இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label TNTJ. Show all posts
Showing posts with label TNTJ. Show all posts

Friday, December 28, 2007

TNTJ தலைவரும்,இஸ்லாம் அறிஞருமான பி.ஜெய்னூல்ஆபிதீன்(பிஜே) அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் பதில்: அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

முன்னுரை: பிஜே அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் உள்ள "அற்புதம் நிகழ்த்தியது எப்படி? " என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுப்பிய பொதுவான கேள்விக்கு, பாகம் 1ல் பதில் அளித்துள்ளேன்.

படிக்கவும் பாகம் -1: பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

இந்த இரண்டாம் பாகத்தில், "அற்புதம் நிகழ்த்தியது எப்படி ?" என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுதிய மற்ற விவரங்களுக்கு பதிலை பார்க்கலாம்.

அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2


பிஜே அவர்கள் எழுதியது:

அற்புதம் நிகழ்த்தியது எப்படி?


அப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்? என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருதே நாம் அளிப்போம்.

நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30)
Source : Source: http://www.onlinepj.com/book/mahana8.htm



ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்கள் பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். "நான் என் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை " என்று இயேசு சொன்ன வார்த்தைகள், அவரது தெய்வீகத் தன்மையை அவரே மறுப்பதாக அர்த்தமில்லை. பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை அது பறைசாற்றுகிறதாக இருக்கிறது. அதாவது பிதாவிற்கு எது சித்தமோ அதை குமாரன் செய்வார்.

இதை இன்னும் விவரமாக புரிந்துக்கொள்ளவேண்டுமானால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட யோவான் 5:30ம் வசனம் சொல்லப்பட்ட சந்தர்பத்தில் இயேசு வேறு என்ன என்ன சொல்லியுள்ளார் என்று கவனித்தால் புரியும். பிதாவிற்கும் குமாரனுக்கும் தனித்தனி சித்தங்கள் இல்லை, இருவரின் சித்தங்களும் ஒன்று தான், அதாவது மனிதனுக்கு இரட்சிப்பை கொடுத்து தன்னோடு சேர்த்துக்கொள்வது.



யோவான் 5:16-29 வரை உள்ள வசனங்கள்:


1) பிதா கிரியை செய்வது போல இயேசுவும் கிரியை செய்கிறார்:

பிதா எப்படி கிரியை செய்கிறாரோ அப்படியே தானும் கிரியை செய்கிறார் என்று இயேசு சொல்கிறார். இஸ்லாமியர்களே சிறிது சிந்தியுங்கள், அல்லா எப்படி கிரியை செய்வாரோ அப்படியே நானும் செய்கிறேன் என்று யாராவது சொன்னதுண்டா? சாதாரண மனிதனோ, அல்லது நபியோ சொல்லமுடியுமா?

இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு புரிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால், பழைய ஏற்பாட்டை கரைத்து குடித்த யூத ஆசாரியர்களுக்கு தெளிவாக‌ புரிந்துவிட்டது, இவன் ஏன் தன்னை பிதாவிற்கு சமமாக பாவிக்கிறான் என்றுச் சொல்லி, இயேசுவை கொலை செய்ய வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தார்கள் இந்த யூத குருமார்கள்.

யோவான் 5:16. இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக்கொலைசெய்ய வகைதேடினார்கள்.17. இயேசு அவர்களை நோக்கி, என்பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்து வருகிறேன் என்றார்.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதாஎன்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே , யூதர்கள் அவரைக்கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.



2) பிதா எவைகளை செய்வாரோ, அவைகளை அப்படியே குமாரனும் செய்வார்:

இயேசு ஒரு நபியாக மட்டும் இருந்தால், இது எப்படி சாத்தியமாகும்? அதாவது பிதா எவைகளை செய்வாரோ அவைகளைப் பார்த்து, அதே போல குமாரனும் செய்வார் என்று இயேசு எப்படி சொல்கிறார்?

இறைவன்(அல்லா) எவைகளை செய்வாரோ அவைகளை எல்லாம் இயேசு "அப்படியே" செய்வேன் என்றுச் சொல்கிறார். இறைவனுக்கு சமமாக யார் இப்படி சொல்லமுடியும்?

யோவான் 5:19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி,வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்

John 5: 19 Jesus gave them this answer: "I tell you the truth, the Son can do nothing by himself; he can do only what he sees his Father doing, because whatever the Father does the Son also does. (NIV)

John 5:19 Then Jesus answered and said to them, "Most assuredly, I say to you, the Son can do nothing of Himself, but what He sees the Father do; for whatever He does, the Son also does in like manner. (NKJV)



ஆங்கில மொழிபெயர்ப்பில் பாருங்கள், whatever the Father does the Son also does. (NIV) என்று மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்? "அல்லா செய்யும் எல்லா வேலையும் என்னால் செய்யமுடியும் என்று ஒருவர் சொன்னால் " அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

ஒன்று, இயேசு இறைவனுக்கு (அல்லாவிற்கு) சமமானவராக இருக்கவேண்டும்

அல்லது

இவர் (இயேசு) ஒரு "மனநிலை சரியில்லாதவராக" இருக்கவேண்டுமே தவிர , இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. எந்த தீர்க்கதரிசியும் தன்னை இறைவனுக்கு சமமாக பேசமாட்டார்.

கிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவன் என்று நம்புவது இதனால் தான்.

3) பிதா மரித்தோரை எழுப்புகிறது போல, இயேசுவும் தமக்கு சித்தமானவர்களை எழுப்புவாராம்:

எப்படி பிதா மரித்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறாரோ அதே போல இயேசுவும் தனக்கு விருப்பமானவர்களுக்கு அவர்கள் மரித்து இருந்தாலும் உயிர் தருவாராம்.

இப்படி சொல்ல ஒரு நபிக்கு எங்கேயிருந்து தைரியம் வரும்?

ஒருவர் நபி மட்டும் இருந்தால் இப்படி இறைவனுக்கு சமமாக சொல்லமுடியுமா?


இறைவனுக்கு சமமாக இருந்தால் தான் இப்படியெல்லாம் சொல்லமுடியும்.


யோவான் 5:20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக்காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதானகிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களைஉயிர்ப்பிக்கிறார்.



பிஜே அவர்களின் கவனத்திற்கு: ஒன்றை மட்டும் நான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், இயேசு நபி மட்டும் தான் என்று நிருபிக்க, நீங்கள் வேண்டுமானால் குர்‍ஆனை பயன்படுத்திக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஏற்ற வசனங்கள் கிடைக்கலாம். ஆனால், பைபிளின் உதவியோடு அதை நிருபிக்கவேண்டுமானால், அது முடவன் எந்த உதவியும் இல்லாமல் இயமமலை உச்சியை அடையவேண்டும் என்று ஆசைப்படுவது எப்படி இயலாத ஒன்றோ அதே போலத்தான் இதுவும். நான் சொல்ல விரும்புவது இது தான், நம்பினால் பைபிளின் எல்லா வசனங்களையும் நம்பவேண்டும், நம்பவில்லையானால், எல்லா வசனங்களையும் விட்டுவிடுங்கள், ஒரு சில வசனங்களை மட்டும் பைபிளிலிருந்து எடுத்து பொருள் கூறினால், அது உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற உதவாது.

4) இறைவனை எப்படி கனப்படுத்துகிறோமோ அதே போல இயேசுவையும் கனம் செய்யவேண்டுமாம்: அதனால் தான் உலகத்தை, முஸ்லீம்களையும் சேர்த்து நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளார்.

அல்லாவிற்கு கொடுக்கும் மதிப்பு, கனம் முகமதுவிற்கு கொடுக்கமுடியுமா? கொடுக்கமுடியாது என்பது தானே உங்கள் பதில். ஆனால், இங்கு இயேசு சொல்கிறார், எனக்கு அப்படிப்பட்ட கனம் கொடுக்கவேண்டும் என்பதற்காக, உலகத்தை (முஸ்லீம்களையும் சேர்த்து தான்) நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளாராம். எனவே, அல்லா நியாயம் தீர்ப்பார் என்று பயப்படும் முஸ்லீம்கள், இயேசுவின் முன்பு தான், நியாயத்தீர்ப்பு நாளன்று நிற்கவேண்டும். இதை நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, வசனம் அப்படி சொல்கிறது.

யோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.



5) இறைவன் தானே உயிருள்ளவராக இருப்பது போல, இயேசும் தானே உயிருள்ளவர்:

கீழே உள்ள வசனங்களில் 26ம் வசனத்தை பாருங்கள், இறைவன் எப்படி தானே உயிருள்ளவராக இருக்கிறாரோ, அதே போல இயேசும் தனக்கு தானே உயிருள்ளவராக இருக்கிறாராம்.

