்கியுள்ளனர். (நூல்: முஸ்லிம் 4275, 4277)

மூலம்: formats mine
 
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜகாத் தரப்படவேண்டும் என்று இவ்வசனம் சொல்கிறது என்று பிஜே அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். அதாவது, இஸ்லாமியர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை ஜகாத்தாக கொடுக்கவேண்டும். அதில் ஒரு பகுதியை காபிர்களுக்கு தரப்படவேண்டும், அதுவும் அவர்கள் இஸ்லாமின் பக்கம் திரும்பவேண்டும் என்பதற்காக தரப்படவேண்டும். எனவே, மிஸ்ட் அவர்களே, பணத்தின் ஆசைக்காட்டி இஸ்லாமின் பக்கம் ஈர்க்கக்கிறவர்கள் உங்களின் கருத்துப்படி "கூட்டிக்கொடுப்பவர்கள்", இது சரியாக இஸ்லாமுக்கு பொருந்துகிறதா? விளக்கவும்.

3) இபின் கதிர் இவ்வசனத்தின் விளக்கத்தை கீழ்கண்டவாறு கூறுகிறார்:
 
"இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்" என்ற பிரிவில் வருபவர்கள் இவர்களாவார்கள்: அதாவது இஸ்லாமுக்கு மாறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது எப்படியென்றால், ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களிலிருந்து முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சில பொருட்களை சஃப்வான் பின் உமய்யா என்பவருக்கு கொடுத்தார்கள். இவர் ஒரு இஸ்லாமியரல்லாதவராக (முஸ்ரிக்காக) இருந்து அந்த யுத்தத்தில் சண்டையிட்டு இருந்தார்.... (ஸயித் பின் அல் மஸியப் என்பவரிடமிருந்து, யூனிஸ் அல் ஜஹ்ரியிடமிருந்து, இபின் அல் முபாரக் என்பவரிடமிருந்து, ஜகரியா பின் உத்தி அறிவித்ததாவது) சஃப்வான் பின் உமய்யா கூறியதாக இமாம் அஹமத் கூறியதாவது: "இறைத்தூதர் - அவர் மீது சாந்தி உண்டாகட்டும், ஹுனைன் யுத்தத்தில் எனக்கு பொருட்கள் (பணம்) கொடுத்தார்கள், நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், "நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்" [*].

மூலம்: இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது (http://isakoran.blogspot.com/2009/08/blog-post.html ) 
 
மிஸ்ட் அவர்களே, இதை கவனியுங்கள்:

"நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் "

உங்கள் நபி கொடுத்தாராம், கொடுத்தாராம் கொடுத்துக்கொண்டே இருந்தாராம், எதுவரையில்? அந்த நபர் முஹம்மதுவை நேசிக்கும் நபராக மாறும்வரை கொத்துக்கொண்டே இருந்தாராம்... இது எதற்கு சமம் - சிறிது சொல்லமுடியுமா?

மிஸ்ட் அவர்களே உங்களின் கருத்துப்படி, இது ஆசைக் காட்டி மசியவைப்பதா? அல்லது லஞ்சம் கொடுத்து இஸ்லாமியராக மாற்றுவதா? அல்லது கூட்டிக்கொடுப்பதா?
 
 
4) சஹீஹ் புகாரி

 
சில நேரங்களில் முஹம்மது இஸ்லாமியரல்லாதவர்களுக்கு (அல்லது புதிதாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு) பொருட்கள்/பணம் தருவதைக் கண்டு " இதர இஸ்லாமியர்கள் கோபித்துக் கொண்டார்கள்", இன்னும் சிலர் இது சரியில்லை, நீதியில்லை என்று உங்கள் நபி மீது கோபம் கொண்டார்கள். பிறகு முஹம்மது அப்படிப்பட்டவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

மிஸ்ட் அவர்களே, கீழ் கண்ட புகாரி ஹதீஸ்களை படித்து உங்கள் கருத்தை திரும்பச் சொல்லமுடியுமா?
 
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4667

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், 'இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்' என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் 'நீங்கள் நீதி செய்யவில்லை' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகிற கூட்டத்தினர் தோன்றுவர்' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3344

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, 'நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டுவிடுகிறாரே" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்" என்று கூறினார்கள். ………..

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4332

அனஸ்(ரலி) அறிவித்தார்

மக்கா வெற்றியின் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். எனவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக் கொண்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், 'ஆம், (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ தான் செல்வேன்'' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4334

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்று கூட்டி, '(இந்தக்) குறைஷிகள், அறியாமைக் கொள்கையை இப்போது தான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனல் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். எனவே, அவர்களுக்கு நிவராணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?' என்று கேட்டார்கள். அன்சாரிகள், 'ஆம் (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகளின் கணவாயில் தான் அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கில் தான்... செல்வேன்'' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4333

அனஸ்(ரலி) அறிவித்தார்

…………. பின்னர், நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்ட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஸாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, 'இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்'' என்று கூறினார்கள்.
 
5) சஹீஹ் முஸ்லீம் ஹதீஸ்

திர்மிதி ஹதீஸிலிருந்து இபின் கதீர் அவர்கள் விளக்கியபடியே, முஸ்லிம் ஹதீஸிலும் வந்துள்ளது. மிஸ்ட் அவர்களே, இந்த ஹதீஸ் சொல்வது ஆசைக் காட்டுவது ஆகாதா? இது கூட்டிக்கொடுப்பது ஆகாதா? சிறிது விளக்குங்களேன்.
 
...அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சஃப்வன் பி. உமய்யாவிற்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். அவர் மறுபடியும் அவருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள், மறுபடியும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். சஃப்வான் கூறியதாக ஸயத் பி. முஸய்யிப் கூறியதாவது, "நான் வெறுப்பவர்களில் அதிகமாக வெறுக்கும் நபராக அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் இருந்தார்கள், அவர் எனக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார், எதுவரையில் என்றால், நான் அதிகமாக நேசிக்கும் நபராக அவரை நான் நினைக்கும் வரையிலும் அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார்". (என் சொந்த மொழியாக்கம், இதன் மூலம் ஆங்கிலத்தில் கீழே உள்ளது)

Book 030, Number 5730:

…., and Allah's Messenger (may peace be upon him) gave one hundred camels to Safwan b. Umayya. He again gave him one hundred camels, and then again gave him one hundred camels. Sa'id b. Musayyib said that Safwan told him: (By Allah) Allah's Messenger (may peace be upon him) gave me what he gave me (and my state of mind at that time was) that he was the most detested person amongst people in my eyes. But he continued giving to me until now he is the dearest of people to me.
 
6) இபின் இஷாக் - முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு

முஹம்மது பணத்தைக் கொடுத்து ஆசைக் காட்டி மட்டுமல்ல, இதர மக்களை பயமுறுத்தியும் இஸ்லாமுக்கு அழைத்துள்ளார்.
 
மாலிக் என்பவரிடம் கீழ் கண்டவாறு கூறும் படி இறைத்தூதர் சொன்னார்கள்:

"மாலிக் ஒரு முஸ்லிமாக மாறி தன்னிடம் வந்தால் அப்போது அவரது குடும்பத்தையும் சொத்துக்களையும் திரும்ப கொடுத்து, இன்னும் நூறு ஒட்டகங்களையும் தருவேன்"

.... இதைக் கேட்டவுடன் மாலிக் எழுந்து.... இறைத்தூதரிடம் சேர புறப்பட்டு வந்தார்... அவர் (முஹம்மது) மாலிக்கிற்கு அவரது குடும்பத்தையும், சொத்துக்களையும் கொடுத்து, பிறகு நூறு ஒட்டகங்களையும் கொடுத்தார்கள். மாலிக் மிகவும் சிறப்பான ஒரு முஸ்லிமாக மாறினார் (இபின் இஷாக், சீரத் ரஸுல் அல்லாஹ், பக்கம் 593)

The apostle told them to tell Malik that if he came to him as a Muslim he would return his family and property to him and give him a hundred camels. On hearing this Malik came out ... and rode off to join the apostle ... He (Muhammad) gave him back his family and property and gave him a hundred camels. He became an excellent Muslim. (Ibn Ishaq, Sirat Rasul Allah, p. 593)
 
மிஸ்ட் அவர்களின் கூற்றை இன்னொரு முறை படிப்பது நன்று:

//Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.. //
 
 
மிஸ்ட் அவர்களே உங்களின் வரிகளில் பயன்படுத்திய வார்த்தைகளின் படியெல்லாம் உங்கள் முஹம்மது செய்துள்ளார். அதாவது "பணம் கொடுத்து ஆசை வார்த்தைக் காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது" என்ற உங்களின் வார்த்தைகளின் சாராம்சத்தின்படி, அப்படியே முஹம்மது செய்துள்ளார்.

 
இந்த மாலிக் என்பவரை பாருங்கள், அவர் இஸ்லாமியராக மாறினால், அவரது குடும்பத்தை (மனைவி பிள்ளைகளை...) திரும்ப தருவாராம்... இன்னும் அவரது சொத்துக்களையே திரும்ப தருவாராம்... இன்னும் அதிகமாக (லஞ்சம்) நூறு ஒட்டகங்களைத் தருவாராம்....

யாராவது தன் சொந்த குடும்பம் திரும்ப கிடைக்கும் போது, தன் சொத்துக்கள் கிடைக்கும் போது, இன்னும் போனஸ்ஸாக நூறு ஒட்டகங்கள் கிடைக்கும் போது "லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலில்லாஹி" என்று ஏன் சொல்லமாட்டான்?!?

