எழில் அவர்களுடன் நடந்த உரையாடல் தொகுப்பு
7 பின்னூட்டங்கள்:
unmaiadiyaan said... இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு comment டை இங்கு தருவதற்கு வருந்துகிறேன்
விஷ்வஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் கிறிஸ்தவ மிஷனரிகள் தக்கப்பட்டுள்ளனர்
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இந்து மதமும்,இஸ்லாமும் பரப்புவதற்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருப்பதில்லை.
ஆனால் இஸ்லாமிய நாடுகளிளும்,இந்துக்கள் அதிக உள்ள நமது நாட்டிலும் கிறிஸ்தவ போதகர்கள் அநேக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கபடுகிறார்கள்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எந்த மததிலிருந்தும் எந்தமதத்துக்கு போகவும் எந்த தடையும் கிடையாது.எந்த மதக்கொள்கைகள் வேண்டுமாணாலும் பரப்ப உரிமை உண்டு.இதில் தலையிட எந்த மத அமைப்புளுக்கும் அதிகாரமில்லை.
கடந்த மே மாதம் மகாராஷ்ரா,கர்நாடகா இடையில் உள்ள கோலாபூர் என்ற இடத்தில் இரண்டு கிறிஸ்தவப்போதகர்கள் விஷ்வஹிந்து பரிசத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.இது ஒரு ஜனநாயக படுகொலை என்றே கூற வேண்டும்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் எந்த நடாவடிக்கை எடுத்ததாக தெறியவில்லை.
அந்த மனிதபிமானமற்ற தாக்குதல் சம்பவங்கள் தொலைகாட்சியில் வெளியிடப்பட்டது அதனை கீழே காணலாம்.
அந்தக் கொடூரத்தின் புகைபடக்காட்சிகள் புகைபடத்தொகுப்பு
இதற்கெல்லாம் இவர்கள் செய்த தவறு என்ன?
தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் கடவுளை மற்றவர்களுக்கு அறிமுக செய்தானர்.இதில் விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.இல்லாவிட்டால் விட்டுவிடட்டும்.அதை விடுத்து இந்த அராஜக செயலில் ஈடுபட என்ன அவசியம் உள்ளது.
கீழே கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான நாடுகளின் நிலை
இந்துமதத்துக்கு பிரிட்டன் பாராட்டுமழை
இந்துமதம் உலகம் முழுமைக்கும் எது நல்லதோ அதனையே நோக்குகிறது. பலனை எதிர்பாராமல் நல்ல காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கங்களை பிரிட்டன் பாராட்டி, இந்து சமூக நல அமைப்புகளின் சிறப்பான சேவையை பாராட்டியிருக்கிறது.
150 இந்து சமூக நல சேவை அமைப்புகளை பாராட்ட நிகழ்ந்த நிகழ்ச்சியில் தொழில்கட்சியின் உதவித்தலைவரும் இண்டர்நேஷனல் டெவலப்மண்டுக்கான அமைச்சருமான ஹில்லாரி பென் அவர்கள் இவ்வாறு பிரிட்டனின் இந்து சமூகத்தினரை பாராட்டினார்.
http://ezhila.blogspot.com/2007/05/blog-post_9490.html
நியூஸிலாந்து பிரதமர் இந்து மாநாட்டில் கலந்துகொண்டதற்கு முஸ்லீம்கள் கோபம்
நியூஸிலாந்தில் நடந்த இந்து மாநாட்டில் நியூஸிலாந்து பிரதமர் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த இந்துமாநாட்டோடு விசுவ இந்து பரிஷதுக்கு தொடர்பு உண்டு என்று கூறி நியூஸிலாந்து முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
http://ezhila.blogspot.com/2007/05/blog-post_8265.html
அமெரிக்க செனட் இந்து பிரார்த்தனையுடன் வெற்றிகரமாக தொடங்கியது
அமெரிக்க செனட் வெற்றிகரமாக இந்து பிரார்த்தனையுடன் தொடங்கியது.