யோவான் 5:23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்றுமெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.25. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதேவந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவேஉங்களுக்குச் சொல்லுகிறேன். 26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும்தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார். 27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்அவருக்குக் கொடுத்திருக்கிறார்.28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.



இப்படி இறைவன் இருப்பதால் தான் "அனாதி தேவன்" என்றும், "ஆதியும் அந்தமும் " என்றும் கூறுவார்கள். இப்படி இயேசு அனாதியாய் இருக்கிறார் என்று சொல்கிறார்.

இதைத் தான் "ஆதியில் வார்த்தையிருந்தது" என்று யோவான் 1:1 சொல்கிறது.

இயேசு கூட "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னால் நான் இருக்கிறேன் " என்றார்.


யோவான்: 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டுகளிகூர்ந்தான் என்றார்.57. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.58. அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார் .



இப்படியெல்லாம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றியும், தீர்ப்பு நாளில் தான் நியாயம் தீர்க்கப்போவதையும் சொல்லிவிட்ட பின்பு தான், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனம் யோவான் 5:30 வருகிறது . இப்போது அவ்வசனத்தை படித்துப்பார்த்தால் தான் சரியான பொருள் கிடைக்கும்.

பிஜே அவர்கள் எழுதியது:

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. (லூக்கா 11:20)



ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசு பிசாசுக்களை துரத்துவதை சகிக்க முடியாத சில ஆசாரியர்கள், இவர் பிசாசின் தலைவனாலே துரத்துகிறான் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் போது இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்கிறார்.

யூத ஆசாரியர்களிலும் சிலர் "தேவனின் பெயரிலே" பிசாசுக்களை துரத்துகிறார்கள், யூதர்கள் அப்படி பிசாசுக்களை துரத்தும் போது, இந்த ஆசாரியர்கள் " பிசாசின் தலைவனால் துரத்துகிறார்கள்" என்றுச் சொல்லவில்லை. ஆனால், இயேசு துரத்தும் போது மட்டும், இப்படி அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தான், இயேசு கீழ் கண்டவாறு கேள்வி எழுப்புகிறார், அதன் பிறகு, " தான் " எப்படி பிசாசுக்களை துரத்துகிறேன் என்று விவரிக்கிறார். இந்த பகுதியைத் தான் பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம்.

லூக்கா 11:19. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் ? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.20. நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.



நீங்களும்(யூதர்களும்) பிசாசுவின் தலைவனாலே துரத்துகிறீர்களா? என்று இயேசு கேட்டபோது அவர்கள் வாய் அடைத்துபோனார்கள்.



பிஜே அவர்கள் எழுதியது:

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22,23)

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை. (மத்தேயு 7:21)

இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில்(சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.

மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப் படி அவர் விரும்பிய போது செய்து காட்டையவை தான் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.

இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறிஸ்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?



ஈஸா குர்ஆன் பதில்:

பிஜே அவர்களே, தெரிந்தோ தெரியாமலோ மத்தேயு 7:21-23 வசனங்களை மேற்கோள் காட்டி மிகப்பெரிய பிழையை செய்துள்ளீர்கள்.

மத்தேயு 7:21-23 வசனங்கள் நீங்கள் நம்புகிறபடியால் (அ) குறிப்பிட்ட படியால், இயேசுவைப் பற்றி கீழ் கண்ட விவரங்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள்.

1. முஸ்லீம்களையும் மற்ற உலக மக்களையும் இயேசு நியாயம் தீர்க்க நியாயாதிபதியாக உள்ளார்.

2. மக்களை இயேசு நியாயம் தீர்த்து பரலோகத்தில் அவர்களை அனுமதிக்கும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.




நீங்கள் ஒரு வேளை, "இல்லை, இல்லை அல்லா தான் எல்லா மக்களையும் தீர்ப்பு நாளில் நியாயம் தீர்ப்பார், இயேசு அல்ல" என்று சொல்லலாம். அப்படியானால், ஏன் இந்த வசனங்களை நீங்கள் குறிப்பிட்டீர்கள். குறைந்தபட்சம் இவ்வசனங்களை முழுவதுமாக புரிந்துக்கொண்டு அவைகளை பயன்படுத்தியிருக்கலாம். இயேசுவை நியாயாதிபதியாக காட்டும் வசனங்களை குறிப்பிட்டு இருக்கக்கூடாது.

சரி, இந்த வசனங்களின் உண்மைப் பொருள் என்ன? இவைகளில் தீர்ப்பு நாளின் நீதிபதியாக இயேசு இருப்பார் என்று சொல்லியுள்ளாரா? இல்லையா? என்பதை இப்போது காணலாம்.


1. இயேசு தீர்ப்பு நாளில் நியாயம் தீர்க்கபோகிறவர், அல்லா அல்ல.

அல்லா எல்லா மக்களையும் தீர்ப்பு செய்வார் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆனால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம் "இயேசு தான் தீர்ப்பு செய்வார்" என்றுச் சொல்கிறது.

இந்த கட்டுரையின் முன் பகுதியில் நான் குறிபிட்ட வசனம் யோவான் 5:22ன் படி, எல்லா மக்களையும் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் அனைத்தும் தேவன் இயேசுவிடம் ஒப்படைத்து இருப்பதாக இயேசு சொல்கிறார். அதே விவரங்களைத் தான் இயேசு இந்த மத்தேயு 7:21,23 வசனங்களில் சொல்கிறார்.

யோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் .



2. மத்தேயு 7:22 வசனம் குறிப்பிடும் "அந்நாளில்" என்பது எதை குறிக்கும்?

மத்தேயு வசனம் 7:22ல் குறிப்பிடும் "அந்நாளில்" என்பது, உலக "நியாயத்தீர்ப்பு நாளைக் குறிக்கும் ". இதை ஏன் பிஜே அவர்கள் கவனிக்கவில்லை.

Many will say to me on that day , "Lord Lord, did we not prophesy in your name, and in your name drive out demons and perform many miralces?" (Matthew 7:22 NIV Study Bible)

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22-23)



பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய மத்தேயு 7:22-23 வசனங்களில் சொல்லப்பட்ட உரையாடல் இயேசு வாழ்ந்த காலத்தில் நடக்கும் என்று இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக இந்த உரையாடல் எதிர்காலத்தில் அதுவும் இயேசு ஒரு நியாயாதிபதியாக மக்களுக்கு தீர்ப்பு வழங்கிக்கொண்டு இருக்கும் போது நடக்கும் உரையாடல் இது என்று இயேசு சொல்கிறார்.

இயேசு எப்போதும் பாவிகளோடு உணவு சாப்பிடுகிறார் என்று ஆசாரியர்கள் குற்றம்பிடித்தார்கள், இயேசுவும், நான் பாவிகளுக்காகவே வந்தேன் என்றுச் சொல்லி, எல்லாரையும் மன்னித்தார், ஆனால், இந்த வசனத்தில் மட்டும் ஏன் அவர் துன்மார்க்கமாய் வாழ்ந்தவர்களை தள்ளிவிடுகிறார்? இதற்கு காரணம், அவரது முதல் வருகை உலகை நியாயம் தீர்ப்பதற்காக அல்ல, ஆனால், அவர் இரண்டாம் முறை வரும் போது, நீயாயம் தீர்க்க நீதிபதியாக வருவார், அதனால் தான், என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களை அனுப்பிவிடுகிறார்.

3.இயேசுவின் பெயரை பயன்படுத்தி "தீர்க்கதரிசனம், அற்புதங்கள் நடக்கும்" :

தீர்க்கதரிசனம் என்பது, இறைவன் மக்களுக்கு சொல்லும்படி தன் பிரதிநிதிக்கு அறிவிக்கும் செய்தி. அதை மக்களுக்கு அவர் அறிவிப்பார். அவரை நாம் தீர்க்கதரிசி என்றுச் சொல்கிறோம்.

இப்போது பிஜே அவர்களுக்காக‌ ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்:

எந்த ஒரு "நபிவுடைய" பெயரை பயன்படுத்தி "யாராவது தீர்க்கதரிசனம்" சொல்லமுடியுமா?

அதாவது, "அல்லா உரைப்பது என்னவென்றால்..." என்று முகமது தீர்க்கதரிசனம் சொன்னார் என்று நம்புகிறீர்கள் அல்லவா? அது போல, ஒரு நபியுடைய பெயரை பயன்படுத்தி, யாராவது தீர்க்கதரிசனம் உரைக்கமுடியுமா?

உதாரணத்திற்கு: "கர்த்தர் உரைப்பதாவது என்னவென்றால்" என்று பைபிளிலும், "அல்லா உரைப்பது என்னவென்றால்" என்று குர்‍ஆனிலும் வருவது போல, " மோசே உரைப்பது என்னவென்றால் ", என்று சொல்லி யாராவது தீர்க்கதரிசனம் உரைக்க முடியுமா? ஆனால், இயேசுவின் பெயரை பயன்படுத்தி தீர்க்கதரிசனம் உரைத்தோம் என்று மக்கள் அவ்வசனத்தில் சொல்கின்றனர். இதே போலத்தான் யோவானும் தனக்கு இயேசுவின் மூலமாக வெளியாக்கப்பட்ட தீர்க்கதரிசன வசனங்களை பதிவுசெய்துள்ளார்.

