கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியவர்கள் தளம்
கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியவர்கள் தளம் என்று ஒரு தளம் உள்ளது.
கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறிய அன்பர்களே கிறிஸ்தவம் உங்களுக்கு கொடுத்த கசப்பான அனுபவங்களுக்காக வருந்துகிறேன்.
கிறிஸ்தவ மதத்தில் இருந்த நீங்கள் மதத்தில் நல்ல முறையில் இருந்துள்ளீர்கள்.ஆனால் இயேசு கிறிஸ்துவின் உண்மையான அன்பினை நீங்கள் பெற வில்லை என்பது உண்மை.
என்றாலும் நீங்கள் கிறிஸ்தவத்தை விட்டு வெளியே போனது எங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும்,எங்களை விட்டு பிரிந்து செல்வது எளிதானதே.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்களை அதாவது கிறிஸ்தவத்தை விட்டு செல்பவர்களை மற்ற மதத்தலைவர்களை போல் கொல்ல சொல்லவில்லை.நீங்கள் தாராளமாக வெளியே செல்லலாம்,அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.நீங்கள் இங்கு கண்ட தவறுகளையும் தாராளமாக சொல்லலாம்.நாங்கள் உண்மையாகவே திருந்த வேண்டிய விஷயங்களை திருத்த வசதியாக இருக்கும்.
உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆண்டவரின் போதனை. அதை கண்டிப்பாக செய்வோம்.
உண்மை அடியான்