இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, November 24, 2008

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 2


ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் -2
 
குறிப்பு: ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். அப்போஸ்தலர் பவுலின் செய்தி இயேசுவின் செய்திக்கு முரண்பட்டது என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஆனால், முகமதுவின் செய்தி தான் இயேசுவின் செய்திக்கு நேர் எதிராக உள்ளது என்பதை எல்லாரும் அறிவோம். இயேசுவின் செய்திக்கும், பவுலின் செய்திக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கண்டால் முஸ்லீம்களின் வாதம் அடிப்படையற்றது என்பது புலனாகும்.


இயேசுவின் போதனைக்கும் பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை தொடர் கட்டுரையாக நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்: படிக்கவும்:


இதே தலைப்பில் இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் 35 (36 to 70) ஒற்றுமைகளை இக்கட்டுரையில் காணலாம்.

 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 2

100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul

தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
 
 
முன்னுரை:


 
அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.

 
 
இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
36. இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் வேத வசனங்களின் படி இருந்தது
Jesus' suffering, death and resurrection in accordance with the Scriptures


 
இயேசு: அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; (லூக்கா 24: 44-46)

 
பவுல்: நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, (1 கொரி 15: 3-4)

 
37. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சீமோன் பேதுருவுக்கும் (கேபா) மற்ற அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார்
Jesus appeared to Simon Peter (also known as Cephas) and the other apostles after his resurrection


 
இயேசு: அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு, வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள். இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். (லூக்கா 24: 33-36)

 
பவுல்: அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். (1 கொரி 15: 4-5)

 
38. கர்த்தருடைய நாள் இரவில் திருடனைப் போல் இருக்கும்
The day of the Lord will be like a thief in the night


 
இயேசு: உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்;ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். (மத்தேயு 24: 42-44)

 
பவுல்: இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சகோதரரே, அந்த நாள் திருடனைப் போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்தில் இருக்கிறவர்களல்லவே. (1 தெச 5: 2, 4)

 
39: விசுவாசிகள் மதுமயக்கத்தால் இயேசுவின் வருகையிலிருந்து வழிவிலகிவிடாதபடி விழிப்போடு காத்திருக்க வேண்டும்.
Believers must remain awake and not let drunkenness distract them from the coming of Jesus


 
இயேசு: உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்;ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.......அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன் வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, (மத்தேயு 24: 42, 44, 48-50)

 
பவுல்: சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக் கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். (1 தெச 5: 4, 6)

 
40. கர்த்தருடைய நாளைப் பற்றிக் கூறும் போது பிரசவ வேதனையாக வருணிக்கப்பட்டுள்ளது.
Labour pains mentioned when talking about the day of the Lord


 
இயேசு: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்;பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். (மத்தேயு 24: 7-8)

 
பவுல்: இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்;அவர்கள் தப்பிப்போவதில்லை. (1 தெச 5: 2-3)
 
 
41. இயேசு தேவ தூதர்களோடுகூட வருவார்.
Jesus will come with the angels


 
இயேசு: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். (மத்தேயு 25: 31)

 
பவுல்: தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும் போது அப்படியாகும். (2 தெச 1: 7-8)

 
42. இயேசு மீண்டும் வரும்போது எக்காளம் தொனிக்கும்
A trumpet will sound when the Lord comes again


 
இயேசு: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்;அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். (மத்தேயு 24: 30-31)

 
பவுல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்;அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெச 4: 16)

 
43. இயேசுவை மறுதலித்தால் அவரும் நம்மை மறுதலிப்பார்
Deny Jesus and he will deny us


 
இயேசு: மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். (மத்தேயு 10: 33)

 
பவுல்: அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; (2 தீமோ 2: 12)

 
44. நித்திய வாழ்வு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதினால் வரும்
Eternal life comes through believing in Jesus


 
இயேசு: யேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11: 25-26)

 
பவுல்: ... நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் .....(1 தீமோ 1: 16)

 
45. இயேசு விசுவாசிகளுக்குள் ஜிவிக்கிறார்
Jesus lives in believers


 
இயேசு: நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்;இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். (யோவான் 17: 26)

 
பவுல்: கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்;ஆயினும், பிழைத்திருக்கிறேன்;இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். (கலா 2: 20)

