இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, October 3, 2008

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை: இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace)



 
ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை
 


முகமதுவின் கடிதங்களில் உள்ள வன்முறையைப் பற்றிய கட்டுரைகளுக்கு மேலதிக விவரங்களுக்காக இக்கட்டுரை பதிக்க‌ப்படுகிறது.


முந்தைய கட்டுரைகள்
 
 
செமிடிக் மொழிகளில்(Semitic Languages) ஒரு வேர் சொல்லின் இடையில் வித்தியாசமான உயிர் எழுத்துக்களை சொருகுவதால் பல வார்த்தைகளை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு மூன்று மெய் எழுத்துக்கள் கொண்ட ஒரு வேர்ச்சொல் பற்றி காண்போம். "SLM" என்பது ஒரு வேர்ச்சொல், இதனினின்று உருவானது தான் இந்த இரண்டு சொற்கள் "iSLaM" மற்றும் "SaLaM" என்பதாகும். இப்படி ஒரு வேர்ச்சொல் அல்லது மூல சொல்லிலிருந்து இரண்டு வார்த்தைகள் உருவானதால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் ஒற்றுமை இருக்குமா?

 
ரோமானிய மற்றும் ஜெர்மனிய மொழிகளில், உயிரெழுத்துக்களை சொருகுவதால் அல்ல, அதற்கு பதிலாக ஒரு வேர் சொல்லின் முன்பும் அதன் பின்பும் (prefix or suffix) சில எழுத்துக்களை சேர்ப்பதால், பல வார்த்தைகள் உருவாகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், "Love" என்ற வார்த்தையை ஒரு மூல வார்த்தையாகக் கொண்டால், இந்த வார்த்தை பல உரிச்சொற்களை(Adjective) உருவாக்குகிறது, அதாவது, "Loving" மற்றும் "Loveless" என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லலாம். இந்த இரண்டு சொற்களின் மூலச் சொல் "Love" என்பதாகும், ஆனால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் "ஒன்றுக்கொன்று எதிர் மறையானது". இதே போல, "type" என்ற மூலச் சொல்லினை பயன்படுத்தி "typical" மற்றும் "atypical" என்ற இரண்டு வார்த்தைகளை உருவாக்கலாம். ஆனால், இந்த இரண்டு சொற்களின் பொருள் மறுபடியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது தான். அரபி மொழியின் விவரங்களை தெரிந்துக் கொள்ள ஆங்கில மொழியை நாம் ஒரு அளவு கோளாக கொள்ள முடியாது. இருந்தாலும், அரபி மொழி தெரியாதவர்களுக்கு கீழே படிக்கப்போகின்ற கட்டுரையை புரிந்துக்கொள்ள மேலே கண்ட இரண்டு ஆங்கில உதாரணங்கள் உதவியாக இருக்கும்.



 
இஸ்லாம் மற்றும் அமைதி

Islam and Peace
 
 
இந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் அறிஞர்கள், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு, அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, இஸ்லாம் என்பது வன்முறையை வெறுத்து, அமைதியை விரும்பும் மதம் என்று காட்ட முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் புதியதாக விற்கப் பார்க்கும் ஒரு சித்தாந்தம் என்னவென்றால், "இஸ்லாம் (Islam) " என்ற தங்கள் மதத்தின் பெயரின் பொருள் "அமைதி (Peace)" என்றுச் சொல்கிறார்கள். அமைதி என்ற பொருள் தரும் அரபி வார்த்தை "சலாம் (Salam)" என்பதாகும். அவர்கள் தங்கள் புதிய சித்தாந்தத்தை சொல்வதற்கு அடிப்படையாக‌ அரபி மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே முல வார்த்தை இருப்பதை காரணம் காட்டுகிறார்கள்.

 
அரபி மொழியை பேசத் தெரியாதவர்களுக்கு, மற்றும் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் இப்படிப்பட்ட புதிய சித்தாந்தங்கள் மூலமாக‌ ஏமாற்ற முடியும். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரத்தின் மூலமாக, அரபி மொழி தெரிந்தவர்களையும், இஸ்லாமின் போதனை என்ன என்று புரிந்துக் கொண்டவர்களையும் ஒரு போதும் அவர்கள் முட்டாள்களாக்க முடியாது. இஸ்லாம் என்ற மதம் வன்முறையினால் ஸ்தாபிக்கப்பட்டது மற்றும், இன்று கூட அதே வன்முறையை நம்பி அதை ஒரு கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. முஸ்லீம்கள் தங்களுக்குள் இருக்கும் உறவுமுறை, மற்றும் அவர்களுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுமுறை எப்போதும் "பயம் அல்லது பீதி" என்பதின் அடிப்படையிலேயே இருந்துள்ளது, இன்னும் அப்படியே இருக்கிறது. "இஸ்லாம்" மற்றும் "சலாம்" என்ற இரண்டு வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத வார்த்தைகளாகும் மற்றும் இவ்விரண்டு வார்த்தைகள் பெயரிலோ அல்லது பொருளிலோ கூட சம்மந்தப்பட்டவைகள் அல்ல. (While it may be possible to deceive those who do not speak Arabic or those who do not know much about Islam, propaganda like this does not fool someone who knows the Arabic language and the teaching of Islam, a religion that was established by violence and still believes in violence as a principal and as a way of life. The relationships between Muslims themselves and between them and all other nations have always been based on terror and still is. Islam and Salam are two incongruous words that share no common ground either in name or in substance.)