மாலிக் என்பவர் ஒரு அறிவாளி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நான் இஸ்லாமியனாக மாறமாட்டேன் என்று மாலிக் சொல்லியிருந்தால், தன் மனைவி யாரோ ஒரு முஸ்லிமுடைய வைப்பாட்டியாகவோ (மிகவும் அழகாக இருந்தால் முஹம்மதுவின் வைப்பாட்டியாகவோ) அல்லது குர்‍ஆனின் வார்த்தைகளின் படி சொல்லவேண்டுமானால், "இஸ்லாமியர்களின் வலக் கரம் சொந்தமாக்கிக்கொண்ட ஆபாச ஆசைகளை தீர்க்கும் அடிமைப்பெண்ணாகவோ" மாறியிருப்பாள்.

அது மட்டுமல்ல தன்னுடைய உயிருக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே தான் மாலிக் சுலபமான வழியை புத்திசாலியான வழியை தெரிந்துக்கொண்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், "இப்படி இஸ்லாமுக்கு மாறிய மாலிக் ஒரு நல்ல இஸ்லாமியராக மாறினாராம்?!?..." (இஸ்லாமியர்களின் அகராதியின் படி "நல்ல முஸ்லிம்" என்றால் என்ன அர்த்தம் என்று வாசகர்கள் சிந்திக்கவும்).

முடிவுரை: அருமை மிஸ்ட் அவர்களே, கூட்டிக் கொடுத்தவர் யார்? என்று இப்போது புரிகிறதா?

குர்‍ஆனும் ஹதீஸ்களும் இஸ்லாமிய விரிவுரையாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை படித்துப்பார்த்து விமர்சனம் செய்யவேண்டும். முதலில் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொண்டு விமர்சியுங்கள், இல்லையானால்... அதிகமாக அவமானப்படவேண்டிவரும்.

நீங்கள் தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள், புதிய தலைப்புக்களை எடுத்துத் தாருங்கள்.

உங்களின் இதர பின்னூட்ட பதிலில் சந்திக்கிறேன்....
 

Thursday, July 23, 2009

முஹம்மதுவின் வினோதமான போதனைகள்: ஜகரியா பூட்ரோஸின் நேர்க்காணல்




முஹம்மதுவின் வினோதமான போதனைகள்: ஜகரியா பூட்ரோஸின் நேர்க்காணல்


The Strange Teachings of Muhammad By: FrontPage Magazine


Tuesday, June 02, 2009



ப்ரண்ட் பேஜ் (Front Page Magazine Interview) நேர்க்காணலின் இன்றையை விருந்தினர் காப்டிக் பாதிரியார் தந்தை ஜகரியா போட்ரோஸ் என்பவராவார். இவரை அல்-கைதா "உலக‌த்தில் அதிகமாக தேடப்பட்டுக் கொண்டு இருக்கும் இஸ்லாமியரல்லாதவர்" என்றுச் சொல்லி, இவரது தலைக்கு "60 மில்லியன் டாலர் பரிசை நிர்ணயித்துள்ளது. ஒரு புகழ்பெற்ற அரபி பத்திரிக்கை இவரை "இஸ்லாமின் எதிரி நம்பர் 1" என்று அழைக்கிறது. இவர் லைஃப் டீவி (Life TV) என்ற தொலைக்காட்சியில் "உண்மை உரையாடல்கள்" என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். இவரது இரண்டு இணைய தளங்கள் இவைகளாகும் 1. islam Christianity 2. Father zakaria dot net . இவருக்கு சமீபத்தில் "டானியேல் ஆஃப் தி இயர் – Daniel of the Year " என்ற சன்மானமும் செய்யப்பட்டது.


FrontPage: தந்தை ஜகரியா பூட்ரோஸ் அவர்களே, உங்களை ப்ரண்ட் பேஜ் நேர்க்காணலுக்கு வரவேற்க்கிறேன்.

Botros: என்னை அழைத்ததற்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

FrontPage: நேர்க்காணலின் ஆரம்பமாக, உங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உங்கள் அனுபவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசுவோம்.


Botros: நான் ஒரு காப்டிக் ஆவேன். என்னுடைய 20வது வயதிலே நான் ஒரு போதகரானேன். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள எகிப்திலே கிறிஸ்தவ போதகர்களோ அல்லது இதர சமயத்தார்களோ, இஸ்லாமியர்களிடையே "சமயம்" பற்றி பேசக்கூடாது. கிறிஸ்தவத்தில் அதிகம் ஆர்வமாக இருந்த என்னுடைய மூத்த சகோதரர் இந்த உண்மையை மிகவும் தாமதமாக கற்றுக்கொண்டார். அவர் இஸ்லாமியர்களுக்கு போதித்தார், இதனால் அவர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார், இஸ்லாமியர்கள் அவரது நாவை துண்டித்தார்கள், மற்றும் அவரை கொலை செய்தார்கள்.

இஸ்லாமியர்களை வெறுப்பதை விட, நான் அவர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல அதிகமாக தூண்டப்பட்டேன். இயற்கையாகவே, என்னுடைய இந்த எண்ணம் அனேக பிரச்சனைகளை கொடுத்தது. நான் தொடர்ந்து பயமுறுத்தப்பட்டேன், தூஷிக்கப்பட்டேன், சிறையில் அடைக்கப்பட்டேன், ஒரு ஆண்டு காலம் சிறைச்சாலையில் கொடுமைப்படுத்தப்பட்டேன், இதற்கெல்லாம் ஒரே காரணம், இஸ்லாமியர்களுக்கு நான் சுவிசேஷத்தைச் சொன்னதால் தான். எகிப்திய ஆதிகாரிகள், "அபோஸ்டசி" என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமை விட்டு வெளியெறி கிறிஸ்தவத்திற்கு மாறுவதற்கு நான் உதவி புரிவதாக என் மீது புகார் கொடுத்தார்கள். இன்னொரு முறை நான் எகிப்திலிருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கும் போது கைது செய்யப்பட்டேன். இந்த பிரச்சனைகளினால், நான் என் சொந்த நாட்டை விட்டு ஓடி ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சில நாட்களை கழித்தேன். கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய என்னுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் நீண்டது மற்றும் அனேக திருப்புமுனைகளைக் கொண்டது. சமீபத்தில், என் வாழ்க்கை வரலாறு (http://www.islam-christianity.net/Defynedeath.html) ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.

FrontPage: இதை நான் கேட்பதால் உங்களிடம் மன்னிப்பை கோறுகிறேன், நீங்கள் சிறைச்சாலையில் எப்படி துன்புறுத்தப்பட்டீர்கள், சிறிது விளக்கமுடியுமா?

Botros: நான் இயேசுவின் நற்செய்தியை பிரசங்கித்ததால், எகிப்திய இராணுவம் என் வீட்டிற்குள் நுழைந்து என் நெத்தியில் துப்பாக்கியை வைத்தார்கள். ஏன் என்னை கைது செய்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லாமலேயே என்னை ஒரு சிறிய அறையாக இருந்த சிறைச்சாலையில் அடைத்தார்கள் (1.8 x 1.5 x 1.8 மீட்டர் அளவு கொண்ட சிறிய அறையில் அடைத்தார்கள், என் உயரம் 1.83 மீட்டர் இருந்ததால், இது எனக்கு இன்னும் அதிக பிரச்சனையாக இருந்தது). அந்த அறையில் இன்னும் அனேகர் இருந்தனர், அவ்வறையின் வெட்பநிலை 100 டிக்ரியைவிட அதிகமாக இருந்தது, வெளிச்சம் இல்லை, ஜன்னல்கள் இல்லை மற்றும் காற்றோட்டமும் இல்லை. அந்த அறையில் எந்த கட்டில்களும் இல்லை, மற்றும் நாங்கள் தரையிலேயே படுத்துக்கொண்டோம், எல்லாரும் ஒரே நேரத்தில் தூங்க அங்கு இடமில்லாமல் இருந்ததால், நாங்கள் நேரத்தை பிரித்துக்கொண்டு ஒவ்வொருவராக தூக்கினோம். ஆக்ஸிஜனும் இல்லாமல் இருந்ததால், கதவின் ஓரத்தின் உடைந்த பகுதியின் பக்கத்தில் நாங்கள் எங்கள் மூக்கை வைத்து சுவாசித்தோம். இதுவும், நாங்கள் நேரத்தை பகிர்ந்துக்கொண்டு ஒவ்வொருவராக செய்தோம். இந்த நிலையில் நான் இருந்ததால், எனக்கு கிட்னி பிரச்சனை வந்தது, அவர்கள் எந்த மருத்துவ உதவியும் செய்யவில்லை. கொசுக்கள் எங்கள் மீது உலாவின. உணவை அவர்கள் வாலிகளில் கொடுப்பார்கள். கூழ் என்றால் என்ன என்று அப்போது தான் எங்களுக்கு தெரியவந்தது. அந்த சிறைச்சலையின் பாதுகாவலன் அடிக்கடி எங்களுக்கு உணவு வழங்கும் வாலிகளில் எங்களுக்கு முன்பாகவே துப்புவான், மற்றும் மூக்கை சிந்தி அந்த வாலிகளில் போடுவான்.

FrontPage: நீங்கள் அனுபவித்த இந்த கொடுமைகளை கேட்கும் போது, எனக்கு இதயம் பதபதக்கிறது. இப்படி செய்து நீங்கள் துன்பம் அனுபவிப்பதற்கு உங்களின் முக்கியமான நோக்கம் தான் என்ன?

Botros: அதாவது "மனிதர்களின் இரட்சிப்பிற்காக" இப்படி நான் செய்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுண்டு, நான் எந்த அளவு இஸ்லாமை விமர்சிக்கின்றேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமியர்களை நேசிக்கிறேன். ஆகையால், இஸ்லாமியர்களை காப்பாற்ற, இரட்சிப்படையச் செய்ய இதைவிட வேறு மார்க்கம் இல்லை, அதாவது "இஸ்லாமின் பொய்களை உலகிற்கு தெரிவிப்பதை தவிர வேறு வழியே இல்லை". உலகிற்கு நற்செய்தியைச் சொல்லும்படி, கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டுள்ளார். இஸ்லாமியர்களை கிறிஸ்துவிற்கு மாற்றுவது மிகவும் ஆபத்தான காரியமாகும். ஆபத்து இருக்கிறது என்பதற்காக‌ நாங்கள் அவர்களை அப்படியே அனாதைகளாக விட்டுவிடமாட்டோம். அனேக இஸ்லாமியர்கள் அதிக பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை திருப்திப்படுத்த விரும்புகிறார்கள், ஆனால், அவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது, அவ்வளவு தான். ஆகையால், அவர்களின் ஆர்வத்தை மதித்து, நான் அவர்களுக்கு உண்மையான வெளிச்சத்தை காட்ட முயற்சிக்கிறேன்.