நீங்கள் குறிப்பிட்ட வசனம் மத்தேயு 7:21-23 சொல்கிறது, அனேகர், இயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார்களாம், அற்புதங்கள் செய்தார்களாம். இயேசு ஒரு நபி மட்டும் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இது எப்படி சாத்தியமாகும்?



இயேசுவின் பெயரை பயன்படுத்தி அற்புதங்கள் செய்யப்பட்டதா? என்று தெரிந்துக்கொள்ள, பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:

இயேசுவின் பெயர் படுத்தி அற்புதம்: இயேசுவின் நாமத்தினாலே எழுந்து நட என்று யோவானும், பேதுருவும் ஒரு முடவனுக்குச் சொல்லி அற்புதத்தை செய்தார்கள், அப்போஸ்தலர் நடபடிகள் 3:1-8 வசனங்கள் .

அப் 3:1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களித்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4 பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தோலயத்திற்குள் பிரவேசித்தான்.



இயேசுவின் மூலம் தீர்க்கதரிசனம்: யோவானுக்கு இயேசு தரிசனம் கொடுத்து கடைசி காலங்களில் நடக்கும் விவரங்களை தீர்க்கதரிசனமாக சொன்னார், அது இப்போது புதிய ஏற்பாட்டில் உள்ள கடைசி புத்தகமாகிய " வெளிப்படுத்தின விசேஷம் " என்ற புத்தகம்.

இயேசுவின் பெயர் மூலம் பிசாசுக்களை துரத்துதல்:

இயேசு தன் பெயர் மூலமாக பிசாசுகளை துரத்த தன் சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், அவர்கள் சென்று அப்படியே செய்து மறுபடியும் வந்து ஆமாம், அசுத்த ஆவிகள் கூட எங்களுக்கு கீழ்படிகிறது என்று சொன்னார்கள்.

மத்தேயு 10:1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

மத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.

லூக்கா 10:17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவநது, ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18. அவர்களை அவர் நோக்கி, சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.20. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.



இந்த அற்புதங்கள் இயேசுவின் பெயரினாலே செய்யப்பட்டவைகள், இது போல பல அற்புதங்களை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.

நான் ஏன் இந்த விவரங்கள் இங்கு குறிப்பிட்டேன் என்றால், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில் பலர் இப்படி இயேசுவிடம் தங்கள் மூலம் நடைபெற்ற அற்புதங்களை முன்வைத்து பரலோகத்தின் உள்ளே செல்லலாம் என்று நினைத்து அனுமதி கேட்கிறார்கள். இயேசு ஏன் அவர்களை பரலோகத்தில் அனுமதிக்கவில்லை என்பதை கீழே விளக்குகிறேன். இங்கு முக்கியமாக சொல்லவந்த செய்தி, "இயேசுவின் பெயரில் அற்புதங்கள், தீர்க்கதரிசனம், பிசாசுக்களை துரத்தப்படுதல்" நடந்துள்ளது என்பதே . இந்த வசனத்தை பிஜே அவர்கள் இதை தெரிந்துக்கொள்ளாமல் குறிப்பிட்டது, தான் இன்னும் ஆச்சரியம்.

இயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பதை பிஜே அவர்கள் அங்கீகரிக்கிறாரா?

இயேசுவின் பெயரில் அற்புதங்கள் நடைபெற முடியும் என்பதை பிஜே அவர்கள் ஒப்புக்கொள்கிறாரா?

இயேசுவின் பெயரில் பிசாசுக்களை துரத்தமுடியும் என்பதை பிஜே அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?

"இல்லை, நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்வாரானால், பின் ஏன் இந்த வசனத்தை மேற்கோள் காட்டினீர்கள்?" என்பது தான் என் கேள்வி.



4. இயேசுவின் பெயர் மூலம் அற்புதங்கள், தீர்க்கதரிசனங்கள் சொன்னவர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை?

இப்போது ஒரு நியாயமான கேள்வி எழும்பும், அதாவது "இயேசு " என்ற பெயர் மூலமாக பல அற்புதங்கள் செய்தவர்களை, தீர்க்கதரிசனம் சொன்னவர்களை, பிசாசுக்களை துரத்தியர்வர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை. அவர்களை "அறியேன்" என்று ஏன் சொன்னார்?

இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது இயேசுவை உண்மையாய் பின்பற்றுகின்ற ஒரு நபரின் ஜெபத்தை கேட்டு, இயேசு பல அற்புதங்களை செய்கிறார். மக்களை சுகமாக்க, அவர்களில் உள்ள அசுத்த ஆவிகளை துரத்த இயேசு தன் ஊழியர்களை(போதகர்களை, சுவிசேஷகர்களை...) பயன்படுத்திக்கொள்கிறார். இன்று கூட தன் ஊழியர்கள் மூலம் இயேசு அற்புதங்கள் செய்துக்கொண்டு வருகிறார்.

இன்று நாம் சில ஊழியர்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கலாம். ஒரு காலத்தில் நல்ல ஊழியர்களாக இருந்தவர்கள், இயேசுவிற்காக அதிகமாக கடினமாக உழைத்தவர்கள், திடீரென்று பண ஆசை பிடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி, பிடிபட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர், சில பெண்கள் விவகாரங்களில் மாட்டிக்கொண்டு, சிறைச்சாலை செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் உண்மையாய் இருந்தவர்கள், ஆனால், சிலர் உலகம் தான் முக்கியம் என்று ஆசை வைத்து குற்றம் செய்து இயேசுவின் வழியை விட்டு விலகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் "அக்கிரம செய்கைக்காரர்களே, என்னைவிட்டு போய் விடுங்கள்" என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து கூட‌ , இயேசுவிடமிருந்து அதிகாரத்தை பெற்றவன் தான், பிசாசுக்களை துரத்தியவன் தான், ஆனால், எப்போது தவறு செய்தானோ, அந்த நேரத்திலிருந்து அவன் தன் இரட்சிப்பை இழந்துவிட்டான்.

எனவே, ஒரு மனிதன் கிறிஸ்தவத்தில் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் அல்ல, தன் கடைசி மூச்சு வரையில் இயேசுவின் கட்டளைப் படி பரிசுத்தமாக வாழவேண்டும். முதல் பல ஆண்டுகள் பரிசுத்தமாக வாழ்ந்து பிறகு துன்மார்க்கமான‌ வாழ்வு வாழ்ந்தால், அவனுக்கு இயேசு சொல்லும் வார்த்தைகள் " நான் உன்னை அறியவில்லை " என்பது தான்.

நாம் இயேசுவின் வார்த்தகள் கேட்கிறவர்களாக மட்டுமல்ல, அதன் படி செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்று இயேசு நீங்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்தில் சொல்கிறார்.

இயேசுவின் கட்டளைகளை பின்பற்றுகிறவர்களை கல்லின் மீது வீடுகட்டுகிறவனுக்கு இயேசு ஒப்பிடுகிறார். அப்படி அவரது கட்டளைகளை பின்பற்றாதவர்கள் மணலின் மீது வீடு கட்டுகிறவர்களுக்கு ஒப்பிடுகிறார். இந்த மணலின் மீது வீடு கட்டுகிறவர்கள் போலத்தான், அந்நாளில் வந்து நாங்கள் அற்புதங்கள் செய்தோம் என்று காரணங்கள் காட்டி இயேசுவிடம் அனுமதி கேட்கிறார்கள்.

மத்தேயு 7:24-27 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது . நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.



எனவே, நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் (மத்தேயு 7:22 முதல் 23 வரை ) இயேசு தன் இரண்டாம் வருகையில் நடக்கும் நியாயத்தீர்ப்புப் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நீதிபதியாக வருவார் என்று தன்னை அறிமுகம் செய்கிறார், எல்லாரும் தன்னிடமே கடைசியில் நியாயத்தீர்ப்புக்காக நிற்கவேண்டும் என்றுச் சொல்கிறார். நான் சொல்வதை மட்டும் கேட்டால் போதாது அதன் படி செய்பவர்களை மட்டுமே நான் சொர்க்கத்தில் அனுமதிப்பேன் என்று இயேசு சொல்கிறார். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கை எவ்வளவு கடுமையான புயல் வந்தாலும், மழை பெய்தாலும் அசைக்கமுடியாதது என்று அப்படிப்பட்டவர்களை இயேசு உட்சாகப்படுத்துகிறார்.



பிஜே அவர்கள் எழுதியது:

அங்கே அவர் சில நோயாளிகளின்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலேசுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார். (மாற்கு: 6:5,6)

இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறோன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள்.

ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.

அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு: 12:38,39)

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.



ஈஸா குர்‍ஆன் பதில்:

இந்த பகுதிக்கு நான் "இயேசு ஏன் சில நேரங்களில் அற்புதங்கள் செய்யவில்லை – பாகம் 1 " என்ற கட்டுரையில் பதில் அளித்துள்ளேன். இக்கட்டுரையை இந்த தொடுப்பில் படிக்கலாம் : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjJesusMiracle-1.htm .


பிஜே அவர்கள் எழுதியது:

மேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். (மத்தேயு 9:8)

அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.



ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்களே, ஏதோ ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு அல்லது சில மனிதர்கள் சொன்னதை ஆதாரமாக் காட்டி, மற்ற இடங்களில் மக்கள் இயேசுவைப் பற்றி என்ன என்று சொல்கிறார்கள் என்பதை குறிப்பிடாமல், நீங்கள் எழுதுகிறீர்கள்.

இயேசு வாழ்ந்த அதே காலத்து மக்கள் அவரைப் பற்றி வேறு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை கீழே தருகிறேன். இந்த வசனங்கள் எல்லாம் பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா? ஏன் இவ்வசனங்களை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்?

1. காபிரியேல் தூதன் கூட, இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னார் (லூக்கா 1:32,35)

2. யோவான் ஸ்நானகன் கூட "இயேசு தேவகுமாரன்" என்றுச் சொல்லியுள்ளார் (யோவான் 1:34)

3. யூத மூப்பர்கள், ஆசாரியர்கள் இயேசுவிடம் "நீ தேவகுமாரனா?" என்று கேட்டபோது, "இயேசு ஆம், நான் அவர் தான் என்றார்" (லூக்கா 22:70)

4. நாத்தன்வேல் என்ற யூதனும் "இயேசுவை தேவகுமாரன்" என்றுச் சொல்கிறார் (யோவான் 1:49)

5. இயேசுவை சிலுவையில் அறைந்த ஒரு இராணுவ சேவகர்களின் தலைவனும் , இயேசுவை "தேவகுமாரன்" என்றுச் சொன்னான் (மத்தேயு 27:54, மாற்கு 15:39)

6. பேதுரு இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:16)

7. ஒரு முறை படகில் இருந்த சீடர்கள் , கடல் கொந்தலிப்பதை இயேசு அமர்த்தியதால், இயேசு தேவ குமாரன் என்று அறிக்கையிட்டார்கள், பணிந்துக்கொண்டார்கள். (மத்தேயு 14:33)

8. அசுத்த ஆவிகள் மனிதர்களை விட்டு போகும் போது, அவைகளும் இயேசு தேவகுமாரன் என்று அறிக்கையிட்டு வெளியேறியது (மத்தேயு 8:29, மாற்கு 3:11)

9. சாத்தான் இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொல்கிறான் , தேவகுமாரனாகிய மேசியாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்களும் அவனுக்கு தெரிந்திருக்கிறது (மத்தேயு 4:3, 4:6)

இந்த வசனங்கள் "இயேசு தேவகுமாரன் " என்று சொன்ன "வார்த்தைகள் " வரும் வசனங்கள் தான். இன்னும் பல விதங்களில் பலர் இயேசுவைப்பற்றி சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. (தாவீதின் குமாரனே, கிறிஸ்து, etc.. என்றும் சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் குறிப்பிடவில்லை).

பிஜே அவர்களே, நீங்கள் மக்கள் ஒரு முறை சொன்ன வசனத்தை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள். எத்த்னைப் பேர் "இயேசு தேவகுமாரன் என்று" சொல்லியுள்ளார்கள் பார்த்தீர்களா?

காபிரியேல் தேவதூதன், யோவான் ஸ்நானகன், யூத ஆசாரியன் நாத்தன்வேல், இயேசுவின் சீடர்கள், சாத்தான் என்ற இப்லீஷ், அசுத்த ஆவிகள், என்று எல்லாரும் சொல்லியுள்ளார்கள். அவ்வளவு ஏன், இயேசுவை மூப்பர்கள், ஆசாரியர்கள் கேட்டபோது மௌனமாக இல்லாமல், தான் "ஒரு தேவகுமாரன்" என்று இயேசுவே சொல்லியுள்ளார்.

அதாவது, காபிரியேல் தூதன் மூலம் அல்லா குர்‍ஆனை சிறிது சிறிதாக முகமதுவிற்கு இறக்கினார் என்று நம்புகின்ற நீங்கள், அதே காபிரியேல் தூதன் முதல், இப்லீஸ் என்ற சாத்தான் வரை, இயேசுவை "தேவகுமாரன்" என்று அறிக்கையிட்டுள்ளார்கள், இதற்கு உங்கள் பதில் என்ன? மனிதர்கள் சிலர் சில நேரங்களில் சொன்ன வார்த்தைகளை நம்பும் நீங்கள், தேவ தூதன் சொல்வதை நம்பமாட்டீர்களா? தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானகன் சொல்வதை நம்பமாட்டீர்களா? அப்படியானால், இதே காபிரியேல் மூலம் உங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று "கிறிஸ்தவர்கள்" எப்படி நம்புவது?

எனவே, இயேவை தேவகுமாரன் இல்லை என்று நிருபிக்க பைபிளை பயன்படுத்துகிறவர்கள் தோல்வி அடைவார்கள் என்று நான் எல்லாருக்கும் சொல்லிக்கொள்ளுகிறேன்.

கர்த்தருக்கு சித்தமானால், பிஜே அவர்களது புத்தகமாகிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் உள்ள மற்ற விவரங்களுக்கு பதில் அளிக்கும் போது சந்திக்கலாம்.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjJesusMiracle-2.htm

Tuesday, December 18, 2007

TNTJ தலைவர் பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை?


பாகம் - 1


பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "அற்புதம் நிகழ்த்தியது எப்படி?" என்ற தலைப்பில் கீழ் கண்ட விவரங்களைச் சொல்கிறார்.

பிஜே அவர்கள் சொல்லவந்த செய்தியின் சுருக்கம் இது தான்:

1. மக்கள் சில நேரங்களில் அதிக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்தும், அவைகளைச் செய்துக்காட்டி, தன்னை கடவுளாக இயேசு நிருபித்துக்கொள்ளவில்லை. ஆகையால் தான் மக்கள் அவர் மீது அவிசுவாசம் கொண்டனர்.

2. இயேசு ஒரு கடவுள் இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்ளலாம்.

Source: http://www.onlinepj.com/book/mahana8.htm



ஈஸா குர்ஆன் பதில்: நான் பாகம் 1 ல், மேலே கேட்கப்பட்ட பொதுவான கேள்விக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பாகம் 2 ல் பிஜே அவர்கள் இந்த தலைப்பின் கீழ் எழுதிய‌ எல்லா வரிகளுக்கும் பதிலைத் தருகிறேன்.

பாகம் - 1:

பிஜே அவர்களின் கேள்வி: ஏன் இயேசு சில நேரங்களில் அற்புதங்கள் செய்யவில்லை?


இந்த பதிலில், பிஜே அவர்கள் பைபிள் வசனங்களை எப்படி புரிந்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும், இல்லாத ஒன்றை எப்படி அவர் மிகவும் அழகாக இருப்பதாக‌ கற்பனை செய்துக்கொண்டு புத்தகம் எழுதுகிறார் என்பதையும் முதலாவது விளக்குகிறேன்.


1. பிஜே அவர்களின் கற்பனை – 1

பிஜே அவர்கள் எழுதியதை கூர்ந்து கவனியுங்கள், "மக்கள் இயேசுவிடம் அதிக எண்ணிக்கையில் அற்புதங்கள் செய்யும்படி எதிர்பார்த்தார்களாம். ஆனால், இயேசு செய்யவில்லையாம் ".


பிஜே அவர்கள் எழுதியது:

அங்கே அவர் சில நோயாளிகளின்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலேசுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார். (மாற்கு: 6:5,6)

இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறோன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.

Emphasis mine


பிஜே அவர்களே, சிறிது அந்த வசனங்களை(மாற்கு: 6:5,6) மறுபடியும் படித்துப்பாருங்கள்.


1. இந்த வசனத்தில் மக்கள் இயேசுவிடம் அதிகமாக அற்புதங்கள் செய்யுங்கள் என்று கேட்டதாக அல்லது எதிர்பார்த்ததாக ஏதாவது வரிகள் எழுதப்பட்டுள்ளதா?

2. உங்களுக்கு எங்கேயிருந்து இந்த விவரம் தெரிந்தது?

3. மக்கள் அவர் மீது விசுவாசம் வைக்கவில்லை என்ற காரணத்தினால் அவர் அற்புதம் செய்யவில்லையா? அல்லது இயேசு அற்புதம் செய்யவில்லை என்ற காரணத்தினால் மக்கள் அவிசுவாசம் கொண்டார்களா?