 

 

 
46. தேவ தூதர்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர்கள்
The angels belong to Jesus

 

 

இயேசு: மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்;அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, (மத்தேயு 13: 41)

 
பவுல்: கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். (2 தெச 1: 8)

 
47. இயேசுவே நியாதிபதி
Jesus is judge


 
இயேசு: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5: 22)

 
பவுல்: மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்;அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்;அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். (அப் 17: 31)

 
48. இயேசு எல்லா ஜனங்களையும் ஒன்று சேர்க்கிறார்
Jesus gathers all people together


 
இயேசு: இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு;அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன் என்றார். தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப் போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். (யோவான் 10:16;12: 32-33)

 
பவுல்: முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இரு திறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். (எபே 2: 13-16)

 
49. இயேசு உலகத்தில் எப்போதும் விசுவாசிகளுடன் இருப்பார்
Jesus will always be with believers in the world


 
இயேசு: … இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28: 20)

 
பவுல்: கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? (ரோமர் 8: 36)

 
50. பரலோகம் இயேசுவோடு எப்போதும் இருப்பதற்காகவே அமைக்கப்ட்டுள்ளது
Heaven consists in being with Jesus always


 
இயேசு: என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்;ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். (யோவான் 14: 2-3)

 
பவுல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்;அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (1 தெச 4: 16-17)
 
 
 
 
51. இயேசுவே மூலைக்கல்லாயிருக்கிறார்
Jesus is the cornerstone


 
இயேசு: கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி;இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளினகல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா (மத்தேயு 21: 37-42)

 
பவுல்: அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்;அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக் கல்லாயிருக்கிறார்;(எபே 2: 19-20)

 
52. விசுவாசிகள் இயேசுவின் சிலுவையில் பங்கு கொள்ள வேண்டும்
Believers must share in the cross of Jesus


 
இயேசு: அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். (மத்தேயு 16: 24)

 
பவுல்: நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். (கலா 6:14)

 
53. இயேசுவுக்காய் வாழ்வைக் கொடுத்து ஜீவனைப் பெற்றுக் கொள்
Give up life for Jesus and we will gain life


 
இயேசு:என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். (மத்தேயு 16: 25)

 
பவுல்: இந்த வார்த்தை உண்மையுள்ளது;என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; ( 2 தீமோ 2: 11)

 
54. ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார்
There is only one God


 
இயேசு: … இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்கு 12: 29)

 
பவுல்: … விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. (ரோமர் 3: 30)

 
55. தேவன் சர்வ வல்வல்மையுள்ளவர்
God is all-powerful


 
இயேசு: இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இதுகூடாததல்ல;தேவனாலே எல்லாம் கூடும் என்றார் (மாற்கு 10: 27)

 
பவுல்: … அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபே 1: 18-19)

 
56. தேவன் பிதாவாயிருக்கிறார்
God is Father


 
இயேசு:என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். (யோவான் 8: 54)

 
பவுல்: நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்;…. (எபே 1: 3)

 
57. பரிசுத்த ஆவியானவர்
The Holy Spirit


 
இயேசு: அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், (யோவான் 20: 22)

 
பவுல்:பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக (ரோமர் 15: 13)

 
58. பரிசுத்த ஆவியானவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர்
The Holy Spirit was promised


 
இயேசு: அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்;நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். (அப் 1: 4-5)

 
பவுல்: நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபே 1: 13)

 
59. பிதா பரிசுத்த ஆவியை அனுப்புகிறார்
The Father sends the Holy Spirit


 
இயேசு: என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14: 26)

 
பவுல்: மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். (கலா 4: 6)

 
60. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குள் வாசம் பண்ணுகிறார்
The Holy Spirit lives in believers


 
இயேசு: உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது;அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். (யோவான் 14: 17)

 
பவுல்: உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? (1 கொரி 6: 19)
 
 
61. தேவனுடைய செய்தியை புரிந்து கொள்வதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார்
The Holy Spirit helps us understand the message of God


 
இயேசு: இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16: 12-13)

 
பவுல்: நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். (1 கொரி 2: 10, 12)

 
62. பரிசுத்த ஆவியானவர் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்
The Holy Spirit testifies to Jesus