FrontPage: இஸ்லாம் ஒரு "பொய்யான மார்க்கம்" என்பதை சுருக்கமாக விவரிக்கிறீர்களா?

Botros: இறையியல் முறையில் நான் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஆவேன். எனவே, கிறிஸ்தவம் மட்டுமே உண்மையைச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன். கிறிஸ்துவில் எனக்கு இருக்கும் நம்பிக்கையால், நான் இதர மார்க்கங்கள் மனிதர்களால் உண்டானவை என்று அவைகளை புறக்கணிக்கிறேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முஹம்மது செய்த மிகப்பெரிய குற்றம் மற்றும் இந்தக் குற்றம் மன்னிக்கப்படாத குற்றம், என்னவென்றால், "கிறிஸ்து கொண்டு வந்த இரக்கத்தையும், கிருபையையும் அவர் மறுத்தது தான்" மற்றும் முஹம்மது மனித இனத்தை மறுபடியும் பழைய சட்டத்தின் காலத்திற்கு அழைத்துச் சென்றது தான்.

ஆனால், நம் சமய நம்பிக்கையை பக்கத்தில் வைத்துவிட்டு, பொதுவாக‌ சிந்தித்தாலும், உலகில் இருக்கும் பெரிய மதங்களில் இஸ்லாம் மட்டுமே கண்டிப்பாக தவறானதாக இருக்கும். உதாரணத்திற்கு, நான் புத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், புத்தசமயம் நல்ல கோட்பாடுகளை தருகிறது மற்றும் மக்கள் அதன் நல்ல கட்டளைகளுக்காக அதனை பின் பற்றுகிறார்கள். இதே போல இஸ்லாமுக்கு நாம் சொல்லமுடியாது. உலகில் இருக்கும் எல்லா மதங்களிலும் இஸ்லாம் மட்டுமே தன்னை பின்பற்றும் மனிதர்களை பயப்படவைத்து, அதாவது இஸ்லாமை விட்டுவெளியேறினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்துகிறது, மரண பயத்தை கொடுத்து இஸ்லாம் மனிதர்களை தக்கவைத்துக் கொள்கிறது. மற்றும் போரிட்டு நாடுகளை பிடிக்கும் ஆசைக் காட்டி, ஆபாசத்தில் ஈடுபட ஆசைக்காட்டி, இன்னும் பொருட்கள் கொள்ளையிட ஆசைக்காட்டி மக்களை தக்கவைத்துக்கொள்கிறது.

இஸ்லாமிய சரித்திரமே, இவைகளுக்கு சாட்சியாக ஆதாரமாக இருக்கின்றது. ஆனால், கிறிஸ்தவம் தனக்காக உயிரை விடும் கிறிஸ்தவர்களால் அவர்களின் வாழ்க்கையை தியாகம் செய்யப்பட்டு பரப்பப்பட்டது, கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதாலேயே கொல்லப்பட்டனர். இஸ்லாம் வன்முறை மூலமாக பரப்பப்பட்டது, வாளின் முனையில் இஸ்லாம் பரவியது, பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கி இஸ்லாம் பரவியது. இஸ்லாம் மனிதனின் பலவீனங்களை புரிந்துக்கொண்டு அவனுக்கு ஆசைக்காட்டி அதன் மூலமாக பரவியது. இறையியல் முறையிலும், தத்துவ ரீதியிலும் இன்னும் சரித்திர பூர்வமாகவும் இஸ்லாம் ஒரு தவறான மார்க்கம் என்பது நிருபனமாகிறது.

FrontPage: நீங்கள் உங்கள் உரையாடல்களை, விவாதங்களை இஸ்லாமிய ஆதாரங்களை முன்வைத்தே செய்கிறீர்கள். ஏன் இஸ்லாமிய போதகர்களும், இமாம்களும், தங்கள் இஸ்லாமிய நூல்கள் என்ன சொல்கின்றன என்று தெரிந்துக் கொள்வதற்கு பதிலாக, அதன் படி விவாதிப்பதற்கு பதிலாக, உங்களை ஏன் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்?


Botros
: இதன் பதில் தெளிவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இஸ்லாமிய ஆதாரங்கள், நூல்கள் அனைத்தும் இஸ்லாம் பற்றி அவைகளே பேசுகின்றன. உலகத்திலேயே இஸ்லாமியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி, அவர்களின் இஸ்லாமிய நூல்களேயாகும். அதாவது ஹதீஸ்களும், முஹம்மதுவின் சரிதைகளும் தான் அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றன. இவைகள் தான் இஸ்லாமியர்களை தர்மசங்கடமாக்குகின்றன. இந்த நாள் வரை நான் கிட்டத்தட்ட 500 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இஸ்லாமிய பல தலைப்புக்கள் பற்றி ஒளிபரப்பியுள்ளேன். இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் இஸ்லாமிய நேரடி ஆதாரங்களையும் நூல்களையும் பயன்படுத்தியுள்ளேன், அதாவது குர்‍ஆன், ஹதீஸ்கள், தஃப்சீர்கள் (இஸ்லாமிய விரிவுரைகள்) போன்றவற்றை பயன்படுத்தியுள்ளேன்.

ஆகையால், இஸ்லாமிய அறிஞர்கள் இமாம்களுக்கு என்ன செய்யமுடியும்? இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்தும், ஷரியா சட்டங்களிலிருந்தும் நான் மேற்கோள் காட்டும் விவரங்களுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டுமானால், அவர்களுக்கு நான் சொல்வதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வாய்ப்பு இல்லாமல் போகிறது, உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமில் வைப்பாட்டி வைத்துக்கொள்வது சட்டபூர்வமானது, ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதும் ஆதார பூர்வமான விவரமாக உள்ளது, இதனை அவர்கள் அங்கீகரித்தே ஆக வேண்டும். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி என்னவென்றால், நான் சொல்வதையெல்லாம் உதரித்தள்ளிவிட்டு, தனிப்பட்ட முறையில் என்னை தாக்குவது மட்டுமேயாகும்.

ஆனால், சாதாரண முஸ்லிம்கள் தங்கள் இமாம்களிடம் அறிஞர்களிடம் இந்த என் குற்றச்சாட்டுகளுக்கு பதிலைத் தாருங்கள் என்று கேட்கும் போது, பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் பதில் "உங்களை பாதிக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்" என்பதேயாகும்.

FrontPage: ஆக, தங்கள் மத நூல்கள் சொல்வதையே புறக்கணித்துவிடும் இஸ்லாமிய அறிஞர்களும், இஸ்லாமியர்களும் பின்பற்றும் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்லமுடியும்? இதலிருந்து நாம் எதனை தெரிந்துக்கொள்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Botros: இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், இஸ்லாமில் நம்பிக்கை குறைவு, ஆனால், ஆட்சி அதிகாரங்கள் அதிகம் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் சொன்னது போல, ஒருமனிதன் தான் பின் பற்றும் நம்பிக்கையின் கோட்பாடுகளை புறக்கணித்துவிட்டு, அதற்கு வேறுவகையான அர்த்தங்களை கொடுத்துக்கொண்டு இருப்பதினால், அவனுக்கு என்ன பயன் உண்டாகமுடியும்? உண்மையைச் சொல்லவேண்டுமானால், பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய நூல்களில் என்ன இருக்கிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாக அவர்கள் தெரிந்துக்கொண்டு இருப்பதெல்லாம் இங்கே ஒரு கட்டளை அங்கே ஒரு கட்டளை முக்கியமாக "இஸ்லாமின் ஐந்து தூண்கள்" போன்றவைகள் மட்டுமே. இதனால் தான் நான் பேசும் தலைப்புக்களை கேட்கும் இஸ்லாமியர்களுக்கு கன்னத்தில் அறைவது போன்ற ஒரு அதிர்ச்சியைத் தருகிறது. ஆனால், இவைகளை புரிந்துக்கொள்ளாத இஸ்லாமியன் "எங்களுக்கு அவர்கள் எதிரி" என்றுச் சொல்லி, உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப்படாமல் என்னை கொலை செய்ய முயற்சி எடுப்பான். அதே போல, உண்மையான சத்தியம் எது என்று விரும்பும் இஸ்லாமியர்கள், சத்தியத்தை தேடும் இஸ்லாமியர்கள், இஸ்லாமின் உண்மை நிலையை அறிந்துகொண்டு, 1400 ஆண்டுகளாக நம்பிக்கொண்டு இருந்த மிகப்பெரிய பொய்யிலிருந்து விடுபட்டு சத்தியத்தை நோக்கி வெற்றி நடை போடுகிறார்கள்.

ஒரு நேர்மையான கேள்வி என்னவென்றால், ஏன் இஸ்லாமிய உலேமாக்கள் போதகர்கள், இந்த விஷயங்களை எல்லாம் சாதாரண இஸ்லாமியர்களிடமிருந்து மறைக்கிறார்கள்? ஏன் இஸ்லாமியரல்லாதவர்களிடமிருந்து மறைக்கிறார்கள் என்பதேயாகும்? உண்மை யாரிடம் எதிர்ப்பார்க்க முடியும் என்று ஒருவர் சிந்தித்தால், "உலேமாக்களிடம் தான் எதிர்ப்பார்க்கமுடியும்" என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், உண்மையில் உலேமாக்கள் உண்மையை மறைத்துவிடுகிறார்கள். ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், எப்போதெல்லாம் ஒரு இஸ்லாமிய நூலிலிருந்து நான் ஒரு பிரச்சனையுள்ள மற்றும் இஸ்லாமியர்களுக்கு தர்மசங்கடமான விவரத்தை மேற்கோள் காட்டுகின்றேனோ, உடனே இஸ்லாமிய உலக‌ அரபி நூலகங்களிலிருந்து அந்த நூல் மாயமாக மறைந்துவிடும்.

