இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, November 19, 2007

உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா?(குலாம் காதிர் குரைஷி)

இன்றும் இஸ்லாமியர் பலர் மனம் திரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் , 1960 ஆ ம் ஆண்டில் காஷ்மீரைச் சேர்ந்த srinagar பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து சில மாதங்கள் சில நற்செய்திப்பணியாளர்கள் சுவிசேஷத்தை அறிவித்துக்கொண்டு வந்தனர் , நற்செய்தியை கவனித்துக் கேட்டவர்களில் குலாம் காதிர் குரைஷி என்பவரும் ஒருவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை ( MA Lit ) பட்டம் பெற்ற இளைஞர் . எதையும் கவனித்து ஆராய்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர் . ஒரு காரியத்தை உண்மை என்று கண்டால் அதை அவர் ஆமோதிக்கத் தயங்கினதில்லை . நல்ல குடும்ப சூழல்,வசதியான வாழ்க்கை ,கல்வியறிவு , அனுதின தொழுகை அப்பியாசங்கள் இருந்தபோதிலும் வாலிபத்தின் பாவங்களுக்கும் மனதில் ஆழ்ந்து கிடக்கிற குற்ற உணர்வுகளுக்கும் பிராயசித்த வழி தெரியாதனதினாலுண்டான குழப்பங்களுக்கும் விலகிவாழவும் , மீட்பு பெறவும் வழி தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோதுதான் பாரிசுத்த ஆவியானவர் இந்த நற்செய்திப்பணியாளர்கள் அறிவித்த வேதவாக்கியங்கள் மூலம் குரைஷியிடம் பேசத்தொடங்கினார் .

வேதாகமத்தை வாங்கி வாசிக்கலானார்

, அவரது கண்கள் திறக்கப்பட்டன . மதத்தின் பெயரால் அவர் அடிமைபட்டு கிடந்த கட்டுகளிலிருந்து கிறிஸ்துவின் வார்த்தை அவரை விடுதலையாக்கிற்று .கிறிஸ்து இயேசுவே பாவத்திற்கு பாரிகாரம் , அவரால் மட்டுமே மீட்பு , கிறிஸ்து இயேசுவே சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் தர இயலும் என திட்வட்டமாக அறிந்து தன் பாவங்களையும் தன் அறியாமையையும் அறிக்கை செய்து மனந்திரும்பி கிறிஸ்தவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார் .

இரட்சிக்கப்பட்டபின் தேவகிருபையிலும்

, வல்லமையிலும் நிறைந்து கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தார் ,

கிட்டதட்ட ஓராண்டுக்குப்பின் நற்செய்திக்குழுவினர் நடத்திய பெரிய அளவிலான ஒரு திறந்த வெளிக் கூட்டத்தில் தன் சாட்சியை அறிவித்தார்

, அக்கூட்டம் srinagar க்கு 20 மைல் தூரத்தில் நடந்தது .

அக்கூட்டங்களுக்காக ஆயத்தம் செய்யும் போதிலிருந்தே இஸ்லாமிய போதகர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்புகள் வந்தவண்ணமாயிருந்தன

. கடும் எதிர்ப்பு நடுவில் முதல் இரண்டு நாள் கூட்டங்கள் தடங்கலின்றி தேவகிருபையால் நடந்தேறியது .

மூன்றாம் நாள் கூட்டத்தில் குரைஷி

இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தையும் . இயேசு அவருக்கு செய்த நன்மைகளையும் அறிவிக்கவேண்டுமென்று ஆண்டவரால் ஏவப்பட்டார். வழக்கமான பாடல் பகுதியும் ,ஜெப வேளையும் நிறைவேறியவுடன் குரைஷி மேடையில் ஏறி சாட்சி பகரத்தொடங்கினார் ,தன் குடும்ப சூழ்நிலைகளைப் பகிர்ந்துகொண்டு நான் கண்ட இஸ்லாமியர்களில் ஒருவராகிலும் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிருக்கமாட்டார்கள் ஏன் தீர்க்கதரிசி முகமது கூட இந்த அனுபவததை அடைந்திருக்கமுடியாது. குரானில் சொல்லப்பட்டுள்ள இறைவன் இயேசுகிறிஸ்துவிலே தான் வெளிப்பட்டிருக்கிறார் எனவும் கூறினார் . இதைக் கேட்ட உணர்ச்சி வசப்பட்ட சில முஸ்லீம்கள் இவன் இஸ்லாம் மார்கத்தை காட்டிக்கொடுத்தவன் கல்லெறிந்து கொல்லப்படத்தக்க துரோகி என கத்தினார்கள் . இஸ்லாமியர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு பிரசங்கத்தை நிறுத்து இல்லையேல் இங்கேயே உன்னை கொன்றுவிடுவோம் என முழங்கினர்.