 
இயேசு: பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். (யோவான் 15: 26, 16: 14)

 
பவுல்: ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். (1 கொரி 12: 3)

 
63. பரிசுத்த ஆவியானவர் நமக்காக பரிந்து பேசுகிறார்
The Holy Spirit advocates for us


 
இயேசு: நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது;அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். (யோவான் 14: 16-17)

 
பவுல்: அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவாh (ரோமர் 8: 26-27)

 
64. பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார்
The Holy Spirit spoke through the prophets


 
இயேசு: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. (மாற்கு 12: 36)

 
பவுல்: ... பரிசுத்தஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். (அப் 28: 27)

 
65. தேவன் உங்களை மன்னித்திருக்கிறபடியால் மற்றவர்களை மன்னியுங்கள்
Forgive others as God has forgiven us


 
இயேசு: அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினது போல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற் போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.(மத்தேயு 18: 32-35)

 
பவுல்: ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோ 3: 13)

 
66. தேவனை நேசிப்பதின் முக்கியத்துவம்
Importance of loving God


 
இயேசு: இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. (மத்தேயு 22: 37-38)

 
பவுல்: அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8: 28)

 
67. மனித பார்வைக்கு அற்பமானவர்களையே தேவன் தெரிந்து கொள்ளுகிறார்
God has chosen the people of no importance according to mere human standards


 
இயேசு: அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11: 25)

 
பவுல்: ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்;பல முள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். (1 கொரி 1: 27-29)

 
68. "உன்னைப் போல பிறனை நேசி" கற்பனைகளின் சுருக்கமாகும்
"Love your neighbour as yourself" summarises the law


 
இயேசு: இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22: 39-40)

 
பவுல்: எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்பு கூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. (ரோமர் 13: 9)

 
69. நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாத மக்களை விட்டு வரும்போது உங்கள் கால்களின் தூசியை உதறிவிடுங்கள்
Wipe dust off feet when leaving people who refuse the message


 
இயேசு: யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்;ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். (லூக்கா 10: 10-11)

 
பவுல்: யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள். இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள். (அப் 13: 50-51)

 
70. வேலையாள் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
The labourer deserves to be paid


 
இயேசு: …வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்… (லூக்கா 10: 7)

 
பவுல்: …வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும்…. (1 தீமோ 5: 18)

Source: http://www.answering-islam.org/Wales/jesus_paul.htm


 

 
 

Sunday, November 23, 2008

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1



ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் -1
 
குறிப்பு: நம் தமிழ் முஸ்லீம்கள் முக்கியமாக ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். கிறிஸ்தவத்தை உண்மையாக ஸ்தாபித்தது இயேசு அல்ல, பவுல் தான் என்ற தோரணையில் கட்டுரையை எழுதியிருந்தார்கள். அவர்களின் கட்டுரைகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வதற்கு முன்பாக, இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலரான பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம். (முஸ்லீம்களின் நம்பிக்கையின் படி, இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் ஒன்று தான். ஆனால், இயேசுவிற்கும் முகமதுவிற்கும் கிழக்கிற்கும், மேற்கிற்கும் உள்ள தொலைவு போல வித்தியாசம் உள்ளது, இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர் அல்லாத மாற்று மத நம்பிக்கையாளர்களும் அறிந்துள்ளார்கள்.)இஸ்லாமியர்கள் நினைப்போது போல அல்லாமல், இயேசு எதைச் சொன்னாரோ, அதையே சொல்லியிருக்கிறார் அப்போஸ்தலர் பவுலும், இக்கட்டுரையில் ஒவ்வொரு தலைப்பைப் பற்றி இயேசு எதைச் சொல்லியுள்ளாரோ, பவுலும் அதையே சொல்லியுள்ளார் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். பவுல் சொன்னது இயேசு சொன்னதற்கு முரண்பட்டது என்றுச் சொன்னால், பவுல் முகமதுவைப் போல, உன் எதிரிகளை கொல்லு, ஒன்றுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொண்டு, உன் அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக எடுத்துக்கொள் என்று சொல்லியிருந்தால், இயேசு சொன்னதற்கு எதிராக பவுல் சொன்னார் என்று நாம் கருதலாம், பவுல் சொன்னது அப்படி இல்லையே, இத்தொடர் கட்டுரைகளை படித்து தெளிவுப் பெருங்கள்.