ஒரு அடிப்படை என்னவென்றால், அனேக இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், "இஸ்லாம் என்பது இந்த உலகில் சத்தியத்திற்காக ஆன்மீக வாழ்க்கையை வாழ்வைதை விட, கேள்வி கேட்காமல் இஸ்லாமை பின்பற்றினால் போதும், எதிர் காலத்தில் கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, இந்த பூமியிலும் கூட தங்களுக்கு வெற்றியும், மரியாதையும் அதிகாரமும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்".

FrontPage: நீங்கள் ஒரு முறை ஒரு இஸ்லாமிய பெண் ஆண்களுக்கு பாலுட்டலாம் என்ற ஹதீஸ் பற்றி சொல்லியுள்ளீர்கள். உண்மையாக அது என்ன விவரம், இதைப் பற்றி உலேமாக்கள் (கடந்தகால நிகழ் கால உலேமாக்கள்) இதைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?

Botros: நான் இதற்கு முன்னால் சொன்ன விவரத்திற்கு இது சரியான ஒரு எடுத்துக்காட்டாகும். நான் இந்த "இஸ்லாமிய பெண்கள் ஒரு புதிய மனிதருக்கு பால் ஊட்டலாம்" என்ற ஹதீஸ் பற்றிய பிரச்சனையை வெளிக்காட்டியபோது, உலேமாக்கள், தங்கள் இஸ்லாமிய ஹதீஸைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு என்னை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டால், அவர்களிடம் சரியான பதில் இல்லை. தங்கள் நூல்களில் இருக்கும் பிரச்சனைகளை அலசுவதை விட என்னை தாக்கி பேசுவது அவர்களுக்கு சுலபமான வழியாகும்.

கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, உலேமாக்கள் இந்த கீழ்தரமான பழக்கத்தை ஆதரித்துவந்தார்கள், இதில் இபின் தமிய்யா "ஷேக் அல் இஸ்லாம்" என்பவரும் அடங்குவார். இதற்கும் மேலாக, நான் இந்த ஹதீஸ் பற்றி பேசிய பிறகு, அல் அஜர் என்ற சுன்னி இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் அறிஞர், ரிதா அல் கபீர் என்ற இஸ்லாமிய அறிஞர் இதற்கு ஒரு பத்வா வெளியிட்டார், அதாவது "இஸ்லாமிய பெண்கள் புதிய மனிதர்களுக்கு பால் ஊட்டலாம்" என்று பத்வா வெளியிட்டார். இதற்கு எகிப்திய மக்கள் (சந்தோஷமாக) எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் தனியாக இதனைப் பற்றி குறிப்பிட்டபோது "நான் இஸ்லாமின் கோட்பாடுகளை திருத்தமுயற்சிப்பதாக" குற்றம் சாட்டுகிறார்கள்.

FrontPage: ஆக, இஸ்லாமிய ஆதார நூல்கள் புதிய மனிதர்களுக்கு பெண்கள் பாலூட்டலாம் என்றுச் சொல்கிறது. சரி, இப்படிப்பட்ட ஒரு விவரத்தை யார் சொல்லியிருப்பார்கள்? எந்த நோக்கத்திற்காக இப்படி சொல்லியிருப்பார்கள்? யாராவது சொன்னாலும் எழுதி வைத்தவர்கள் யார்? நான் இந்த விவரத்தை ஒரு சரியான போதனையாகவே ஏற்றுக்கொள்வதாகவும் வைத்துக்கொண்டாலும், இந்த கட்டளையின் பின்னால் என்ன நன்மை இருக்கப்போகிறது?

Botros: முஹமம்து (அல்லாஹ்வின் வேண்டுதலும், பாக்கியமும் அவர் மீது உண்டாவதாக) சொன்னார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். யார் இப்படிப்பட்ட ஒரு விவரத்தை உருவாக்கியவர்? முஹம்மது தான். ஏன் உருவாக்கினார்? யாருக்குத் தெரியும் ஆண்களுக்கு பாலூட்டிவிடு என்று அந்த பெண்ணுக்குச் சொல்லிவிட்ட பிறகு முஹம்மது தனக்குள் தானே சிரித்துக் கொண்டும் இருக்கக்கூடும். ஒருவேளை அவர் இதை ஒரு நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கலாம், அதாவது தன்னை ஒரு நபி என்று எவ்வளவு தூரம் இவர்கள் நம்புகிறார்கள் என்பதை அறியவும், அவர் வேடிக்கைக்காக சொல்லியிருக்கலாம். ஹதீஸ்களை சேகரித்த பெரியவர்கள் இதனை எழுதியும் வைத்துள்ளனர், எதிர் கால சந்ததிகளுக்கு உதவும் என்பதால். இந்த ஹதீஸினால் என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம், இப்படி கேட்பதாக இருந்தால், முஹம்மது செய்த அனேக காரியங்களைப் பற்றி கேட்கவேண்டிவரும்.

ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதால் என்ன பயன்?

ஆண்கள் தங்கத்தை அணியக்கூடாது, வெள்ளியை மட்டுமே அணியவேண்டும் என்ற கட்டளையினால் என்ன நனமை?

தங்கம் அணிவதை விட வெள்ளியை ஆண்கள் அணிவதினால் அதிக நன்மை எப்படி கிடைக்கும்?

"இசை" கூடாது என்றுச் சொல்வதினால் என்ன நன்மை உண்டாகப்போகிறது?

நாய்களை வெறுத்து தூரப்படுத்துவதினால் என்ன நன்மை உண்டாகும்?

மனிதர்கள் வெறும் தங்கள் வலது கையினால் மட்டும் சாப்பிடவேண்டும், இடது கையினால் சாப்பிடக்கூடாது என்ற கட்டளை எந்த நன்மையைத் தரப்போகிறது?

எல்லா இஸ்லாமியர்கள் தாங்கள் சாப்பிட்ட பிறகு தங்கள் விரல்களை நக்கவேண்டும் அல்லது வாயினால் உருஞ்சி சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையினால் என்ன நன்மை?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஷரியா சட்டம் தான் நடுநிலையாக இருக்கவேண்டும், சர்வ அதிகாரமும் படைத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டளைகளினால், இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்? இஸ்லாமியர்கள் இயந்திரங்களைப் போல இஸ்லாமை கேள்வி கேட்காமல் பின்பற்ற உற்சாகப்படுத்தப்படுகிறார்கள், குர்‍ஆனை கேள்வி கேட்கவிரும்புவதில்லை, "உங்களை பாதிக்கும் படியாக, கேள்விகளை கேட்கவேண்டாம்" என்று சொல்லப்படுகிறார்கள்.

FrontPage: முஹம்மதுவின் செக்ஸ்/பாலுறவு வாழ்க்கையைப் பற்றி இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டவைகள் என்ன என்று சிறிது சொல்லுங்களேன்.

Botros: உரையாடுவதற்கு இது எனக்கு மிகவும் தர்மசங்கடமான தலைப்பாகும். இந்த விவரங்களை இஸ்லாமியர்கள் கேட்டால் அவர்களின் மனது வேதனை அடையும் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும், அவர்கள் மீதுள்ள என் அன்பின் காரணமாக நான் இவைகளை சொல்லவேண்டி வருகிறது. ஆனால், என்ன செய்யமுடியும், சுகம் கிடைக்கவேண்டுமானால், முதலில் சிறிது வலியும் வேதனையும் இருக்கத்தானே செய்யும், அப்போது தான் காயம் ஆரும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய நூல்களின் ஆதாரங்களின் படி, முஹம்மது ஒரு வழி தவறிய பாலுணர்வு கொண்ட நபர் ஆவார்.

· அவர் சிறுமிகளின் மற்றும் சிறுவர்களின் நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.

· அவர் பெண்களின் உடைகளை அணிந்துக்கொள்வார் (இந்த நிலையிலும் அவருக்கு வெளிப்பாடுகள் வரும்).

குறைந்த பட்சம் அவருக்கு 66 மனைவிகள் இருந்தனர். சில நேரங்களில், அதாவது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளும்படி அல்லாஹ் சிறப்பான வெளிப்பாடுகளை அனுப்புவார். மற்றும் வேறு எந்த ஒரு முஸ்லீமுக்கு இல்லாத அளவிற்கு மனைவிகளை வைத்துக்கொள்ளும் படி இவருக்கு சிறப்பு வெளிப்பாடுகள் இருந்தன. இவர் எப்போதும் பாலுணர்வு எண்ணங்களாலேயே எப்போதும் ஆட்கொள்ளப்பட்டு இருந்தார். ஒரு முறை "பேசும் கழுதையிடம் இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ‍ கழுதையே உனக்கு செக்ஸ் என்றால் பிடிக்குமா?" என்பது தான். இவர் அல்லாஹ்வின் சொர்க்கத்தை ஒரு பாலுணர்வு நிரம்ப வழியும் இடமாக சித்தரிக்கிறார், சில மிகப்பெரிய இஸ்லாமிய விரிவுரையாளர்களின் கருத்துப்படி, முஸ்லீம்கள் சொர்க்கத்தில், நாள் முழுவதும் கன்னிப்பெண்களோடு உடலுறவு கொள்வதிலேயே ரொம்பவும் பிஸீயாக இருப்பார்களாம். அவர் ஒரு மரித்த பெண்ணோடும் உடலுறவு கொண்டுள்ளார். இன்னும் இப்படி அனேக வெட்கப்படக்கூடிய விஷயங்களை அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். மறுபடியும் நான் அழுத்திச் சொல்கிறேன், இவைகளை நான் சொல்லவில்லை, இஸ்லாமின் சொந்த நூல்களே அவரைப் பற்றி இவைகளைச் சொல்கின்றன. ஆனால், அரபி பேசாத இஸ்லாமியர்களுக்கு இவைகள் தெரிவதில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட புத்தகங்கள் அரபியிலிருந்து வேறு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்படவே இல்லை. ஜிஹாத் வாட்ச் (http://www.jihadwatch.org/) என்ற தளத்தில் எழுதும் ஒருசில கதா நாயகன்களுக்கு தவிர மற்றவர்களுக்கு இவைகள் தெரியவாய்ப்பில்லை.