ராஜன் அவர்கள் இந்து பிரார்த்தனையை சொல்லி தொடங்கி வைத்தார்.
http://ezhila.blogspot.com/2007/07/blog-post_4706.html
என்னருமை வலைபூ நண்பர்கள் எழில்,நேசக்குமார்,நீலகண்டன் நீங்களே சொல்லுங்கள் அராஜகம் எந்த மதத்தின் பெயரால் வந்தால் என்ன?அதற்கு எதிர்த்து குரல் கொடுக்க நீங்கள் வருவீர்கள் அல்லவா?
http://unmaiadiyann.blogspot.com/2007/08/blog-post_4372.html
Friday, 31 August, 2007
எழில் said... அன்புள்ள உண்மையடியான்,
இந்துமதத்தை பரப்புவதற்கு கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகளில் தடை ஏதுமில்லை என்று சொல்ல முடிவது இப்போதுதான். அது முன்பு உண்மையல்ல.
இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் இந்து மதத்தை பரப்புவதற்கு மட்டுமல்ல, பின்பற்றுவதற்கே தடை இருக்கிறது. அதனை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆகவே, இந்தியா மட்டும் வேட்டைக்காடு, எங்கள் இடங்களில் இந்துமதத்துக்கு மதம் மாற தடைவிதிப்போம், இந்து மதத்தை கேவலப்படுத்துவோம் என்று செயல்படும் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகளும் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளும் இருக்கும் வரையிலும், கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியாவில் இருக்கும் இந்து அமைப்புக்களையோ, இந்துக்கோவில் முன்னால் இந்துக்கடவுள்களை அசிங்கமாக திட்டும் கிறிஸ்துவ மிஷனரிகளை அடிப்பதையோ கண்டிக்கச் சொல்ல எந்த உரிமையும் கிடையாது.
நன்றி
எழில்
Saturday, 01 September, 2007
unmaiadiyaan said... அப்ப உங்க இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது வெறும் மதக் கண்துடைப்புதான் அப்படித்தானே.
இந்தியா நாடு என்ற பற்று இல்லை.
மனிதனை குறித்த அக்கரை உங்களுக்கில்லை என்பதே உண்மை.
ஏன் அப்படியிருக்க இஸ்லாமிய நாடுகளில் நமக்கு நன்மை வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்,இது சாத்தியமா?
Saturday, 01 September, 2007
எழில் said... அன்புள்ள உண்மையடியான்,
நீங்கள் உண்மையடியானாக இருக்கும் பட்சத்தில் என் கருத்தில் உள்ள உண்மையை உணர்ந்திருப்பீர்கள்.
இந்திய மதச்சார்பற்ற நாடுதான். அது எப்போதுமே அப்படித்தான் இருக்கும். அதனால், எல்லா இந்துக்களும் மதத்தின் பெயரால் எந்த மதத்தின் பெயரால் அது நடந்தாலும், அராஜகம் நடந்தால் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்.
நானும் குரல் கொடுப்பேன்.
என்னுடைய பதிவை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு அது தெரிந்திருக்கும். லண்டனில் இமாம் தாக்கப்பட்டாலும் எதிர்த்து குரல் கொடுத்துத்தான் இந்த பதிவு வந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இந்தியாவில் இந்துக்கொவில்களின் முன்னால், இந்து பக்தர்களது உணர்வை புண்ப்டுத்தும் வண்ணம் "பாவிகளே" என்று ஆரம்பிப்பதை எப்போது நீங்கள் நிறுத்தப்போகிறீர்கள்?
நன்றி
எழில்
Sunday, 02 September, 2007
unmaiadiyaan said... யாருடைய மனதையும் புண்படுத்துவது குற்றமே.அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.அப்படி செய்வதை கண்டிக்கிறேன்.அடுத்தவர்களை புண்படுத்தாமல் தங்கள் நம்பிக்கையை பரப்புவது தான் முறை.
ஆனால் அதை கண்டிக்க பயன்படுத்துவது வண்முறையாக இருக்க கூடாது.சமீபத்தில் பீஹாரில் ஒரு வழிப்பரி திருடனை ரோட்டில் தாறு மாறாக அடித்தபோது கூட அநேகர் அதற்கு எதிராகவே குரல் கொடுத்தனர்.அந்த மனிதாபி மானம் கூட இந்த மிஷனெரிகள் சம்பவத்தில் காட்டப்படவில்லை.