இந்த தலைப்பில் இது முதலாவது பாகமாகும், இதில் 35 ஒற்றுமைகளை காட்டியுள்ளோம், மீதமுள்ளதை அடுத்த தொடரில் காண்போம்.
 
 


 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul

தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
 
முன்னுரை:

அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.

 
இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
1. இயேசு தான் மேசியா அல்லது கிறிஸ்து (Jesus is the Messiah or Christ)

 
இயேசு: அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு : 16:15-17)

 
பவுல்: மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங் கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்(அப் :18: 5).

 
2. இயேசு தேவனுடைய குமாரன்(Jesus is the Son of God)

 
இயேசு: அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். (லூக்கா 22: 70-71)

 
பவுல்: தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். (அப் 9: 20)

 
3. இயேசுவே ஆண்டவர்(Jesus is Lord)

 
இயேசு: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். (யோவான் 13:13)

 
பவுல்: பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரி 8: 6)

 
4. இயேசுவே தேவன் (Jesus is God)

 
இயேசு: தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20: 28-29)

 
பவுல்: பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோமர் 9: 5)

 
5. இயேசு மனிதர் (Jesus is Human)

 
இயேசு: அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8: 39-40)

 
பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

 
6. இயேசு ஸ்தீரியினிடத்தில் பிறந்தவர் (Jesus was born of Woman)

 
இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

 
பவுல்: காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். (கலா 4: 5)

 
7. தேவன் இயேசுவை அனுப்பினார்(God sent Jesus)

 
இயேசு: இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8: 42)

 
பவுல்: அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (ரோமர் 8: 3)

 
8. இயேசுவே பிதாவனிடத்திற்கு போகும் வழி (Jesus is the way to the Father)

 
இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

 
பவுல்: அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபே : 2: 18)

 
9. இயேசுவே ஒளி (Jesus is Light)

 
இயேசு: மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8: 12)

 
பவுல்: அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2 கொரி 6: 14-15)

 
10. இயேசுவே ஜீவன் (Jesus is Life)

 
இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

 
பவுல்: நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோ 3: 4)
 
 
 
11. இயேசுவே தொடக்கம் /ஆதியுமாக இருக்கிறார் உள்ளார் (Jesus is the Beginning)

 
இயேசு: நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். (வெளி 22:13)

 
பவுல்: ….அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

 
12. இயேசு முதலாமவர் (Jesus is First)

 
இயேசு: .....நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், .... (வெளி 1: 17-18)

 
பவுல்: அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

 
13. இயேசு தாவீதின் சந்ததியானவர் ( Jesus is a descendent of David)

 
இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

 
பவுல்:தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். (2 தீமோ 2: 8)

 
14. இயேசு மணவாளன் (Jesus is the Bridegroom)

 
இயேசு: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன வென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. (மாற்கு 2: 18-19)

 
பவுல்: நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (2 கொரி 11: 2)

 
15. இயேசுவே ராஜா (Jesus is King)

 
இயேசு: இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18; 36-37)

 
பவுல்: விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபே 5: 5)

 
16. இயேசு பரத்திலிருந்து இறங்கினவர்(Jesus descended from Heaven)

 
இயேசு:பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3: 13)

 
பவுல்: ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? (எபே 4: 9)

 
17. இயேசுவே இரட்சகர் (Jesus is Saviour)

 
இயேசு: உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17)

 
பவுல்:பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோ 1: 15)

 
18. இயேசுவே சத்தியமானவர்(Jesus is the Truth)

 
இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

 
பவுல்:இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. (எபே 4: 21)

 
19. இயேசு ஏழையாக இருந்தார் (Jesus was poor)

 
இயேசு: அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். (மத்தேயு 8: 20)

 
பவுல்: நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும் படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. (2 கொரி 8: 9)

 
20. தேவனின் மகிமையின் ஒளி இயேசுவின் முகத்தில் பிரகாசித்தது.
(The glory of God shines in the face of Jesus)


 
இயேசு: ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. (மத்தேயு 17: 1-2)

 
பவுல்: இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2 கொரி 4: 6)