FrontPage: ஆமாம், அந்த தளம் நம்முடைய நண்பர் ராபர்ட் ஸ்பென்சர் அவர்களின் தளமாகும்.

ஆனால், இங்கே தான் முக்கியமான விவரம் உள்ளது. இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் சொல்கிறீர்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், இந்த பிரச்சனை நீங்கள் சொல்வதினால் அல்ல, இந்த விவரங்கள் அனைத்தும் இஸ்லாமிய ஆதார நூல்களிலேயே இருக்கின்றது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது. இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட விஷயங்களினால் அதிர்ச்சி அடைந்தால் அவர்களே தங்கள் இஸ்லாமிய நூல்களை படித்து தெரிந்துகொள்ளட்டும், அல்லது வேறு ஏதாவது செய்துக்கொள்ளட்டும். இந்த விவரங்களை யார் எழுதினார்கள்? ஏன் எழுதினார்கள் என்று அவர்களே ஆராய்ச்சி செய்யட்டும், அவைகள் உண்மையென்றோ அல்லது பொய் என்றோ விளக்கிவிடட்டும்.

இங்கு முழு பிரச்சனையும் நீங்கள் சொல்வதினால் அல்ல, அதற்கு பதிலாக இஸ்லாமிய நூல்களே இப்படி சொல்வதினால் தான் உள்ளது.

Botros: இவைகள் எல்லாம் எங்கேயிருந்து ஆரம்பமாகிறது? குர்‍ஆன் 33:37ன் படி முஹம்மது தன் மருமகளையே திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது, இந்தப் பெண் மீது தான் அவர் மோகம் கொண்டு இருந்தார். சில வசனங்களுக்குப் பிறகு, குர்‍ஆன் 33:50ல், உலகத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அப்பெண் தன்னை முஹம்மதுவிற்கு அர்பணித்தால் அவளோடு உடலுறவு கொள்ள அல்லாஹ் முஹம்மதுவிற்கு அனுமதி அளிக்கிறார். இந்த சலுகை, அனுமதி முஹம்மதுவிற்கு மட்டுமே தான், வேறு யாருக்கும் இல்லை. இப்படி தன் மோக இச்சைகளை நிறைவேற்ற வெளிப்படும் அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் அடிக்கடி வருவதினால், அவரின் சிறுமி மனைவி ஆயிஷா முஹம்மதுவிடம் இவ்வாறு கூறுவாராம்: "உங்கள் இறைவன் உங்கள் ஆசைகளை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றுகிறார்". மற்றும் தன்னை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு, போரில் பிடிபடும் எந்த இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருந்தாலும், அவளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள முஹம்மது அனுமதி அளித்துள்ளார் (குர்‍ஆன் 4:3). இந்த விவரங்கள் வெறும் குர்‍ஆனிலிருந்து வந்தவைகள் மட்டுமே. இன்னும் ஹதீஸ்களிலும், அவரது வாழ்க்கை சரிதைகளிலிருந்தும் அவரது பாலுணர்வு விவரங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால், அது மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதற்காகவே, நான் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முஹம்மதுவின் பாலுணர்வு நடத்தைகள் பற்றி விளக்கியுள்ளேன், அவைகளில் இவைகள் அடங்கும், அதாவது,

· செத்துப்போன பெண்ணோடு முஹம்மது தூங்கியது,

· மாதவிடாய் இருக்கும் பெண்ணிலிருந்து வரும் இரத்த வாடையை அவர் முகர்ந்துப்பார்த்தது,

· பெண்களின் உடைகளை அவர் அணிந்துக்கொண்டு இருந்தது போன்றவைகளைச் சொல்லலாம்.

ஜிஹாத் வாட்ச் தளம் அனேக இந்த சிகழ்ச்சிகளை விவரங்களை மொழியாக்கம் செய்துள்ளது (http://www.jihadwatch.org/archives/025511.php).

FrontPage: உங்களின் அனேக வீடியோக்களில் மிகவும் பிரபலமானது, உங்களின் 10 கோரிக்கைகள் பற்றியது. http://www.youtube.com/watch?v=4HXX2fO8pM4

உங்களின் இந்த ஊழியங்களினால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Botros: இறைவன் தனக்காக என்னை பயன்படுத்துவதினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹயா தொலைக்காட்சி நிலையத்திற்கும் எனக்கு தினமும் கணக்கிலடங்கா ஈமெயில்களை வருகின்றன, அவைகள் இஸ்லாமியரிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களிடமிருந்து வருகின்றன. எங்கள் நிகழ்ச்சிகள‌ உலகத்தில் கோடிக்கணக்கான அரபி பேசும் நபர்களை சென்று அடைகிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் என் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது, முக்கியமாக சௌதி அரேபியா நாட்டில் என் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது, இருந்தாலும் அங்குள்ளவர்கள் என் நிகழ்ச்சிகளை எப்படியாவது பார்த்துவிடுகின்றனர்.

FrontPage: உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் என்ன?


Botros: பெரும்பான்மையாக நல்ல பின்னூட்டங்கள் வருகின்றன, முக்கியமாக இஸ்லாமிலிருந்து தாண்டி, கிறிஸ்தவத்திற்கு வந்தவர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வருகின்றன. இன்னும் ஒரு சில மெயில்கள் மிகவும் கோபத்தோடும், வெறுப்போடும் வருகின்றன. எனக்கு நல்ல பின்னூட்டங்கள் வருகின்றனவா அல்லது கெட்ட பின்னூட்டங்கள் வருகின்றனவா என்பது கேள்வியில்லை, அடிமைகளாக உள்ள இஸ்லாமியர்களின் மீதுள்ள நிபந்தனையற்ற அன்பு தான் என்னை உற்சாகப்படுத்துகிறது.

FrontPage: முஸ்லிம்கள் கிறிஸ்துவிடம் வருகிறதற்கு நீங்கள் ஒரு பாலமாக இருக்கிறீர்கள், அப்படித்தானே?

Botros: இப்படி தான் அவர்களும் சாட்சி கூறுகிறார்கள். அனேகர் என்னிடம் "நான் ஒரு தந்தையாக" அவர்களுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள், இப்படி நான் அழைக்கப்படுவதற்கு நான் சந்தோஷப்படுகிறேன், ஆனால் நம் அனைவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார், அவர் தான் இறைவன். ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், ஒரு இஸ்லாமியர் என்னிடம் தொடர்பு கொண்டு கண்ணீரோடு கூறினார், "தான் ஒரு முஸ்லிமாக இருந்த போது, என் தலையை வெட்டிவிடவேண்டும் கொல்லவேண்டும் என்று விரும்பியிருந்தாராம், இதனால், நான் எங்கே இருக்கிறேன் என்பதை அறிந்துக்கொள்ள பல நாட்கள் முயற்சி எடுத்தாராம். இதனால், என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பாராம், இப்படி பார்க்கும் போது தனக்கு ஏதாவது துப்பு கிடைக்குமா? நான் எங்கே இருக்கிறேன் என்று விவரம் தெரியுமா என்று பார்ப்பாராம்”. ஆனால், அற்புதம் நிகழ்ந்தது: இப்படி காலம் செல்லச் செல்ல, நான் சொல்வது அனைத்தும் இஸ்லாமிய நூல்களிலேயே இருக்கிறது, என்பதை அவர் அறிந்துக்கொண்டார். என்னை வெறுப்பதை அவர் நிறுத்திவிட்டார். கடைசியாக இயேசுவிடம் வந்தும் விட்டார். இப்படிப்பட்ட சாட்சிகள் தான் நான் தொடர்ந்து இந்த ஊழியத்தைச் செய்ய உற்சாகம் தருகிறது.


FrontPage: உங்களின் பார்வையில் முஹம்மது எப்படிப்பட்டவர்?

Botros: இஸ்லாமிய புத்தகங்களிலிருந்து இதற்கு பதில் எனக்கு கிடைத்தது. தற்கால முஜாஹிதீன் இயக்கத்தின் நாயகனாக கருத்தப்படும், இபின் தமிய்யா என்பவர் "ஒருவர் நபியாக இருப்பதற்கு" என்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். அவரது கூற்றுகளில் ஒன்று, ஒருவரை நபி என்று தெரிந்துக்கொள்வதற்கு அவரது வாழ்க்கை சரிதையை படிக்கவேண்டும் என்றுச் சொல்கிறார், இயேசு கூட இப்படி கூறியுள்ளார் "அவர்களின் கனிகளின் மூலமாக அவர்களை நீங்கள் அறியமுடியும்" என்பதாகும். இபின் தமிய்யாவின் அறிவுரையின் படி, நான் அனேக நிகழ்ச்சிகளை முஹம்மதுவின் சரிதைக்காக ஒதுக்கினேன், இதன் மூலம் அறிந்துக்கொண்டது என்னவென்றால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், முஹம்மது ஒரு நபி அல்ல என்பதாகும். முஹம்மதுவின் கனி "மரணம், அழிவு மற்றும் பாலுணர்வு/ஆபாசமாகும்".
உண்மையில், முஹம்மதுவே தனக்கு ஒர் ஜின் பிசாசு பிடித்துவிட்டது என்று நம்பினார், ஆனால், அவரது மனைவி கதிஜா அவர்கள் தான், "இல்லை இல்லை உன்னை சந்தித்தது, ஜின் அல்ல, அவர் காபிரியேல் தூதன்" என்று சொன்னார்கள். ஆனால், பிறகு தான் முஹம்மது ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதிக்கு சமம் என்றுச் சொன்னார். இதனால், கதிஜா அவர்கள் சொன்னது தவறானது, முஹம்மது முதலில் நினைத்தது தான் சரியானது என்பது நிருபனமானது.