4. இயேசு அற்புதம் செய்வதற்கு முதலாவது அம்மக்கள் அவரை விசுவாசிக்கவேண்டும், அவர்கள் அற்புதத்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும், அதன் பிறகு தான் இயேசு அற்புதம் செய்வார். இந்த வசனத்தில் " அவர்களின் அவிசுவாசத்தினால் தான் இயேசு அற்புதம் செய்யவில்லையென்று மிகவும் தெளிவாக சொல்லியிருந்தும் " இப்படி நீர் எழுதுவது, மிகவும் மனதிற்கு சங்கடமாக உள்ளது.

5. ஒரு வசனத்திற்கு (புதிய) பொருள் கூறுவதற்கு முன்பாக, மற்றவர்களுடைய வேதத்தின் வசனத்தை கையாளுவதற்கு முன்பாக அவ்வசனத்தின் முந்தைய பிந்தைய வசனத்தை படிக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

6. நீங்கள் குறிப்பிட்ட அதே மாற்கு 6ம் அதிகாரத்தின் 2ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது, "இயேசுவின் மூலம் செய்யப்பட்ட பலத்த செய்கைகளினால், அம்மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று ". இதை நீர் கவனிக்கவில்லையா?
மாற்கு: 6:2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார்.அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்துவந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படிஇவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?


7. ஆகையினால், இப்படி பல அற்புதங்களை கண்டும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை என்று தான் இயேசு அற்புதம் செய்யவில்லை என்பது தெளிவாக புரிகிறது, ஆனால் பிஜே அவர்களுக்கு எப்படி புரியாமல் போனது என்பது தான் புதிராக உள்ளது.


2. பிஜே அவர்களின் கற்பனை – 2

பிஜே அவர்கள் எழுதியது:

அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள்.

ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.

Emphasis mine


பிஜே அவர்களே, யூதர்கள் அவிசுவாசம் கொண்டதற்கு காரணம், தெரிந்துக்கொள்ளவேண்டுமானால், நீங்கள் குறிப்பிட்ட மாற்கு 6ம் அதிகாரம் முதல் வசனத்திலிருந்து படிக்கவேண்டும்.

அவர்கள் அவிசுவாசம் கொண்டதற்கும், அவர் அங்கு அற்புதங்கள் செய்யாமல் இருந்ததற்கும் காரணங்கள்:
1. இது இயேசு வளர்ந்த ஊர் , அதாவது அவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த ஊர். (மாற்கு 6:1)

2. சொந்த ஊராக இருந்தும், அங்கு அவர் அற்புதங்கள், (பலத்த செய்கைகள் – Mighty Works) செய்துள்ளார் . (மாற்கு 6:2)

3. இவருடைய ஞானம், பலத்த அற்புதங்கள் கண்டு (கவனிக்கவும் பிஜே அவர்களே) தேவாலயத்தில் உள்ளவர்கள் அனைவரும் பிரமித்தார்கள், ஆச்சரியப்பட்டார்கள். (மாற்கு 6:2)

4. இருந்தாலும் சொந்த ஊர் என்பதால், இவர்களால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை , எனவே இவரது முழு குடும்ப சரித்திரத்தை சொல்கிறார்கள், இவரது தொழில் பற்றிச் சொல்கிறார்கள். (மாற்கு 6:3)

5. கண்களால் அற்புதங்களைக் கண்டும் இவர்கள் இவர் மீது விசுவாசம் வைக்கவில்லை, எனவே தான் இயேசு " ஒரு தீர்க்கதரிசிக்கு தன் சொந்த ஊரில் தான் அதிக அவமானம் அல்லது கனவீனம் நடக்கும் என்றுச் சொன்னார்." (மாற்கு 6:3-4)

6. இவ்வளவு விவரங்கள், நிகழ்வுகள் நடந்தபின்பு தான் நீங்கள் குறிப்பிட்ட வசனம் வருகிறது , அதாவது, இவர்கள் இயேசுவின் அற்புதங்கள் கண்டும், ஆச்சரியப்பட்டும் கூட நம்பிக்கை கொள்ளாததினால், தான் அவர் சிலரை சுகமாக்கி, இவர்களின் அவிசுவாசத்தைப்பற்றி ஆச்சரியப்பட்டு, அவ்விடத்திலிருந்து புறப்பட்டு வேறு இடங்களில் பிரசங்கித்தார் என்று வசனம் சொல்கிறது.


3. அற்புதம் பெற்றுக்கொள்ள முதலாவது நம்பிக்கை வேண்டும்:

இயேசு அற்புதங்களை தேவையில்லாமல் செய்ததில்லை. அதாவது:

1. தேவையுள்ளவர்கள் அவரிடம் கேட்கும் போதும், அவர்கள் விசுவாசம் உள்ளதென்று அவர்கள் தங்கள் வாயால் சொல்லும் போதும், அவர் அற்புதம் செய்துள்ளார்.

2. தான் கிறிஸ்துவாகிய மேசியா என்பதை நிலை நாட்ட அற்புதம் செய்தார்

3. சில நேரங்களில் மக்களின் அவல நிலையை பார்த்து கேட்காமலேயே அற்புதம் செய்துள்ளார்.

ஆனால், உம்மை நம்பமாட்டேன் விசுவாசிக்க மாட்டேன் என்று சொல்கிறவர்களுக்கு அவர் அற்புதம் செய்யவில்லை .

ஒரு முறை ஒரு குருடன் "இயேசுவே தாவீதின் குமாரனே" என்று அழைக்கிறான், சீடர்கள் அவனை அதட்டுகிறார்கள், இயேசு அவனை அழைத்து என்ன வேண்டும் என்று கேட்கிறார்? அவன் சொல்கிறான் எனக்கு பார்வை வேண்டும். பிறகு அவனுக்கு பார்வை தருகிறார் இயேசு. ஒரு குருடனுக்கு என்ன வேண்டும் என்று இயேசுவிற்கு தெரியாதா? இருந்தாலும், அவன் விசுவாசம் என்ன என்று கேட்கிறார் , அவன் வாயாலேயே நான் நம்புகிறேன் என்று சொன்னபிறகு இயேசு அற்புதம் செய்கிறார். அந்த குருடன் நம்பிக்கை உண்டு என்று சொல்வதை அங்குள்ள மக்கள் அனைவரும் கேட்கிறார்கள்.

வியாதியோடு இருந்தும், இயேசுவிடம் வந்து சுகத்தை கேட்கவில்லையானால் எப்படி இயேசு அற்புதம் செய்வார், தேவை யாருக்கு இயேசுவிற்கா? இல்லை மனிதனுக்கா? எனவே, சுகத்தை பெற்றுக்கொள்ள மனிதர்கள் தயாராக இல்லை என்றுச் சொன்னால், இயேசு அற்புதம் செய்யப்போவதில்லை. அவர் சுகமாக்குவார் என்று நம்பவேண்டும், விசுவாசம் வைக்கவேண்டும், அப்போது தான் அவர் செய்வார். அற்புதங்களானாலும் சரி, நற்செய்தியானாலும் சரி கட்டாயத்தின் பேரில், வேண்டாமென்றுச் சொன்னால், யார் கழுத்திலும் கத்தியை வைத்து இயேசு கட்டாயப்படுத்தமாட்டார். அவரிடம் கேட்டால் தான் அற்புதம், நற்செய்தி - வேண்டாமென்றால், அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார், அப்படி சென்றுவிடுங்கள் என்று தன் சீடர்களுக்கும் சொல்லியுள்ளார், இஸ்லாம் போல கட்டாயமான எற்றுக்கொள்ளவேண்டும், இல்லையானால், யுத்தம் செய்து நாட்டை பிடிப்பேன் என்று முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு கடிதம் அனுப்புவது போல கட்டாயப்படுத்த மாட்டார் சமாதானத்தின் பிரபு இயேசு கிறிஸ்து.

பல முறை "எனக்கு சுகமாக்க அதிகாரம் உண்டென்று நம்புகிறாயா?" என்று இயேசு கேட்கிறார், ஒரு முறை பல நண்பர்கள் ஒருவனை வீட்டின் கூறையிலிருந்து இறக்கும் போது, அந்த நண்பர்களின் விசுவாசத்தை கண்டு இயேசு சுகம் தருகிறார். ஒரு முறை, "இயேசுவே என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியில்லாதவன், எனவே, ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்" என்று கேட்கும் போது, "சரி உன் விசுவாசத்தின் படி உனக்கு ஆகட்டும்" என்றுச் சொல்கிறார். இப்படி இயேசு பல முறை, நம்பிக்கை உள்ளவர்களுக்கே அற்புதம் செய்துள்ளார்.