 
அரபி அகராதியில் சில‌ குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருள் என்ன என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், "வேர் (root)" வார்த்தை என்றுச் சொல்லக்கூடிய மூன்று எழுத்து சொல்லை நாம் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. பல வார்த்தைகள் அந்த ஒரு மூல வார்த்தையின் மூலமாக உருவாகியிருக்கும், ஆனால், அவ்வார்த்தைகளின் பொருள்களில் கூட ஒற்றுமை இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.

 
"சலாமா" என்ற வார்த்தையிலிருந்து "இஸ்லாம்" என்ற வார்த்தை உருவாகியது, இஸ்லாம் என்றால் "சரணடைதல்" என்றுப் பொருள்.

 
இதே போல, "சலாம்" என்ற வார்த்தைக்கு "அமைதி" என்றுப் பொருள், இந்த வார்த்தையும் "சலிமா" என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதன் பொருள் "காப்பாற்றப்படல் அல்லது ஆபத்திலிருந்து தப்பித்தல்" என்பதாகும்.

 
இந்த "சலாமா" என்ற வார்த்தையிலிருந்து வந்த இன்னொரு பொருள் என்னவென்றால், "பாம்பின் கடி அல்லது பாம்பு கொட்டுதல்" அல்லது "தோல் பதனிடுதல்" என்பதாகும். ஆக, "இஸ்லாம்" என்ற வார்த்தை "சலாம் - அமைதி" என்ற பொருள் தரும் வார்த்தையோடு சம்மந்தம் உண்டு என்று நாம் நிர்ணயித்தால், அதே "இஸ்லாம்" என்ற வார்த்தைக்கு "பாம்பின் கடி" அல்லது "தோலை பதனிடுதல்" என்ற வார்த்தைக்கும் சம்மந்தம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவிற்கும் நாம் வரலாம்(Hence, if the word Islam has something to do with the word Salam i.e. 'Peace', does that also mean that it must be related to the 'stinging of the snake' or 'tanning the leather'?)

 
முகமது அவர்கள் சுற்றியுள்ள நாடுகளின் அரசர்களுக்கும், தலைவர்களுக்கும் இஸ்லாமையும், தன் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், தான் அல்லாவின் தூதர் என்பதை நம்பும்படியும் அவர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தார்கள். அவர் தன் கடிதங்களை இப்படி முடிப்பார், "அஸ்லிம் தஸ்லம்! (Asllim Taslam)". இந்த இரண்டு வார்த்தைகளும் "அமைதி" என்ற பொருள் வரும் "சலாமா" என்ற ஒரே வேர்ச்சொல்லிலிருது வந்திருந்தாலும், இந்த இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்காகிலும் "அமைதி" என்ற பொருள் இல்லை. இந்த இரு வார்த்தைகளின் பொருள் "சரணடை மற்றும் நீ பாதுகாப்பாக இருப்பாய்", அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், "சரணடை அல்லது மரணமடை" என்று பொருளாகும். ஆக, தன் மதத்திற்கு சரணடைய மறுக்கும் மக்களை, கொன்று விடுவேன் என்று பயமுறுத்தும் மதத்தில் "அமைதி" என்ற பொருளுக்கு இடமேது? (So where is the meaning of 'Peace' in such a religion that threatens to kill other people if they don't submit to it?)

 
வேறு வகையில் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்கள், அல்லது அல்‍-சீரா(முகமதுவின் வாழ்க்கை வரலாறு) என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய புத்தகங்களில், நிறைய ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன. அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற‌ ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிற‌ப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.

 
இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று குர்‍ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது: "…. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்." (குர்‍ஆன் 4:89) முகமது அவர்களும், அல்புகாரி ஹதீஸின் படி, "ஒரு முஸ்லீம் அவன் மதத்தை விட்டுவிட்டால், அவனை கொல்லுங்கள்" என்றுச் சொல்லியுள்ளார்கள் (Muhammad also said, as narrated by Al-Bukhari, "If somebody - a Muslim - discards his religion, kill him.")