FrontPage: பூட்ரோஸ் அவர்களே இன்று எங்களோடு உரையாடிமைக்காக நன்றி.

Botros: நன்றி, உங்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

Thanks FrontPage Magazine:
Source: http://frontpagemag.com/readArticle.aspx?ARTID=35073

Thursday, July 9, 2009

அல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

 


ல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

அல் ஜன்னத்தின்


"யூதர்கள் ஜாக்கிரதை" என்ற எச்சரிப்பிற்கு ஒரு எச்சரிக்கை


முன்னுரை:



எனக்கு ஒரு நண்பர் மார்ச் மாத அல்ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் 17ம் பக்கத்தை ஸ்கான் செய்து படமாக அனுப்பினார். இந்த 17ம் பக்கத்தில் "யூதர்கள் ஜாக்கிரதை" என்ற தலைப்பில், நான்கு வலைத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு "இத்தளங்களை யூதர்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமுக்கு எதிரான பல விவரங்களை அவர்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்கள், மற்றும் யூதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதியிருந்தார்கள். யூதர்கள் பற்றி இஸ்லாமியர்கள் எழுதியிருந்தால் எழுதட்டும் என்று விட்டுவிடலாம், ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நான்கு தளங்களில் ஒரு தளம் "ஆன்சரிங் இஸ்லாம்" தளமாகும். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பிரிவில் "தமிழ் பேசும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒருசிலராக சேர்ந்து" கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறோம்.


ஆன்சரிங் இஸ்லாம் தளம், யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கை சொன்னதால், அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு என் பதிலையும், அதே நேரத்தில், அவர் குறிப்பிட்ட இதர தளங்கள் பற்றி ஒரு சில வரிகளையும் எழுதலாம் என்று எண்ணுகின்றேன், அதாவது மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் ஒரு விவரத்தைச் சொல்லும் போது, குறைந்த பட்சம் பட்டியலிடும் அத்தளங்களை ஒரு முறையாவது பார்த்துவிட்டு எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இக்கட்டுரையில் அல் ஜன்னத் பத்திரிக்கை செய்த வேடிக்கையை தந்திரத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.


இப்பொழுது, அல் ஜன்னத் பத்திரிக்கை 17ம் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்.



யூதர்கள் ஜாக்கிரதை




யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள். சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



இந்த முகவரித் தளங்களில் வருகின்ற எந்தச் செய்தியானாலும் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. இதில் நிறைய தகவல்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்கள் இதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் யூத சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.



Source: அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17
emphasis mine


ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17




1. முதலாவதாக‌, யூதர்கள் மீது குற்றச்சாட்டுகளை குவிக்கிறது -அல் ஜன்னத் பத்திரிக்கை:


அல் ஜன்னத் பத்திரிக்கையின் கீழ்கண்ட தகவலுக்கு வேறு ஒரு கட்டுரையில் விவரிக்கலாம் என்று விரும்புகிறேன், ஆகையால், இந்த கட்டுரையில், "ஆன்சரிங் இஸ்லாம் தளம்" பற்றிய விவரத்திற்கு மட்டுமே பதிலை அளிக்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள்.



2. முஸ்லீம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்


இஸ்லாமிய உலகில் எது நடந்தாலும் சரி, அதற்கு யூதன் தான் காரணம், இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமை யாராவது விமர்சித்தால் உடனே, அதன் பின்னால் யூதன் இருப்பான், முஸ்லீம்களுக்கு எங்கும் யூதன் எதிலும் யூதன், தூணிலும் யூதன் துரும்பிலும் யூதன் இருப்பான்.


இந்த நிலை தொடருமானால், ஒரு இஸ்லாமியரின் வீட்டில் பிரியாணில் இருக்கும் கறி வேகவிலையானாலும் சரி, அதற்கு காரணம் யூதன் தான் என்று முஸ்லீம்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. (இதில் சில விஞ்ஞான விவரங்களையும் இஸ்லாமியர்கள் தருவார்கள், அதாவது இந்தியாவில் வளர்க்கும் ஆடுகளுக்கு தரும் மருந்துக்கள், ஊசிகள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றன, அதனால் தான் கறி வேக வில்லை என்று ஆவேசமாக சொல்லும் இஸ்லாமியர்களும் இருப்பார்கள்.)


3. ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூத தளமா?


அல் ஜன்னத் நான்கு தளங்களில் பெயர்களை குறிப்பிட்டு, அவைகள் யுத தளங்கள் என்றுச் சொல்கிறது. அவைகளில் ஆன்சரிங் இஸ்லாம் தளம் பற்றிய விவரத்தை இப்போதுச் சொல்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.




w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



நான் அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க விரும்புவது:


1) நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் உள்ள கட்டுரைகளில் ஒரு சில கட்டுரைகளையாவது படித்தீர்களா? குறைந்த பட்சம் தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகளையாவது படித்ததுண்டா?


2) அப்படி படித்து இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் எத்தனை கட்டுரைகள் உங்களுக்கு, இந்த தளம் ஒரு "யூத தளம்" என்ற எண்ணத்தைக் கொடுத்தது? உங்கள் கணிப்பு/நம்பிக்கை சரியாக இருந்தால், கட்டுரைகளின் தொடுப்புக்களை பெயர்களைத் தரமுடியுமா? ஏனென்றால், நான் அந்த தளம் ஒரு கிறிஸ்தவ தளம் என்பதாலேயே ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து, பதிக்கிறேன். முக்கியமாக கடந்த பல ஆண்டுகளாக நான் அத்தளத்தின் கட்டுரைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சந்தேகம் படும்படி இருக்கின்ற கட்டுரைகளின் பெயர்களை கொடுத்தால், எனக்கு உதவி செய்பவர்களாக இருப்பீர்கள், இதனை செய்யமுடியுமா?


3) அல்லது, இப்படி எதுவுமே படிக்காமல், யாரோ சொன்னார்கள் ஆகையால் நானும் சொல்கிறேன் என்பதாக சொல்கிறீர்களா? ஒரு வேளை யூதனின் பெயரை பயன்படுத்தினால் தான் ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளை முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்தீர்களோ?



ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன, தமிழில் 50க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன? இவைகளில் எந்தெந்த கட்டுரைகளை யூதர்கள் எழுதினார்கள்/எழுதியிருப்பார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?



4. இஸ்லாமுக்கு பதில் சொல்ல/விமர்சிக்க "யூதன்" தான் வேண்டுமா?


ஒருவர் இஸ்லாமை விமர்சித்தால், இஸ்லாமின் உண்மை முகத்தை உலகம் அறியும் படி எழுதினால், அவன் நிச்சயமாக யூதனாகத் தான் இருக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையா அல் ஜன்னத்திற்கு?



ஒருவன் யூதனாக இருக்கட்டும், கிறிஸ்தவனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும் அல்லது நாத்தீகனாக இருக்கட்டும், ஒரு மதம் அல்லது மார்க்கம் என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வான்? (இன்னும் அந்த மார்க்கத்தை ஸ்தாபித்தவரின் நடத்தையில் ஆபாசமோ அல்லது வன்முறையோ இருந்தால், சொல்லவேண்டியதில்லை கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது).



உலக நியதிக்கு எதிராகவும், சமுதாயத்தில் மனிதனுக்கு தீமை விளைவிக்கும் சட்டங்களை கொண்டுள்ள இஸ்லாமை விமர்சிக்க ஒரு யூதன் தான் வரவேண்டும் என்பதில்லை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், சிந்திக்கும் திறமையுள்ள ஒவ்வொருவனும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம்.



இந்த நிலை இஸ்லாமுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும், இந்துத்துவத்திற்கும் பொருந்தும் அவ்வளவு ஏன் நாத்தீகனுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் நாத்தீகர்களாக இருந்தால், அவர்களின் வளர்ந்த பிள்ளைகளும் நாத்தீகர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தனக்கு சரி என்று படுகின்ற வழியை மனிதன் பின்பற்றுவான்.



எனவே, எதற்கெடுத்தாலும் யூதன் யூதன் என்றுச் சொல்வதை விட்டு, நேர்மையானவர்களாக குற்றங்களை முன்வைத்தால், உலகம் உங்களை நம்பும்.


5. கிறிஸ்தவ போர்வையில் "யூதன்" தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

 

ஆன்சரிங் இஸ்லாம் யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஆதாரங்களை நீங்கள் தரவேண்டுமே?


ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரைகளை படித்துப்பாருங்கள், எத்தனை கேள்விகள், பதில்கள் மறுப்புக்கள், மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்கள் மறுப்புகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மேசியாவாகிய இயேசுவைக் குறித்த கேள்விகளுக்கு பதில்கள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன.


இக்கட்டுரைகளை படிப்பவன் கண்டிப்பாக "இக்கட்டுரைகளை யூதர்கள் தான்" எழுதினார்கள் என்பதை நம்பமாட்டான், ஏனென்றால்,


இஸ்லாமை விமர்சிக்கிறேன் என்பதற்காக ஒரு யூதன் கிறிஸ்தவத்திற்கு ஆதாரவாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி பதிப்பானா?


நீங்கள் நினைப்பதுபோல செய்வதற்கு யூதர்கள் என்ன முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?


"வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மேசியா இயேசு அல்ல", என்றுச் சொல்லும் யூதன், இயேசு தான் மேசியா (மஸீஹா) என்பதற்காக தன் ஆயிரக்கணக்கான மணித்துளிகளை இதற்காக செலவிடுவானா? பணத்தை செலவிடுவானா?