எனவே, அவிசுவாசம் உள்ளவர்களுக்கு அற்புதம் செய்யமாட்டார், அவர் அற்புதம் செய்ய தயார் தான், ஆனால், அற்புதத்தை பெற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லையே, பின் எப்படி அவர் அற்புதம் செய்வார்?


4. அவர்களின் அவிசுவாசம் குறித்து இயேசு ஏன் ஆச்சரியப்பட்டார்:

பிஜே அவர்கள் அருமையாக‌ வசனங்களுக்கு பொருள் கூறுகிறார்கள். அதாவது, மிகப்பெரிய அற்புதங்கள் கண்டும் மக்கள் விசுவாசம் வைக்கவில்லை, ஏனென்றால், ஆசாரியர்கள் "இவன் எங்கள் ஊர் தானே இவன் ஒரு தச்சன் தானே" என்று ஆச்சரியப்பட்டார்களே தவிர, அவர் மீது விசுவாசம் வைக்கவில்லை. இதனால் தான் அவர் ஆச்சரியப்பட்டார், "தேவை" அங்கு இல்லை, மக்கள் அவரை விசுவாசிக்கவில்லை என்பதால் அற்புதங்கள் அதிகமாக செய்யவில்லை.

ஆனால், இயேசு அனேக அற்புதங்கள் செய்யவில்லை, ஒரு அற்புதம் தான் செய்தார், எனவே, அவர்கள் விசுவாசம் கொள்ளவில்லை என்று பிஜே சொல்கிறார்.

பிஜே அவர்கள் சொல்வது உண்மையானால், இயேசு ஏன் அவர்கள் " அவிசுவாசம்" குறித்து ஆச்சரியப்படவேண்டும்? இயேசு என்ன முகமது போலவா? ஒரு அற்புதமும் செய்யாமல் , என்னையும், நான் கொண்டு வந்த செய்தியையும் நம்பவில்லையானால், நான் போர் செய்து உங்களை அடிமைகளாக மாற்றுவேன், அல்லது கொன்றுவிடுவேன், அல்லது நீங்கள் எனக்கு வரி கட்டவேண்டும் என்று சொல்வதற்கு?

ஆனால், இவ்வளவு திரளான அற்புதங்கள் அவர்கள் கண்டும் ஏன் விசுவாசம் கொள்ளவில்லை என்று இயேசு ஆச்சரியப்படுகிறார், இது நியாயம், நடைமுறைக்கு பொருந்தக்கூடியதாக உள்ளது. ஆனால், பிஜே அவர்கள் சொல்வது தவறான கருத்தாகும். இது அவருடைய கற்பனையே தவிர வேறில்லை.


ஒருவர் எப்போது ஆச்சரியப்படுவார்?

இயற்கையாக நடக்கக்கூடிய ஒன்று நடக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம்.

அல்லது

இயற்கையாக நடப்பது நடக்காமல், இயற்கைக்கு அப்பாற்பட்டது நடந்தாலும் ஆச்சரியப்படுவார்கள்.

அதிகமாக அற்புதங்கள் நடப்பதை மக்கள் கண்டால், ஆச்சரியப்படுவார்கள், இது இயற்கை, ஆனால், இங்கு இயேசு வளர்ந்த ஊர் என்பதால், மக்கள் பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் கொள்ளவில்லை. அதனால், அவர்களது " அவிசுவாசம் பற்றி " இயேசு ஆச்சரியப்பட்டார் என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.

இதை பிஜே மாற்றிச் சொல்கிறார், அதாவது இயேசு அனேக அற்புதங்கள் செய்யவில்லையாம், அதனால் மக்கள் அவிசுவாசம் கொண்டார்களாம். பிஜே அவர்கள் ஒரு முறை மாற்கு 6ம் அதிகாரம் முதல் வசனத்திலிருந்து படித்துப்பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன், முக்கியமாக மாற்கு 6:2ம் வசனத்தில் வரும் "பலத்த செய்கைகள் - MIGHTY WORKS" என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ள அவரை கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு எடுத்துக்காட்டு - குர்ஆனின் வசனம்:

குர்ஆன் 2:6 (ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

குர்ஆன் 2:7 அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

மூலம்: பிஜே அவர்களின் குர்‍ஆன் மொழிபெயர்ப்பு



பிஜே அவர்களே, இந்த குர்ஆன் வசனங்களை பாருங்கள், இதை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று முன்வைக்கிறேன். இதற்கு நான் புது பொருளை கொடுக்கவில்லை.

1. முகமதுவின் செய்தியை ஏற்றுக்கொள்ளாததினால் தான் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரையை போட்டானா? அல்லது

2. அல்லாஹ் முத்திரை போட்டதினால் தான் அவர்கள் முகமதுவின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையா?


இவ்வசனங்களில் எது முந்தியது, அல்லாவின் முத்திரையா? அல்லது இஸ்லாமின் மீது மக்களின் அவிசுவாசமா? இவ்வசனங்களின் உண்மை பொருளை நீங்கள் தான் சொல்லவேண்டும். ஆனால், பைபிள் வசனங்களின் உண்மை பொருள் நீங்கள் சொல்வது தவறு, அதிக அற்புதங்களை கண்டும், மக்கள் அவிசுவாசம் கொண்டதினால் இயேசு ஆச்சரியப்பட்டு, அங்கு அற்புதங்கள் பெற்றுக்கொள்ள அம்மக்கள் தயாராக இல்லாததினால், இயேசு அற்புதம் செய்யவில்லை.

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், இயேசு செல்லும் இடத்திலே ஏதோ ஒரு வியாதி உள்ளவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் இயேசுவின் பல அற்புதங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறான், பார்த்தும் இருக்கிறான், இயேசு அவ்வழியே வரும் போது மற்றவர்கள் அவனிடம் இதோ இயேசு வருகிறார் என்றுச் சொல்கிறார்கள், இருந்தும் அவன், "இயேசு மூலமாக எனக்கு சுகம் தேவையில்லை, நான் அவரை விசுவாசிக்கமாட்டேன்" என்றுச் சொல்கிறான், அந்த நேரத்தில் இயேசு அவனிடத்தில் வந்து, அவன் தலை மீது கைவைத்து சுகப்படுத்த முயற்சி செய்யும் போது, அதை தடுத்து எனக்கு சுகம் வேண்டாம் என்றுச் சொல்லி, இயேசுவின் கையை தள்ளிவிடுகிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவன் அவிசுவாசம் கொள்ளவில்லையானாலும், சுகம் வேண்டாமென்றுச் சொன்னாலும், இயேசு அற்புதம் செய்தாக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், பிஜே அவர்களே. விருப்பமில்லாத இடத்திலிருந்து தன் காலில் ஒட்டியுள்ள அவர்கள் ஊரின் தூசியைக் கூட‌ துடைத்துப் போட்டு அவ்விடம் விட்டு சென்று விடுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்.

ஒரு ஊழியர் "சுவிசேஷம் (நற்செய்தி) இலவசம் தான், ஆனால், அது மலிவானது அல்ல? Gospel is Free But not Cheap" என்று சொன்னதை இங்கு இஸ்லாமிய உலகத்திற்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இயேசுவின் நற்செய்தி உலகத்திற்கு இலவசமாக கொண்டுசென்று அவர்களுக்கு சொல்லுவோம், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது வேண்டாமென்று தள்ளிவிடலாம், அது அவர்கள் விருப்பம். இயேசுவின் வசனங்கள் அடங்கிய புத்தகங்கள், கைபிரதிகள் எங்கு பார்த்தாலும் எல்லாரும் பார்க்கலாம், சாலைகளில், குப்பைத் தொட்டிகளில், பெட்டிக்கடைகளில் இன்னும் பல இடங்களில் பார்க்கலாம், அதற்காக, சுவிசேஷம் மலிவானது என்று பொருள் அல்ல. "கேளுங்கள் தரப்படும்" என்பது தான் இயேசுவின் வார்த்தைகள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அற்புதங்கள் கேட்டால் தான் கொடுக்கப்படும், கேட்காமல் திணிக்கப்படாது, காரணமில்லாமல்.

5. பன்மை (Plural) எப்படி பிஜே அவர்களுக்கு ஒருமையாக (Singular) தென்பட்டது?

1. பிஜே அவர்களே சரியாகச் சொல்லுங்கள் "இயேசு ஒரு அற்புதம் மட்டும் தான் செய்தார் " என்று எழுதுகிறீரே? அதை நீங்கள் எந்த வசனத்திலிருந்து எடுத்தீர்கள்?

2. மாற்கு 6:2ம் வசனத்தில் அவரது பலத்த செய்கைகளை(அற்புதங்களை) கண்டு மக்கள் பிரமித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, அதே போல, மாற்கு 6:5ம் வசனத்தில், " சில நோயாளிகளை சுகமாக்கினார்" என்று சொல்லப்பட்டுள்ளது. "பலத்த செய்கைகள்" என்று பன்மையிலும், "சில" என்று இரண்டிற்கும் அதிகமான எண்ணிக்கையில் சொல்லப்பட்டு இருந்தால், உங்களுக்கு " ஒன்றே ஒன்று மட்டும் " என்று எப்படி இவைகளில் தெரிந்தது?

