இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே! - Merry Christmas to Muslims!


 

 

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே!


Merry Christmas to Muslims!

 
وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آَيَةً لِلْعَالَمِينَ
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)

And (remember) her who guarded her chastity: We breathed into her of Our spirit, and We made her and her son a sign for all peoples. (Surah Al Anbiyaa 91)
 
 
ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.
 
 
 
எனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது, "கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்" என்பதாகும். இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1). கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், "பைபிள் இதை போதிக்கிறது" என்பதால் தான். தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற "அதிர்ச்சி தரும்" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான். உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் "கடினமான பகுதிகளை" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் "நம்புவதற்கு கடினமான" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் (The fact that they always have been contained in God's Word makes it very unlikely that it was changed. Surely evil people would take out the difficult parts and definitely not add 'hard-to-believe' things).
 
 
 
 
கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக "அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும், அதற்கு பதிலாக, "ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை" அவர்கள் கவனிப்பதில்லை. இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கையுள்ளவர்கள்) "இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், "ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்" என்பதல்ல (Therefore, it is more important to focus on explaining why God became a man in Jesus rather than how he managed to do so).
 
 
 
கிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்

First reason for the Christmas season: The seriousness of sin
 
 
 
நாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன், ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம். பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.
 
 
 
பாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய "ஷிர்க் - SHIRK" என்ற பாவம் "நியாயத்தீர்ப்பு நாளில்" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, "பெரிய பாவங்கள்(Major Shirks)" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து, அதாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.

 
இதே போல, "சிறிய‌ பாவ‌ங்க‌ள்(Mijor Shirks)" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து, ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து, ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும். இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள்(Major and Minor Shirk) மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.
 
 
 
இறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம். இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம். குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் "இறைவனைப் பற்றி" விவரிக்கும் போது, "அவர் பார்க்கிறார், அறிகிறார்" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார், ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா? ஆகாது, இப்போது "பாவத்தை" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.

 
நீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் "அமீர்" என்று தெரியவருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா? அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு "தந்தை மகன்" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா? அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா? இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள். இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான். இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள். அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள், ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.
 
 
 
கிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு

Second reason for the Christmas season: The greatness of God's love for us
 
 
 
இப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர். நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார். அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம்? அதன் விளைவு என்ன? என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் "ஏன் செய்தாய்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை. இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள். இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும். இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா?

 
தேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும். சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும்(The cross is the place on which God has fulfilled both characteristics.). நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார். இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார். பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).
 
 
 
தேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார்! எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு. இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான். இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவை பின்பற்றுகிறவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது. எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான். தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் "உலகத்தின் இரட்சகர்" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 
 
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,

மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக …

"Glory to God in the heavenly heights,

Peace to all men and women on earth who please him." (லூக்கா 2:14)
 
 
 
அன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை(Freedom of Choice) என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம். இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது "பொதுவாக இறைவன்" பற்றிய போதனைக்கு எதிரானதாகும். உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும். இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம். இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான்! என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்து ஆனந்தம் அடைவீராக.

 
ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்

 

Isa Koran Home Page Back - Oskar's Index Page

Monday, December 22, 2008

குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2



 

ஏகத்துவத்திற்கு பதில் அல்லது கேள்வி
 

மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 


ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 2
 
 
 
முன்னுரை: ஏகத்துவ தளத்தின் கிறிஸ்தவமும் பவுலும் என்ற தலைப்பின் கட்டுரைக்கு தொடர் பதில்கள் நாம் அளித்துக்கொண்டு இருக்கிறோம். ஏன் பவுலின் மனந்திரும்பிய நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக சொல்லப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு நாம் இதுவரை கீழ் கண்ட பதிலை அளித்துள்ளோம்.
 
 
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்:

 
 
பைபிளுக்கு இஸ்லாமியர்கள் நியமிக்கும் நிபந்தனைகளில் பைபிள் வெற்றிப் பெறுகிறது, ஆனால், அதே நிபந்தனையை குர்‍ஆனுக்கு இட்டால், அது படுதோல்வி அடைகிறது, காரணம் குர்‍ஆன் இறைவனால் இறக்கப்ப‌ட்டது இல்லை என்பதால் தான்.

 
ஒரே நிகழ்ச்சியை விவரிக்கும் போது அல்லா செய்த முரண்பாடுகளை வித்தியாசத்தை கீழ் கண்ட பாகம் 1ல் காணவும்.
 