6. யூதன் யூதனாகவே இஸ்லாமை விமர்சிக்க/மறுப்புக்கள் எழுத அவனுக்கு என்ன தடை?


ஒரு யூதன் யூதனாக இருந்து இஸ்லாமுக்கு பதில்கள் தருவது சுலபம், ஆனால், கிறிஸ்தவ போர்வையில் அவன் பதில்கள் கொடுத்தால், அது மிகவும் கடினம்.


ஏனென்றால், யூதன் யூதனாக இருந்து பதில்கள் அளித்தால், அவன் பழைய ஏற்பாடு அல்லது யூத சட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்களை கொடுத்தால் போதும், ஆனால், அவன் கிறிஸ்தவனாக தன்னை அடையாளம் கட்டிக்கொண்டு பதில்கள் எழுதினால், அவனிடம் கேட்கப்படும் கேள்விகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலிருந்தும் கேட்கப்படும்.


ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் சென்று பாருங்கள், எத்தனை பதில்கள் மறுப்புக் கட்டுரைகள் புதிய ஏற்பாட்டைப் பற்றியும், இயேசுவின் சீடர்கள், அப்போஸ்தலர் பவுல் போன்றவர்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.


யூதன் யூதனாக தன்னை காட்டிகொண்டால் இந்த புதிய ஏற்பாட்டிலிருந்து பதில்களை கொடுக்கவேண்டிய கடமை இருக்காதல்லவா? அல் ஜன்னத் ஆசிரியர்களே, இப்போதாவது சிறிது புரிகின்றதா? உங்கள் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வந்து சிந்துத்துப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்.


7. கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமை விமர்சிக்கக்கூடாது?


இதுவரை, ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூதர்களால் நடத்தப்படும் தளம் அல்ல, இதற்கு அவசியமே யூதர்களுக்கு இல்லை என்பதை விளக்கினேன், இப்போது, ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஏன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படக்கூடாது என்பதை விளக்குகிறேன்.


7.1 யூதர்களை விட இஸ்லாமை விமர்சிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை அதிகம்:


யூதர்களை விட கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க, முஹம்மது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர, விமர்சிக்க உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், முஹம்மது இயேசுவை நபி என்றுச் சொன்னார், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்தார், குர்‍ஆனில் எழுதியும் வைத்துவிட்டார், கிறிஸ்தவத்தை விமர்சித்தார். ஆக, இஸ்லாமுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டாமா? உங்களுக்கு பதில் சொல்ல கிறிஸ்தவர்களுக்கு அதிக விவரங்கள் உண்டு, அதே போல, இஸ்லாமின் தரத்தை சரிபார்க்க, தராசில் நிறுத்தி தரத்தை பரிசோதிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு.


தன்னைப் பற்றி பைபிளில் உள்ளது என்று முஹம்மது கூறினார், அவர் சொல்வது உண்மையா இல்லையா என்று நாங்கள் சோதிக்கவேண்டாமா? ஆராய்ச்சி செய்யவேண்டாமா? முஹம்மது உண்மையிலேயே ஒரு நபி தானா என்று சோதிக்கவேண்டாமா? பைபிளை விமர்சிக்க குர்‍ஆனுக்கும் முஹம்மதுவிற்கும் தகுதி உள்ளதா என்று சோதித்துபார்க்க வேண்டாமா? இஸ்லாம் சொல்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லையே!


இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டால், யூதர்களுக்கு வெறும் பழைய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கொடுத்தால் போதும், ஆனால், நாங்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும். "பைபிள் கூறும் நபிகள் வரிசையில் நான் கடைசியானவன்" என்று முஹம்மது சொன்னதாலும், பைபிளின் மீது "இஸ்லாம்" ஆதாரப்பட்டு இருப்பதாலும், எங்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க அதிகாரம் உண்டு.


தங்கத்தை சுத்தம் செய்ய நெருப்பில் சுடவேண்டும், அப்படி செய்யும் போது, அசுத்தம் நீங்கும், அப்போது தான் சுத்தப்பொன்னாக அது மாறும், எனவே, இஸ்லாமை நாங்கள் நெருப்பில் போட்டு சுடுகிறோம், உண்மையிலேயே, உங்கள் நபி ஒரு உண்மை நபியாக இருந்தால், சுத்த பொன்னாக மாறுவார். நெருப்பிலே போட்டது தங்கம் என்று நினைத்து கரித்துண்டை போட்டால், அது எரிந்து சாம்பலாகி விடும். அக்கினி எல்லாவற்றையும் சோதித்தறியும், உண்மை கண்டிப்பாக வெளியே வரும்.


ஆனால், இஸ்லாமை விமர்சிக்கும் போது, அதற்கு எதிராக கேள்விகள் கேட்கப்படும் போது, முஹம்மதுவின் நடத்தையை வெளிச்சத்தில் வைத்து சரி பார்க்கும் போது, இஸ்லாமியர்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது? ஏன் கோபம் வரவேண்டும்? தங்கமாக இருந்தால், இன்னும் சுத்தமாகுமே, இஸ்லாம் ஒரு தங்கமல்ல அது ஒரு கரித்துண்டு என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகமோ?


எனவே, நான் உங்களை கேட்டுகொள்கிறேன், ஆன்சரிங் இஸ்லாம் ஒரு யூத தளம் என்ற பொய்யை சொல்வதை விட்டுவிடுங்கள், அல்லது அதற்கான ஆதாரங்களைத் தாருங்கள்?


மருந்து மாத்திரைகளை போல "பொய்கள் ஒரு கால அவகாச தேதியோடு (Expiry Dates)" தான் வரும் . அந்த மாத்திரையின் காலம் முடிந்துவிட்டால், அந்த மாத்திரை வேலை செய்யாது, மட்டுமல்ல‌ அவைகள் எதிர்விளைவுகளை கொண்டுவரும். அது போல, இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வந்த பொய்களுக்கு முடிவு தேதி (Expiry Date) நெருங்கிவிட்டது. இன்னும் அந்த மாத்திரைகளை பயன்படுத்தினால், பயன்படுத்துபவருக்கு பக்க விளைவுகளை கொடுக்கும், 14 நூற்றாண்டுகளாக குணமாக்கிய அதே மருந்து இப்போது விஷமாக மாறும். பொய்களை அனேக நாட்கள் வாழவைக்கவும் முடியாது, அதே போல, உண்மைகளை அனேக நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கவும் முடியாது.


ஆக, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், இஸ்லாமை கேள்வி கேட்கும் உரிமை உண்டு, இது எங்கள் பிறப்புரிமை. இதே போல மற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தை, இதர மார்க்கங்களை கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமை உண்டு.


இனி அல் ஜன்னத் கொடுத்த இதர தளங்கள் யூத தளங்களா என்று பார்ப்போம்.



அபவுட் இஸ்லாம் டாட் காம் தளம்: (www.aboutislam.com)


இந்த தளத்தின் பெயரை கொடுத்துப் பார்த்தால், அது "http://www.perfumesofarabia.com/" என்ற தளத்தைக் காட்டுகிறது. அதாவது, அரேபிய பெண்களின் வாசனை திரவியங்கள் (சென்ட்) பற்றிய தளம் வருகிறது (Redirected to perfumeofarabia site). இந்த தளம் ஒரு வியாபார தளமாக வாசனை திரவியங்களை விற்கும் தளமாக‌ இருக்கிறது.


ஒரு வேளை, இந்த தளம் முதலாவது ஒரு யூதர்களின் தளமாக (அல் ஜன்னத் ஆராய்ச்சி செய்து சொன்னது போல) இருந்து, பிறகு அவர்கள் தங்கள் டொமைனை (domain) விட்டுவிட்டு தங்கள் தள கட்டுரைகளை நீக்கிவிட்டு சென்று இருப்பார்கள், என்ற சந்தேகத்தில் வெப் ஆர்கவ்வில் (Web Archive) சென்று பார்த்தேன்.


இந்த பக்கத்தை சொடுக்கி பார்க்கவும்: http://web.archive.org/web/*/http://www.aboutislam.com


இந்த தொடுப்பில், "About Islam" தளம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை முறை கட்டுரைகள் பதிக்கப்பட்டது போன்ற விவரங்களை காணலாம்.


இதன் படி "About Islam" ஒரு கிறிஸ்தவ தளமாக ஜனவரி மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனேக கிறிஸ்தவ இஸ்லாமிய கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.


பார்க்கவும்: http://web.archive.org/web/19990117021402/http://www.aboutislam.com/


பல ஆண்டுகளுக்கு பிறகு, கிறிஸ்தவ தளமாக இருந்த இந்த தளம், இஸ்லாமிய தளமாக மாறியுள்ளது. இஸ்லாமை தழுவுகிறவர்கள் இந்த தளப்பெயரை வாங்கி தங்கள் தளத்தோடு இணைத்துள்ளார்கள்.


பார்க்கவும்: http://web.archive.org/web/20071023173418/www.convertstoislam.org/


www.convertstoislam.org என்ற தளம் www.aboutislam.com என்ற டொமைனை வாங்கி. பல ஆண்டுகள் பயன்படுத்தி மறுபடியும் விற்றுவிட்டு இருக்கும், இன்று www.aboutislam.com என்ற தளத்தை சொடுக்கினால், நமக்கு அரேபிய பெண்களின் வாசனை தரவியங்கள் என்ற வியாபார தளம் தான் வருகிறது. இவைகள் தான் www.aboutislam.com தளப் பெயரைப் பற்றிய மேலோட்ட விவரங்களாகும், இதனை வெப் ஆர்கவ்வில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் (http://web.archive.org/web/*/http://www.aboutislam.com).



அல் ஜன்னத் ஆசிரியருக்கு கேள்விகள்:


2009ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி, இந்த தளம் www.aboutislam.com பற்றி எச்சரிக்கை செய்தியை உங்கள் பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒருமுறையாவது இணையத்தில் இந்த தளத்தை சொடுக்கி பார்த்தீர்களா? பார்த்து இருந்தால், இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்?