3. எப்படி இப்படி பைபிள் வசனம் சொல்லாத ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? கற்பனை அதிகமாக இருந்தால், அதை உங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை விவரிக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதை ஏன் பைபிளில் பயன்படுத்துகிறீர்கள்?


6. மரியாதையுடன் வேண்டியும் அற்புதம் செய்ய இயலாதவர்:

பிஜே அவர்கள் எழுதியது:

அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு: 12:38,39)

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.

Emphasis mine


இயேசு அற்புதம் செய்ய மறுத்ததற்கான காரணத்தை அறிந்துக்கொள்ளவேண்டுமானால், ஏதோ ஒரு வசனத்தை படித்தால் புரியாது, அதற்கு முன்புள்ள வசனங்களை பார்த்தால் தான் புரியும்.

பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 12ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட சில முக்கியமான நிகழ்வுகள்:

1. இயேசு தேவாலயத்தில் ஒரு சூம்பின கையுடைய மனுஷனை சுகமாக்குகிறார், இப்படி ஓய்வு நாளில் சுமப்படுத்துவது சரியல்ல என்று ஆசாரியர்கள் கேட்டார்கள், அப்போது இயேசு ஒரு ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்தால், அதை காப்பாற்றமாட்டீர்களா? என்று கேட்டு, அம்மனிதனை சுகப்படுத்துகிறார். (மத்தேயு 12:9-13)

2. இதனால், இயேசுவை கொலை செய்யவேண்டும் என்று அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். (மத்தேயு 12:14)


மத்தேயு 12:14அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.



3. அவர்களுடைய ஆலோசனையை இயேசு அறிந்து அவ்விடம் விட்டு வந்து விடுகிறார், திரளான மக்கள் அவரை பின் தொடர்கிறார்கள், எல்லாரையும் அவர் சுகமாக்குகிறார் (மத்தேயு 12:15-16).

மத்தேயு 12:15 . இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி , 16. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.



பிஜே அவர்கள் கவனத்திற்கு: இங்கு திரளான ஜனங்களை இயேசு சுகமாக்கி, தன்னை பிரசித்தம் செய்யாதீர்கள் என்றுச் சொல்கிறார், ஏனென்றால், இப்போது தான் அவர் ஆசாரியர்களின் கைகளிலிருந்து தப்பி வந்தார் என்பதால். " திரளான ஜனங்கள்" மற்றும் "எல்லாரையும் அவர் சுகமாக்கினார் " என்ற வார்த்தைகளை கவனிக்கவும்.

4. அப்பொழுது இயேசு குருடும், ஊமையுமான ஒரு பிசாசு பிடித்தவனை சுகமாக்குகிறார். ( மத்தேயு 12:22)


மத்தேயு 12:22 அப்பொழுது பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.



பிஜே அவர்கள் கவனத்திற்கு: இயேசு தேவாலயத்தில் ஒரு அற்புதம் செய்தார், வெளியே வந்து மக்கள் எல்லாரையும் சுகப்படுத்தி அற்புதம் செய்தார், மற்றும் மத்தேயு 12:22 வசனத்தின் படி இன்னொரு அற்புதம் செய்தார், இப்படி இயேசு தொடர்ந்து செய்துக்கொண்டு இருக்கிறார்.

5. ஜனங்கள் ஆச்சரியப்பட்டு, இவர் தான் "தாவீதின் குமாரனா அதாவது வருவார் என்று காத்திருந்த மேசியாவா ( கிறிஸ்துவா ) என்று சொல்லிக்கொண்டார்கள்" (மத்தேயு 12:23)

6. பரிசேயர்கள் அங்கும் வந்து, இல்லை இல்லை, இவர் தாவீதின் குமாரன் மேசியா இல்லை, இவன் பிசாசுகளின் தலைவனால் பிசாசுகளை துரத்துகிறான் என்று சொல்கிறார்கள். (மத்தேயு 12:23)


மத்தேயு 12:24 பரிசேயர் அதைக்கேட்டு, இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.



பிஜே அவர்கள் கவனத்திற்கு: இங்கு, இயேசு அற்புதங்கள் செய்தார் என்று பரிசேயர்கள் சொல்லும் சாட்சியை காணலாம், அதாவது, இவர் மேசியாவாக இருந்தால், இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்யலாம், ஆனால், இவர் மேசியா(தாவீதின் குமாரன்) இல்லை, ஆனால், பிசாசுகளின் தலைவனால் பிசாசுகளை துரத்துகிறான் என்றுச் சொல்கிறார்கள். இவர்கள் கண்களால் அற்புதங்களை கண்டு, பிசாசுகள் ஓடுவதை கண்டார்கள், அற்புதங்கள் நடக்கவில்லை (பிசாசுகள் போகவில்லை) என்று இவர்கள் சொல்லவில்லை. மாறாக இவருக்கு சக்தியை பிசாசுகளின் தலைவனிடமிருந்து வந்தது என்றுச் சொல்கிறார்கள். இயேசு செய்த அற்புதங்களை இவர்கள் மறுக்கவில்லை.

7. இவர்களின் இந்த வார்த்தைகளை இயேசு அறிந்து, அவர்களை கடிந்துக்கொள்கிறார், கெட்ட மரமாக நீங்கள் இருந்தால், நல்ல கனி எப்படி கொடுப்பீர்கள்? பரிசுத்த ஆவிக்கு விரோதமாக சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்கு தரவேண்டும் என்று கடிந்துக்கொள்கிறார் (மத்தேயு 12:25-37).


அடுத்து வரும் உரையாடல் தான் பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம், மத்தேயு 12:38-39

மத்தேயு 12:38 அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். 39 அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.



மதிப்பிற்குரிய பிஜே அவர்களே இப்போது பதில் சொல்லுங்கள்:

1. தேவாலயத்தில் சூம்பின கையுடைய மனுஷன் சுகமாவதைக் கண்டார்கள் இவர்கள்.

2. மற்றும் எல்லா மக்களையும் (திரளான ஜனங்களையும்) இயேசு சுகமாக்கும் போது, மக்கள் அவரை புகழுவதையும் கண்டார்கள் இந்த ஆசாரியர்கள்.

3. பிறகு குருடும், ஊமையுமான பிசாசு பிடித்தவனை சுகமாக்கும் போது, அதையும் கண்டு, மக்கள் புகழும் போது, இல்லை இல்லை என்று சொல்லி, பிசாசுகளின் தலைவனின் உதவியால் தான் இவன் இப்படி அற்புதங்கள் செய்கிறார் என்று சொன்னார்கள், அவரை விமர்சித்தார்கள் இந்த ஆசாரியர்கள்.

இவ்வளவு அற்புதங்கள் செய்வதைக் கண்டு, இயேசுவின் தலைவன் பிசாசு என்றுச் சொல்லி, அவரை அவமானப்படுத்தியவர்கள் இப்போது, ஒரு அற்புதத்தை செய்து காட்டும் படி சொல்கிறார்கள்.


பிஜே அவர்கள் எழுதியது:

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.

Emphasis mine


இயேசுவை திட்டிவிட்டு, இவ்வளவு செய்தவர்கள், இப்போது "போதகரே" என்று இயேசுவை அழைப்பது, மரியாதையின் காரணமாக, அற்புதங்கள் காணவேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்குமா? என்று நிதானமாக சிந்தித்துப்பாருங்கள்.

உண்மையில் இவர்கள் அற்புதங்கள் காணவேண்டும் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை, காரணம் இவ்வார்த்தைகள் இவர்கள் சொல்வதற்கு முன்பே இயேசு பல அற்புதங்களை செய்து காட்டியுள்ளார். அவைகளைக் கண்டு நம்பிக்கை கொள்ளாதவர்களா? இப்போது ஒரு அற்புதத்தை கண்டு நம்பப்போகிறார்கள்?

இன்னொரு அற்புதம் செய்து காட்டினாலும், இதுவும் பிசாசுகளின் தலைவனால் இவன் செய்கிறான் என்று ஏன் சொல்லமாட்டர்கள் இவர்கள்?

கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்த்தால், உலகம் இருட்டாகத்தான் தெரியும்.

ஊர் மக்களே இயேசுவின் அற்புதங்களை கண்டு, இவர் கிறிஸ்துவா என்று ஆச்சரியப்படும் போது, அவர்கள் வாயை இவர்கள் மூடிவிட்டு, இன்னொரு அற்புதம் செய்யுங்கள் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?

இயேசு அங்கு அற்புதம் செய்து இருந்தாலும், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை, அதை அவர்கள் கேலிகூத்தாக நினைப்பார்கள் எனவே தான் இயேசு செய்யவில்லை.

