அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
பதவியை காப்பாற்ற தன்னை கிறிஸ்தவர் என்றே சொல்ல பயப்படுபவர் ஆந்திர மாநிலத்தின் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி.
கிறிஸ்தவரான இவர் திருப்பதியில் எழுமலையானுக்கு பரிவட்டம் கட்டுகிறவர். இப்படிப்பட்டவர் திருப்பதியை சுற்றி சிலுவை வைத்ததாக சொல்லி பாரதிய ஜனதா அதிர்ச்சி அடைந்துள்ளதாக எழில் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.
இதை பார்க்கும் போது இந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது."அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"
அவர்(ராஜசேகர ரெட்டி) எங்கே சிலுவையை வைக்கப்போகிறார்
http://ezhila.blogspot.com/2007/09/blog-post_6102.html
யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் திருப்பதியைச் சுற்றி சிலுவை தூண்கள்
யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் திருப்பதியைச் சுற்றி சிலுவை அலங்கார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கிறிஸ்துவ பிரசாரம் செய்யும் ஆந்திர அரசை எதிர்த்து பாஜகவினர் போராடினர்
பிரமோற்சவ விழா திருப்பதி கோவிலைச் சுற்றி சிலுவை அலங்கார தூண்கள்: பாரதீய ஜனதா எதிர்ப்பு
நகரி, செப். 12-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரமோற்சவ விழா நடக்கிறது. இதையொட்டி கோவிலைச் சுற்றியும், மலைப்பாதைகளிலும் தேவஸ் தானம் சார்பில் அலங்கார தூண்கள், வளைவுகள் அமைக் கப்பட்டு வருகின்றன.
அவற்றில் சில தூண்கள் கிறிஸ்தவர்கள் வழிபடும் சிலுவை வடிவத்தில் அமைந் துள்ளது. இவற்றை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று "பிளாஸ்டர் ஆப்பாரீஸ்'' பயன்படுத்தி கலை நுணுக்கத்துடன் வடிவ மைத்துள்ளது.
இந்த சிலுவை வடிவ அலங்கார தூண்களை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாநில பாரதீய ஜனதா இளைஞர் பிரிவு தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி, திருப்பதி நகர பா.ஜனதா தலைவர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலை மையில் தொண்டர்கள் திர ளாகச் சென்று சிலுவை வடிவ தூண்களை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அந்த தூண்களை அகற்ற கோரி போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி ஸ்ரீனிவாஸ் கூறும் போது, "மாநில அரசு சிலவை வடிவ அலங்கார தூண்களை திருப்பதியில் அமைக்க கூடாது. இது கிறிஸ்தவ பிரசாரத்தை ஆதரிப்பது போன்று அமைந்து விடும் என்றார்
Comment Form under post in blogger/blogspot