எந்த ஆதாரத்தை வைத்து, இந்த தளம் யூதர்கள் நடத்தும் தளம் என்று எழுதினீர்கள்?


உங்கள் பத்திரிக்கையை படிக்கும் வாசகர்க‌ள் உங்களின் நேர்மையை கவனிக்கட்டும். மற்ற மார்க்க விஷயங்களை எழுதுவதில் இவ்வளவு நேர்மையற்ற விவரங்களை தரும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய விவரங்களை சொல்வதில் எவ்வளவு விஷயங்களை மறைப்பீர்கள்! இறைவனுக்கே வெளிச்சம்.



அல்லாஹ் டாட் காம் தளம் (www.allah.com)



அடுத்ததாக, நீங்கள் "அல்லாஹ் டாட் காம்" என்ற தளத்தைப் பற்றி எழுதினீர்கள்! இந்த தளமும் யூதர்களின் தளம் என்று எழுதிவிட்டீர்கள். ஆனால், இந்த தளத்தை சொடுக்கிப்பார்த்தால் இது ஒரு "ஷியா முஸ்லீம்களின்" தளம் போல தென்படுகிறது.



இந்த தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே கீழ் கண்ட வரிகள் கொட்டை எழுத்துக்களில் தென்படுகிறது.



THE FIRST AND LARGEST SITES ON IMAN, ISLAM, IHSAN

இந்த தளத்தை நீங்கள் பார்வையிட்டீர்களா? என்று நான் கேட்க மாட்டேன், ஏனென்றால், இதனால் உபயோகமில்லை.


இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தை ஒருமுறை பார்வையிட்டால், அனேக இஸ்லாமிய அறிஞர்களின் படங்கள் (அஹமத் தீதத் அவர்கள் உட்பட), இஸ்லாம் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள் என்று அனேக தொடுப்புக்கள், புத்தகங்கள், குர்‍ஆன் என்று அனேக விவரங்கள் உள்ளன.


சிந்திக்கும் எந்த மனிதனும் இந்த தளத்தைக் கண்டு, இது யூதர்களின் தளம் என்றுச் சொல்லமாட்டான்.


குறிப்பு: அல் ஜன்னத் குறிப்பிட்ட தளம் www.allah.com இல்லை, அது www.allah.org என்று பதில் சொல்ல அவசரப்படாதீர்கள் இஸ்லாமியர்களே, இந்த அல்லாஹ் டாட் ஓஆர்ஜி தளமும் ஒரு இஸ்லாமிய தளமாகும் என்பதை மனதில் கொள்ளவும்.


இப்போது அடுத்த தளத்திற்குச் செல்வோம்…



த குர்‍ஆன் தளம் (www.thequran.com)



அடுத்ததாக நீங்கள் "த குர்‍ஆன் டாட் காம்" என்ற தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இதுவும் யூதர்களின் தளம் என்று எழுதியிருந்தீர்கள். நான் இந்த தளத்தையும் பார்வையிட்டேன்.


இந்த தளத்தில் ஆங்கிலம் உட்பட அனேக குர்‍ஆன் மொழியாக்கங்கள் தரப்பட்டு இருந்தன (Arabic, Shakir (English), yusufali (English), Pickthal (English), Al-Hilali (English), Spanish, French and Turkish).


இந்த தளத்தில் குர்‍ஆன் பிழைகள் (Quranic Errors), இரத்து செய்யப்பட்ட வசனங்கள் (Abrogated Verses) மற்றும் ஒரே மாதிரியாக அடிக்கடி வரும் வசனங்கள் (Repeated Verses) என்று ஒரு சில பக்கங்கள் இருக்கின்றன.


இந்த தளம் கண்டிப்பாக ஒரு இஸ்லாமிய தளம் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால், இந்த தளம் ஒரு கிறிஸ்தவராலோ கூட ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம்.


குர்‍ஆனின் பிழைகள் என்ற பக்கத்தில் அனேக புதிய ஏற்பாட்டு வசனங்களை குறிப்பிட்டு விவரங்கள் உள்ளன. எனவே, இந்த தளமும் கிறிஸ்தவ தளமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், யூதர்களின் தளம் என்பதற்கு சரியான ஆதாரம் எதுவும் இல்லை.


ஒரு பேச்சுக்காக இந்த ஒரு தளத்தை மட்டும் யூத தளமாக நாம் கருதினாலும், அல்‍ ஜன்னத் குறிப்பிட்ட நாங்கு தளங்களில் மூன்று தளங்கள் யூதர்களின் தளங்கள் இல்லை என்பது மட்டும் உண்மை.




வெட்டு ஒன்று துண்டு மூன்று - அல் ஜன்னத்தின் யுக்தி வேலை செய்யவில்லை




அல் ஜன்னத் பிரசுரித்த விவரங்களின் உண்மை நிலையை நாம் கண்டோம். சில முஸ்லிம்கள் "ஏதோ தெரியாதவிதமாக நடந்துவிட்டது" என்று அல் ஜன்னத்தின் பொய்யுக்கு சாயம் பூசலாம். ஆனால், பல ஆண்டுகளாக இயங்கும் பத்திரிக்கை, இப்படிப்பட்ட விவரங்களைத் தருவது சரியா? இப்படித் தான் எல்லா விவரங்களும் இருக்குமா?



இதில் இவர்களின் (முக்கியமாக முஸ்லிம்களின்) தந்திரமும் தெரியவரும், அதாவது கிறிஸ்தவ தளத்தையும், ஷியா முஸ்லீம்களின் தளத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அவைகள் யூதர்களின் தளம் என்ற பொய்யைச் சொன்னால், தமிழ் முஸ்லிம்களை சுலபமாக முட்டாள்களாக்கி விடலாம் என்று கனவு கண்டது, அல் ஜன்னத் பத்திரிக்கை. ஆனால், அது பகல் கனவாக முடிந்துவிட்டது.



எதெற்கெடுத்தாலும் யூதனை இழுத்தால் போது, முஸ்லிம்களுக்கு அப்படியே கண்கள் சிவக்கும், உடலில் சூடு உண்டாகும், அதனால் இந்த தளங்கள் பக்கமும் தலை வைத்து படுக்கமாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் அல் ஜன்னத் இந்த புதிய வேஷத்தை போட்டது, ஆனால், என்ன செய்யமுடியும், வேஷம் போட்டால் ஒரு நாள் கலையத்தானே வேண்டும்.



ஷியா இஸ்லாமை எதிர்க்கவேண்டுமானால், நேரடியாகவே எதிர்க்கலாம் அல்லவா? ஏன் இந்த யூத வேஷம் போடவேண்டும்?



அல்லாஹ் டாட் காம் என்ற தளத்தின் முதல் பக்கத்தை பார்த்தலோ போதும், அது ஒரு ஷியா தளம் என்பது தெளிவாக விளங்கும். தமிழ் முஸ்லிம்கள் இந்த தளத்தை பார்வையிடக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதற்காக ஒரு கட்டுரையை தனியாக எழுதவேண்டியது தானே! இந்த குறிப்பிட்ட தளம் ஷிய தளமாகும், அந்த தளத்தை யாரும் பார்வையிடவேண்டாம், என்று முஸ்லீம்களுக்கு நேரடியாகச் சொல்லவேண்டியது தானே! ஷியா கோட்பாட்டிற்கு மறுப்புக்களோ/பதில்களோ எழுதவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு ஏன் யூதர்களை அழைக்கிறீர்கள்? இஸ்லாமிய அறிஞர்களே, உங்களின் வேஷம் சிறிது சிறிதாக வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது, இனியும் உங்கள் தந்திரங்கள் வேலை செய்யாது. எவ்வளவு புத்திசாலித் தனமாக நீங்கள் நடந்துக்கொண்டாலும், பொய்யை அதிக நாட்கள் மறைத்து வைக்க முடியாது, என்பதை சொல்லிகொள்கிறேன்.



அல் ஜன்னத்தும் பொய்யும் பித்தலாட்டமும்



அல் ஜன்னத் கீழ் கண்ட வரிகளை யூதர்களுக்கு சூட்டியது, இப்போது இந்த கட்டுரையை படித்த நீங்கள், இந்த வரிகள் அல் ஜன்னத்திற்கு சரியாக பொருந்துவதைக் காணமுடிகிறதா?


யூதர்கள் பற்றி அல் ஜன்னத் கூறியது



பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.



ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஒரு கிறிஸ்தவ தளம், அதன் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு "யூத சாயம்" பூசி, பொய்யையும் பித்தலாட்டத்தையும் மூலதனமாக அல் ஜன்னத் பத்திரிக்கை செயல்படுகிறது. இதற்கு இந்த கட்டுரையில் தரப்பட்ட விவரங்களே போதும்.



அல் ஜன்னத் பத்திரிக்கைக்கு நான் கூறிக்கொள்வது, நீங்கள் யூதர்க்ளை திட்டுங்கள், சபியுங்கள் என்னவாவது செய்துக்கொண்டு போங்கள், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால், கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்தால் பொய்களைச் சொன்னால் மட்டும் சரியான பதில் கண்டிப்பாக தரப்படும்.



நீங்கள் கண்டித்த அதே வரிகளை உங்களுக்குச் சொல்கிறேன், "இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் அல் ஜன்னத் சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்".



இதோடு இன்னும் முடியவில்லை, அல் ஜன்னத் கீழ் கண்ட விதமாக எழுதியுள்ளது,



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.



7ம் நூற்றாண்டிலிருந்து சமுதாயத்திற்கு, உலகிற்கு யாரால் அதிக நன்மைகள் முஸ்லீம்களாலா அல்லது யூதர்களாலா? என்பதைப் பற்றிய தலைப்பை என் சிந்தையில் நிறுத்திக்கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.


Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/aljannath/aljannathjews1




 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்