ஆனால் குரைஷியோ ஐந்து ஆறு முறை மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்

. அத்துடன் உறுதியான தீர்மானத்துடன் "நீங்கள் என்னைக் கொன்று போட்டாலும் பிராதான துதனுடைய எக்காளம் தொனிக்கிறதை கேட்கிற அந்த நேரத்தில் தானே நான் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்து பரலோகத்திற்கு பறந்து செல்வேன் . உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா ?" என்றும் கெர்ஜித்தார் இதுதான் அவரது சாட்சியத்தின் கடைசி வார்த்தைகள்

நற்செய்திப்பணியாளர்கள் இன்னும் மேடையிலிருக்கும் போதே நான்கு முரட்டு வாலிபர்கள் மேடைக்கு பின்னாலேயிருந்து வந்தனர்

. இமைப்பொழுதில் ஒருவன் கணமான இரும்புத்தடியால் குரைஷியின் பின்பக்கத்தில் பலமாக அடித்தான் . மற்ற மூவரும் அவனுடன் சேர்ந்து கொண்டு குரைஷியை பலமாகத்தாக்கினர் . குரைஷியை காப்பதற்காகவும் ,தாக்குதலில் இருந்து விடுவிக்கவும் நற்செய்திப் பணியாளர்கள் குறுக்கிட்டுத் தடுத்தனர் . அவர்களில் இரண்டுபேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது . பலத்த தாக்குதலுக்குள்ளான குரைஷி இரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார் .முழுக்கூட்டம் நிறுத்தப்பட்டு குழப்பமும் பயமும் தொடர்ந்தது . நற்செய்திப் பணியாளர்கள் துரிதமாய் குரைஷியை மருத்துவமனைககு எடுத்துச் சென்றனர் . இரண்டு மணி நேரத்தில் அவர் தேவ இராஜ்ஜியம் போய்ச் சேர்ந்தார் .ஆனால் குரைஷியின் "தேவ எக்காளமும் பிராதன துதனுடைய சத்தமும் தொனிக்கும் போது நான் மாறித்தோரிலிருந்து எழுந்திருப்பேன் . உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா ?" என்ற கடைசி வார்த்தைகள் சவாலாக அமைந்துவிட்டன .

உணர்ச்சிவசப்பட்ட இந்த கொலைக்காரர்கள் ஒருவனுக்கும் அந்த நம்பிக்கை இல்லவே இல்லை

. மகிமையின் தேவனின் நித்தியத்திற்குள்ளே பிரவேசிப்போம் என்ற நம்பிக்கையில்லாமல் ஒவ்வொரு முஸ்லீமும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் . வாழ்விலும் ,மரணத்திலும் கிறிஸ்து ஒருவரே அந்த நம்பிக்கையை கொடுக்க வல்லவர் . ஏனெனில் கிறிஸ்து ஒருவரே வாழ்ந்தும், மரித்தும் ,பிழைத்துமிருக்கிறார்.

குலாம் காதிர் குரைஷி

கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாய் மரித்ததினிமித்தம் அவரது பெற்றோர்களும் இரட்சிக்கப்பட்டனர் .ஆனால் விசுவாசத்தின் காரணமாக அவர்களும் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று . இப்போது முழுக்குடும்பமாக கிறிஸ்துவு க்குள் வாழ்கிறார்கள் . இவர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

(

காபாவில் இருந்து கல்வாரிக்கு என்ற புத்தகத்தில் இருந்து)

சுவிசேஷ

ஊழிய நூல் நிலையம

95‍A,

வேப்பேரி நெடுஞ்சாலை ,

சென்னை‍‍

;7

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்