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1

மோசேயும், எரியும் புதரும்-MOSES AND THE BURNING BUSH

 
பாகம் - 2

 
 
மோசேயின் குழந்தை பருவம் பற்றி அல்லாவின் வார்த்தைகள் - MOSES' CHILDHOOD
 
 
 
மோசேயின் தாயிடம் "குழந்தையை ஆற்றில் போட்டுவிடும் படி அல்லா சொல்கிறார்", அப்படியே போட்டுவிடும் போது, பார்வோனின் குடும்பத்தார்கள் அவரை எடுத்துக்கொள்ளும் போது, மோசேயின் சகோதரி "அவர்களிடம் அக்குழந்தையை பாலூட்டி வளர்க்க ஒரு குடும்பத்தை நான் காட்டட்டுமா" என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு உரையாடலைப் பற்றி அல்லா சொல்லும் போது இரண்டு இடங்களில் வித்தியாசமாகச் சொல்கிறார்.

 
ஒரு நிகழ்ச்சி அல்லது உரையாடல் ஒரே மாதிரியாகத் தான் இருக்கவேண்டும், அப்படி இல்லையானால், அது வேதமாகாது என்ற கருத்துடைய இஸ்லாமியர்கள், அல்லா மோசேயின் தாயிடம் பேசிய உரையாடலையும், மோசேயின் சகோதரியின் ஒரு சின்ன உரையாடலையும் குர்‍ஆனில் ஒரே மாதிரியாக இரண்டு இடங்களில் பதிக்க அல்லா தவறிவிட்டார் என்பதைக் குறித்து என்னச் சொல்லப்போகிறார்கள்?

 
முதலில் இவ்வுரையாடல்கள் அடங்கிய குர்‍ஆன் வசனங்களைக் காண்போம். இவைகளில் அல்லா பேசிய மற்றும் மோசேயின் சகோதரி பேசிய வார்த்தைகளை சிகப்பு வண்ணத்தில் காட்டியுள்ளேன்.
 
 
மோசேயை ஆற்றில் போட்டுவிடும் படி அல்லாவின் உரையாடல்:
 
 
 
தலைப்புக்கள் குர்‍ஆன் 20:38-40 குர்‍ஆன் 28:7, 11-13
1. அல்லாவின் உரையாடல் "உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)! (20:38)

அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" (எனப் பணித்தோம்). மேலும், "(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன். (20:39)
நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (28:7)
2. மோசேயின் சகோதரியின் உரையாடல் (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர். (20:40) இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; "அவரை நீ பின் தொடர்ந்து செல்" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள். (28:11)
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்;
(அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (28:12)
இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (28:13)
 
 
 
1. அல்லாவின் உரையாடல் (குர்‍ஆன் 20:39 & 28:7)

 
குர்‍ஆன் 20:39 மற்றும் 28:7 என்ற வசனங்களில் அல்லா மோசேயின் தாயிடம் பேசிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
(குர்‍ஆன் 20:39) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்"…..

 
(குர்‍ஆன் 28:7) நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக࠯?காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம்.
 
 
மேலே உள்ள வசனங்கள் குறிப்பிடுவது அல்லாவின் ஒரே உரையாடல், ஆனால், எவ்வளவு வேறுபாடுகள் பாருங்கள். இவ்வசனங்களைக் காணும்போது கீழ் கண்ட கேள்விகள் எழுகின்றன. ஏன் இந்த வித்தியாசங்கள் என்பதை இஸ்லாமியர்கள் தான் விளக்கவேண்டும்.
 
 
1. குர்‍ஆன் 20:39ம் வசனத்தில் "குழந்தையை பேழையில் வைத்து நதியில் போட்டு விடும்" என்று உள்ளது ஆனால், குர்‍ஆன் 28:7ல், "நீ பயப்பட்டால் ஆற்றில் போட்டுவிடு" என்று வருகிறது. ஏன் இந்த வித்தியாசம். அதாவது, "நீ பயப்பட்டால்" என்ற வார்த்தையை அல்லா சொன்னாரா இல்லையா? ஒருமுறை சொன்னவர் இன்னொரு முறை ஏன் சொல்லவில்லை?

 
2. இரண்டு இடங்களிலும் பேசியவர் "அல்லா" தான் என்றுச் சொன்னால், தான் பேசியதை தானே மறந்துவிட்டாரா?

 
3. ஆற்றில் விட்டுவிட்டு, அவரைப் பற்றி "நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்" என்று குர்‍ஆன் 28:7ல் அல்லா சொல்கிறார். ஆனால், இந்த விவரத்தை குர்‍ஆன் 20:38ல் அல்லா சொல்லவில்லை? ஏன் இந்த வித்தியாசம்?