உங்களின் பதிவை எழுத்து விடாமல் படிப்பதினால் தான் உரிமையுடன் இந்த பதிவை இங்கே இட்டேன்,ஆனால் அதற்கு நீங்கள் கொடுத்த பதிலை கண்டவுடன் தான் எனக்கு உங்கள் எழுத்தும்,எண்ணமும் வேறு வேறாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து விட்டது
Monday, 03 September, 2007
எழில் said...
அன்புள்ள உண்மையடியான்,
நீங்கள் கூறுவது சரிதான்.
இன்றைக்கு கோவிலுக்கு முன்னால் நின்று போகும் வரும் பகதர்களிடம் பாவியே என்று கூறுபவர்களை பார்த்து எல்லோருமே அமைதியாக புன்னகைத்துக்கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
அதனை கண்டியுங்கள் என்று கேட்டேன். அதனை கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.
இந்தியாவில் எத்தனை கிறிஸ்துவ மிஷனரிகள் இருக்கிறார்கள்? ஒவ்வொருவரையுமா பஜ்ரங் தள் ஆட்கள் தாக்குகிறார்கள்?
சிந்தித்துப்பாருங்கள்.
பால் தினகரனலிருந்து எத்தனை கோடிப்பேர் இது போல மிஷனரிகளாக இருந்து ஏழை கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டு கிறிஸ்துவர்களையும் மொட்டையடித்து கோடி கோடியாக சேர்க்கிறார்கள்?
அவர்களுக்கு ஏதேனும் நடக்கிறதா? இல்லைதானே?
நாட்டின் ஒரு மூலையில் எங்கோ நடப்பதை டிவிக்களும் பத்திரிக்கைகளும் ஊதி பெரிசாக்கும்போது அதனையும் யோசித்துப்பாருங்கள். இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை. இவர்கள் அனுமதிப்பதால்தானே இவ்வளவு கோடிப்பணம் உள்ளே வந்து கிறிஸ்துவ் மதமாற்றம் நடைபெறுகிறது?
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏதோ ஒரு இடத்தில் நடந்ததை எல்லா கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் நடப்பது போல ஊதி பெரிசாக்கி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அனுதாபம் தேட முனைகிறீர்கள்.
உண்மையா என்று நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
நன்றி
Monday, 03 September, 2007
unmaiadiyaan said...
அந்தமாதிரி பணம் சம்பாதிப்பவர்களை,ஏமற்றும் எண்ணத்தோடு செயல்படுகிறவர்களை தாராளமாக பொது மேடைகள் அமைத்து அவர்களின் வண்டவளங்களை சொல்லுங்கள்.கண்டியுங்கள்.அரசாங்கத்துக்கு மனு அனுப்பி அவர்களின் வருமானத்தை கணக்கிட சொல்லுங்கள்.அதை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் உண்மையாய் தங்களின் சுகங்களை எல்லாம் துறந்து விட்டு மற்றவர்களுக்காக வாழ்கிறவர்களை ஏன் துண்பப்படுத்த வேண்டும்.ஏமாற்றுகிறவர்களை நாங்கள் ஏதாவது செய்தோமா என்றால் ஏமாற்றுகிறவர்களை நீங்கள் கண்டுகொள்ளாததுக்கு காரணம் என்ன.
எங்கோ ஒரு மூலையில் நடந்தது என்றால் அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா?
யாருடைய அனுதாபத்துக்காகவும் இதை பதிப்பதில்லை.இது போல் அநேக இடங்களில் அநிதீ நடந்தே வருகிறது.
அதையும் கண்டிப்பதில் உண்மைஅடியான் இருப்பான்.வன்முறை என்பது எந்த மதத்தின் பெயரால் வந்தாலும் அதை கண்டிப்பேன்.
http://ezhila.blogspot.com/2007/08/51.html
Comment Form under post in blogger/blogspot