பிஜே அவர்களுக்கு ஒரு கேள்வி


பிஜே அவர்களே, நான் உங்கள் வழிக்கே வருகிறேன், யூத குருக்கள் அற்புதத்தை கேட்கும் போது, இயேசு மறுத்தார், காரணம் அற்புதம் செய்யும் அதிகாரம் அவர் கையில் இல்லை, அது இறைவனுடைய கையில் உள்ளது என்று சொல்கிறீர்கள் அல்லவா?

1. நீங்களே சொல்லுங்கள், யூத குருக்கள் மரியாதையாக கேட்கும் போது, தேவன் (அ) இறைவன் (அ) அல்லாஹ் ஏன் இயேசு மூலம் அற்புதம் செய்து காட்டவில்லை?

2. யூத‌ குருக்க‌ள், போத‌க‌ரே என்று ம‌ரியாதையுட‌ன் கேட்ட‌து வெறும் வெளிவேஷம் என்று இறைவ‌னுக்கே தெரிந்துவிட்ட‌தோ?

3. ஏன் ம‌ரியாதையுட‌ம் அவ‌ர்க‌ள் அற்புத‌ம் கேட்ட‌போது, இறைவ‌ன் இயேசு மூலமாக செய்து காட்ட‌வில்லை என்று பிஜே அவ‌ர்க‌ள் தான் இப்போது விள‌க்க‌வேண்டும்?

4. குறைந்தபட்சம் கற்பனை செய்தாவது, இந்த குறிப்பிட்ட காரணத்தினால் தான் இறைவன் இயேசு மூலமாக இந்த சூழ்நிலையில் அற்புதம் செய்து காட்டவில்லை என்று கிறிஸ்தவத்திற்கு விளக்குங்கள்? கேள்வி கேட்டீர்கள் எங்களுக்கு தெரிந்த விளக்கத்தை கொடுத்துவிட்டோம், ஒரு புது கேள்வி(அதே கேள்வி தான்) எழும்பியது, அதை கேட்டுள்ளோம் அதை இப்போது விளக்குவது முதல் கேள்வி கேட்ட உங்களைச் சார்ந்தது.


இயேசுவிற்கு எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும் என்று நன்றாகத் தெரியும்:

இயேசு ஒருபோதும், தன் சுயபெருமைக்காக அற்புதங்கள் செய்யவில்லை. மக்களின் தேவைகளுக்காகவே, மற்றும் தான் ஒரு தேவகுமாரன், மேசியா என்பதை நிருபிப்பதற்காகவே அற்புதங்கள் செய்தார்.

மரியாளின் மீது வைத்த அன்பின் காரணமாக, தன் வேளை இன்னும் வரவில்லை என்று சொன்னாலும் , ஒரு திருமண விருந்தில் அற்புதம் செய்தார் (யோவான் 2:1-11).

யூதர்கள் அல்லாத மக்களிலிருந்து வந்த ஒரு பெண் அதிகமாக வருந்திக்கேட்டுக்கொண்ட போது அற்புதம் செய்தார் (மத்தேயு: 15:21-28).

அவ்வளவு ஏன், தன்னை பிடிக்கவந்த சேவகனின் காதை ஒரு சீடன் அறுத்தபோது கூட அவனை சுகப்படுத்தினார் (லூக்கா 22:50-51)

எனவே, நீங்கள் சொல்லும் விவரங்கள் மிகவும் தவறான விவரங்கள், உண்மையை மாற்றி, ஒரு சில வசனங்களை மேலோட்டமாக படித்து கருத்து கூறி இருக்கிறீர்கள்.



குர்ஆனில் இயேசுவின் அற்புதங்கள்: இயேசுவிற்கு சிறுவயது இருக்கும் போது கலிமண்ணினால் ஒரு பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்ததாக குர்‍ஆன் சொல்கிறது. மரியாளுக்கு உணவை அல்லாஹ் அற்புதமாக கொடுத்த அற்புதம் என்ன மாற்றத்தை யூதர்களிடையே கொண்டுவந்தது, இயேசுவின் பறவை அற்புதம், அல்லாவின் செய்தியை எவ்வளவு வல்லமையாக பறப்ப உதவியாக இருந்தது?

குர்‍ஆன் சொல்லும் இயேசுவின் அற்புதங்கள் எல்லாம் வீண் என்று குர்‍ஆனே சாட்சி சொல்லிவிட்டது, அதாவது யூதர்கள் இத்தனை அற்புதங்கள் கண்டும் இயேசுவின் இஸ்லாமிய செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையே? இயேசு மண் பறவைக்கு உயிர் கொடுத்தது, இயேசு ஒரு உருவாக்குபவர் என்பதை காட்டுகிறதே தவிர அதினால் என்ன பயன் என்று நினைக்கிறீர்கள்.

இயேசு தன் தனிப்பட்ட குடும்பத்திற்கு சாதகமாக அற்புதம் செய்ததில்லை. தன் வளர்ப்பு தந்தை யோசேப்பு, இயேசுவிற்கு 30 வயது ஆவதற்கு முன்பே மரித்ததாக நாம் அறியலாம். நான்கு நாட்கள் மரித்து நாரிப்போன லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசு ஏன் தன் வளர்ப்பு தந்தையை உயிரோடு எழுப்பவில்லை? சிந்திக்கவேண்டும், மற்றவர்களுக்கு பிரயோஜனமான அற்புதங்கள், மற்றும் அவர் கொண்டு வந்த செய்தி உண்மை என்பதை நிருபிக்க அற்புதங்கள் செய்தாரே தவிர, தன் சொந்த உலக குடும்பத்திற்காக அல்ல . ஆனால், குர்‍ஆன் கூறும் இயேசுவின் அற்புதங்களினால் ஒரு நன்மையும் இல்லை என்பது தெளிவாக புரிகிறது. தன் வயது சிறுவர்களுக்கு முனபாக பறவை அற்புதம் செய்ததால், என்ன பிரயோஜனம் சொல்லுங்கள். அச்சிறுவர்கள் என்ன இவர் பெரியவரான போது, இவரது இஸ்லாமிய செய்தியை பறப்ப உதவியாக இருந்தார்களா? சொல்லுங்கள். இயேசு என்ன சாலைகளில் மாஜிக் காட்டிக்கொண்டு செல்லும் நபர் என்று நினைத்தீர்களா? ஒரு வேளை இந்த பறவை அற்புதத்தை கேள்விப்பட்டு, யூதர்கள் இவர் மீது விசுவாசம் வைத்தார்களா? இல்லையே?

இயேசுவின் குர்‍ஆன் அற்புதங்கள் பற்றி தனி கட்டுரையில் காணலாம்.

முடிவுரை: மொத்தத்தில், மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் போல, பிஜே அவர்களும் செயல்பட்டுள்ளார், அதாவது மேலோட்டமாக பைபிளை படித்து, ஒர் வசனத்தின் முந்தைய பிந்தைய வசனங்களை படிக்காமல், எந்த சூழ் நிலையில் வசனங்கள் சொல்லப்பட்டதென்று தெரிந்துக்கொள்ளாமல் புத்தகம் எழுதியுள்ளார்.

1. இயேசு பல அற்புதங்கள் (ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில்) செய்து இருக்கும் போது, இயேசு "ஒரு அற்புதம் தான் செய்துள்ளார்" என்று "பொய்யான " விவரத்தை சொல்லியுள்ளார்.

2. மக்களின் அவிசுவாசத்தினால் தான் இயேசு அற்புதம் செய்யவில்லை என்று பைபிள் சொல்லும் போது, இவர் அதை மாற்றி சொல்கிறார்.

3. ஆசாரியார்கள் பல அற்புதங்கள் கண்டும், இயேசுவை அவமானப்படுத்தும் வார்த்தைகளை சொல்லிய பிறகு திட்டியும், பிறகு அற்புதம் செய்யுங்கள் என்று கெட்டதால் தான் இயேசு செய்யவில்லை என்று பைபிள் சொல்லும் போது, மரியாதையாக ஆசாரியர்கள் கேட்டாலும் இயேசுவால் அற்புதம் செய்யமுடியவில்லை என்று பிஜே அவர்கள் மாற்றிச் சொல்லியுள்ளார்கள்.

எனவே, பிஜே அவர்கள் இனி ஏதாவது பைபிள் பற்றி எழுதும் போது, முந்தைய பிந்தைய வசனங்களை படித்து தெரிந்துக்கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பாகம் 1 முற்றிற்று, பிஜே அவர்களின் "அற்புதம் நிகழ்த்தியது எப்படி?" என்ற தலைப்பின் கீழ் உள்ள மற்ற வரிகளுக்கு இரண்டாம் பாகத்தில் பதில் கர்த்தருக்கு சித்தமானால் பார்க்கலாம்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்