 
4. குர்‍ஆன் 20:39ல் "அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" என்றுச் சொல்கிறார். ஆனால், இந்த விவரம் குர்‍ஆன் 28:7ல் இல்லை. ஏன் இந்த வித்தியாசம்?

 
5. குர்‍ஆன் 28:7ல், "நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; " என்றும், "அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்றும் சொல்லியுள்ளார். ஆனால், இந்த விவரம் குர்‍ஆன் 20:39ல் இல்லை? அது ஏன்?

 
6. உண்மையில் மோசேயின் தாயிடம் குர்‍ஆன் 20:39ம் வசனத்தில் வருவதைப்போலச் சொனனாரா அல்லது குர்‍ஆன் 28:7ம் வசனத்தில் வருவதைப்போலச் சொன்னாரா?
 
 
இவைகள், எல்லாம் அறிந்த அல்லா பேசிய உரையாடல் பற்றிய குர்‍ஆன் வித்தியாசங்கள்.
 
 
 
2. மோசேயின் சகோதரியின் உரையாடல்

 
குர்‍ஆன் 20:40 மற்றும் 28:12 என்ற வசனங்களில் மோசேயின் சகோதரி பார்வோன் குடும்பத்தாரிடம் பேசிய உரையாடல் உள்ளது.
 
 
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள்,….. (குர்‍ஆன் 20:40)

 
….; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (குர்‍ஆன் 28:12)
 
 
மேலே உள்ள வசனங்களை கவனியுங்கள், எவ்வளவு வித்தியாசமாக இரு வசனங்களும் சொல்கின்றன.
 
 
1. குர்‍ஆன் 20:40ல், "பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை" என்றுச் சொன்ன அதே சகோதரி, குர்‍ஆன் 28:12ல் "ஒரு வீட்டினரை" என்று சொல்கிறார். இதில் எது சரி, எது தவறு? மோசேயின் சகோதரி "ஒருவரை காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா அல்லது "ஒரு வீட்டினரைக் காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா? பொருளில் அதிகமாக வித்தியாசம் இல்லையானாலும், இஸ்லாமியர்களின் "வேத நிபந்தனையை" குர்‍ஆனுக்கு இட்டால் எப்படி இருக்கும் என்று நாம் சோதிக்கும் போது, இப்படிப்பட்ட முரண்பாடுகள் வெடிக்கின்றன‌

 
2. குர்‍ஆன் 28:12ல் "அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்" என்ற அதிகபடியாக சொன்னதாக உள்ளது, ஆனால் இந்த விவரம் குர்‍ஆன் 20:40ல், அதே சகோதரி பேசிய உரையாடலில் இல்லை. அல்லாவின் மாறாத பிழையில்லாத, குர்‍ஆனில் ஏன் இந்த வித்தியாசம்? இஸ்லாமியர்கள் முக்கியமாக ஏகத்துவ தள அறிஞர்கள் விளக்குவார்களா?
 
 
இதே போல அல்லா பேசிய இன்னொரு எடுத்துக்காட்டு, இதில் கூட சில வார்த்தைகள் மாறுபடுகிறது. இந்த வித்தியாசத்தை(Verbal Differences) குர்‍ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த‌ யூசுப் அலி அவர்கள் கூட கவனித்துள்ளார் மற்றும் அதற்கு பின்குறிப்பும் எழுதியுள்ளார்.


 
 
இஸ்ரவேல் மக்களும் அவர்களின் கீழ் படிதலும் - ISRAEL AND OBEDIENCE
 
 
 
குர்‍ஆன் 2:58-59 மற்றும் 7:161-162 என்ற வசனங்களை படிக்கவும்:
 
 

 

 
 
குர்‍ஆன் 2:58-59 குர்‍ஆன் 7:161-162
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். (2:58) இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது (7:161)
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். (2:59) அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம். (7:162)
And remember We said: "Enter this town, and eat of the plenty therein As ye wish; but enter The gate with humility, In posture and in words, And We shall forgive you your faults And increase (the portion of) Those who do good." But the transgressors Changed the word from that Which had been given them; So we sent on the transgressors A plague from heaven, for that they infringed (Our command) repeatedly. [S. 2:58-59] And remember it was said to them: "Dwell in this town And eat therein as you wish, But say The word of humility and enter the gate In a posture of humility: We shall forgive you Your faults; We shall increase (The portion of) those Who do good." But the transgressors among them Changed the word from that Which had Been given them So we sent on them a plague from heaven For that they repeatedly transgressed. [S. 7:161-162]
 
 
 
கேள்விகள்:

 
1. குர்‍ஆன் 2:58ல், அல்லா இஸ்ரவேல் மக்களிடம் "இந்த பட்டினத்துள் நிழைந்து" என்றுச் சொல்கிறார், ஆனால், குர்‍ஆன் 7:161ம் வசனத்தில் "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்" என்றுச் சொல்கிறார்? இதில் எது சரியானது, எது தவறானது அல்லது இரண்டும் சரியானதா? அப்படியானால் ஏன் அல்லா மாற்றிச் சொல்கிறார்?