 
21. இயேசு தேவனுடைய பந்தியை ஏற்படுத்தினார் (Jesus instituted the Lord's Supper)

 
இயேசு: அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14: 22-24)

 
பவுல்: நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (1 கொரி 11: 23-25)

 
22. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்(Jesus was betrayed)

 
இயேசு: .... உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். .... மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ!.... (மாற்கு 14: 18, 21)

 
பவுல் : நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, (1 கொரி 11: 23)

 
23. இயேசு பொந்திய பிலாத்துவுக்கு முன்பாக சாட்சியளித்தார் (Jesus testified before Pontius Pilate)

 
இயேசு : அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18: 33-37)

 
பவுல்: எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். (1 தீமோ 6: 14)

 
24. இயேசு பாடுபட்டார்(Jesus suffered)

 
இயேசு: அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். (மத்தேயு 16: 21)

 
பவுல்: எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது (2 கொரி 1: 5).

 
25. இயேசு மரித்தார்(Jesus died)

 
இயேசு: இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். (மாற்கு 15: 37)

 
பவுல் :இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; …. (1 தெச 4: 14)

 
26. இயேசு அடக்கம்பண்ணப்ட்டார் (Jesus was buried)

 
இயேசு: அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். (மாற்கு 15: 46)

 
பவுல்: ..... அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (ரோமர் 6: 4)

 
27. இயேசு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார்(Jesus rose from the dead on the third day)

 
இயேசு: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2: 19, 22)

 
பவுல்: நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, (1 கொரி 15 : 3-4)

 
28. இயேசு பரமேறினார்(Jesus ascended)

 
இயேசு: அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். (லூக்கா 24: 51)

 
பவுல்: இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். (எபே 4: 10)

 
29. இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். (Jesus is seated at the right hand of the Father)

 
இயேசு: .....மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர் தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14: 61-62)

 
பவுல்: எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, (எபே 1: 20)

 
30. இயேசு மீண்டும் வருவார் (Jesus will come again)

 
இயேசு: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். (மத்தேயு 24: 30)

 
பவுல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெச 4: 16)

 
31. இயேசு ஆடுகளுக்காக மரித்தார் (Jesus died for the sheep)

 
இயேசு:ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10: 15)

 
பவுல்: ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப் 20:28)

 
32. இயேசு நம்மேலிருந்த அன்பின் நிமித்தம் மரித்தார் (Jesus died for love of us)

 
இயேசு:நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15: 12-13)

 
பவுல்: ....நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன (கலா 2: 20)

 
33. இயேசுவின் மரணம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது (Jesus' death demonstrates God's love)

 
இயேசு: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3: 16)

 
பவுல்: நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். (ரோமர் 5: 8)

 
34. இயேசு தன்னை ஒரு பரிகார பலியாக ஒப்புக்கொடுத்தார் (Jesus gave himself as a ransom)

 
இயேசு: அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20: 28)

 
பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

 
35. இயேசுவை சிலுவையிலறைந்தவர்கள் அறியாமையினாலே அப்படிச் செய்தார்கள்
(Those who crucified Jesus were ignorant and acted in ignorance)


 
இயேசு: அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். ... (லூக்கா 23: 34)

 
பவுல்: உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (1 கொரி 2: 7-8)

 
 
முடிவுரை: அன்பான இஸ்லாமியர்களே, நீங்களே உங்கள் கண்களால் காணுங்கள், உங்கள் காதுகளால் கேளுங்கள், மனதால் உணருங்கள். இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலனாகிய பவுலின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இயேசுவின் போதனைக்கும், நீங்கள் நபி என்று நம்பிக்கொண்டு இருக்கும் முகமதுவின் போதனைக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இயேசுவிற்கு முரண்பட்டவர் பவுல் அல்ல, இயேசுவின் மற்ற சீடர்கள் அல்ல, உங்கள் முகமது தான் முரண்பட்டார், ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் இயேசுவிற்கு முரண்பட்ட எல்லா செயல்களையும் அவர் செய்தார். குர்‍ஆனையும் பைபிளையும் படித்துப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

 
அடுத்த தொடரில் சந்திக்கும் வரை கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. இயேசுவே நாங்கள் உங்களை நேசிக்கிறோம், சீக்கிரமாக வாரும். ஆமென்.


 

 
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்