 
இஸ்லாமை தழுவி பிறகு அதை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளை இடுவதொடு மட்டுமில்லாமல், முஸ்லீம்கள் எல்லா நாடுகளோடும் சண்டையிட்டு, ஒன்று அந்நாடுகள் இஸ்லாமை அங்கீகரித்து ஜிஸ்யா என்ற வரியை செலுத்தவேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க தயாராக வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளையிடுகிறது: வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29) .

"Fight those who believe not in Allah nor the last day, nor hold that forbidden which hath been forbidden by Allah and his apostle nor acknowledge the religion of truth of the people of the Book (the Jews and the Christians) until they pay the Jizya with willing submission and feel themselves subdued. Surat At-Tauba 9:29"

 
இதே சூரா 5ம் வசனத்தில் குர்‍ஆன் சொல்கிறது: "…முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்…" இப்போது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று நன்றாக புரிகிறதல்லவா. ஆனால் நம்புவதற்குத் தான் சிறிது கடினம்.



Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/abumuhai/salamislam.html

 

Monday, September 29, 2008

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)



ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை


அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)


அபூமுஹையும் மறைத்த விவரங்களும்
 

முன்னுரை: முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள்.

 


அக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்).

பிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன்.
 
 
 
 
இந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.
 
அபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:

… "இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …

…கேள்வி எழுப்பியதோடு "மறைத்த உண்மை எது?" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே! …

Source: http://abumuhai.blogspot.com/2008/08/blog-post.html
 
 
1) "மறைத்த உண்மை எது?"

 
அபூமுஹை அவர்கள் "மறைத்த உண்மை எது?" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது.

 
அதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும்.

 
இன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.
 
ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

 
 
எந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை? அபூமுஹை அவர்களே?

 
வேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், "அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே" இது தான் மறைக்கப்பட்டுள்ளது.

முகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.
 
 
 
2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு!

 
நீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. "if you embrace Islam, you will find safety" என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை.

 
உதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.
 
 
நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
 
 
அ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது? இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா?

ஆ) "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம" என்றால் இதன் பொருள் என்ன? இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா?

இ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள்? அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா? அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார்? அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா?

ஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா?

அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
 
 
அ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்?

 
ஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன? உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்?

 
இ) "இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் "இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்"?

 
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா? அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.
 
 
3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா?

 
அன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே? அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா?

 
தமிழ் முஸ்லீம்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு! அப்படித் தானே?

 
உண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,

 
"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்?,

ஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்?

நம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டு இருப்பீர்கள்.

 
உங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்" என்று கேட்டு இருப்பீர்கள்.

 
அதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.

 
இன்னும் ஒரு படி மேலே சென்று, "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், "எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
 
 
4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே!

 
ஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் "இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்தின் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை "தவறாக" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட்டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள்.

 
"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."
 
மேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள்.
 
 
"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்"
 
என்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.
 
5) Aslim Taslam (Arabic: أسلم تسلم) என்றால் என்ன?

 
முதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே.

இரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய.

மூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم)
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم) is a phrase meaning "accept Islam and you will be saved".[1] that was taken from the letters sent by the Islamic prophet Muhammad to various kings and rulers in which he urged them to convert to Islam.[2][3] ….

References in Hadith

Sahih Muslim narrates in Kitab Al-Jihad wa'l-Siyar (The Book of Jihad and Expedition) Book 19, Number 4294, Chapter 2: Appointment of the Leaders of Expeditions by the Imam and His Advice to Them on Etiquettes of War and Related Matters: "Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them."[7] …..

Critical responses

In response to the aslim taslam invitation to submit to Islam, the Italian author and journalist Oriana Fallaci asserted the rejoinder "lan astaslem" (Arabic: لن استسلم ) meaning "I will not surrender". [15] [16] Michelle Malkin has taken up this slogan as a response to the WTC terrorist attacks[17]

["lan astaslem" (Arabic: لن استسلم )

இத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் "லன் அஸ்டஸ்லெம்" என்றாராம், அதாவது, "நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]


On September 17, 2006, in response to the Pope Benedict XVI Islam controversy, Imad Hamto, a Palestinian religious leader, said: "We want to use the words of the Prophet Muhammad and tell the pope: Aslim Taslam." This was interpreted as a warning.[3][18][vague]

[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI

இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: " நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, "அஸ்லிம் தஸ்லம்" என்பதாகும். ]


Source: http://en.wikipedia.org/wiki/Aslim_Taslam

 
 
முடிவுரை: அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don't try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள்? ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அபூமுஹை அவர்களே , "இல்லை இல்லை" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா?

வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு


 

 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்