 
2. ஆங்கில மொழிபெயர்ப்பை கவனிக்கவும்: குர்‍ஆன் 2:29ல், "infringed (Our command)- அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து " என்றுச் சொல்லப்பட்ட விவரங்கள், குர்‍ஆன் 7:162ல், " transgressed - எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக " என்று அல்லா சொல்கிறார். இதில் எதை அல்லா சொல்லியிருப்பார்?

 
இதைப் பற்றி யூசுப் அலி அவர்களின் பின் குறிப்பை கீழே காணலாம்:
 
 
வார்த்தைகளில் வித்தியாசம்(Verbal Differences) பற்றி யூசுப் அலி அவர்கள்:
 
 
யூசுப் அலி அவர்களின் பின்குறிப்பு:

 
இந்த அதிகாரத்தின் 58 மற்றும் 59ம் வசனங்களை, குர்‍ஆன் 7 :161-162 வசனங்களோடு நாம் ஒப்பிட்டால், இரண்டு எழுத்து வித்தியாசங்களை நாம் காணலாம். இங்கு (2:28ம் வசனத்தில்) "பட்டனத்திற்குள் நிழைந்து" என்று வருகிறது, மற்றும் குர்‍ஆன் 7:161ல் "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்" என்று வருகிறது. அதே போல, குர்‍ஆன் 2:59ம் வசனத்தில் நாம் "infringed (Our command)" என்று உள்ளதை காணலாம் மற்றும் குர்‍ஆன் 7:162ம் வசனத்தில் " transgressed" என்று வருகிறது. இப்படி வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும், சொல்லப்பட்ட செய்தியின் பொருளில் வித்தியாசம் இல்லை. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)

 
A. Yusef Ali's footnote:

 
These verses, 58-59, may be compared to vii. 161-162. There are two verbal differences. Here (ii. 58) we have "enter the town" and in vii. 161 we have "dwell in the town." Again in ii. 59 here we have "infringed (Our command)," and in vii. 162, we have "transgressed." The verbal differences make no difference to the sense. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)
Source
 
 
அதாவது, ஒரே செய்தியாக இருந்தாலும், ஒரு முறை அல்லா ஒரு இடத்தில் சொல்லப்பட்ட செய்தியாக இருந்தாலும்(இஸ்ரவேல் மக்களுக்கு அல்லா சொன்ன செய்தி), அதனை குர்‍ஆனில் இரண்டு இடங்களில் சொல்லும் போது, வெவ்வேறு வார்த்தைகளைக் கொண்டு சொல்லியுள்ளார். பொருளில் அவ்வளவாக வித்தியாசம் இல்லாமல் இருந்தாலும், ஒரே உரையாடலை ஏன் இரண்டு வகையாகச் சொல்கிறார் அல்லா என்பதை இஸ்லாமியர்கள் தான் விளக்கவேண்டும்?
 
 
 
முடிவுரை: நான் இவ்விதமாக ஏன் கேள்விகள் கேட்கிறேன் என்றால் பைபிளில் ஒரு நிகழ்ச்சியை இடம் பொருள் ஏவலை அறிந்து இடத்திற்கு ஏற்ப சுருக்கியும், விவரித்தும் சொல்லப்பட்டதை முரண்பாடு என்று இஸ்லாமியர்கள் சொல்லும் போது, தாங்கள் இறைவனின் வேதம் என்று நம்பும் குர்‍ஆனில் உள்ள இந்த வித்தியாசங்களை "முரண்பாடுகள்" என்றுச் சொல்வார்களா? அல்லது "இதுவும் அல்லாவின் அற்புதங்களில் ஒன்று" என்றுச் சொல்லி, இந்த முரண்பாட்டையும் ஒரு அற்புதமாக மாற்றி விடுவார்களா?

அடுத்த பாகத்தில் சந்திப்போம்....

 
ஏகத்துவத்திற்கு பதில்கள்:



 

 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்