இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, December 26, 2007

138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி (ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் , பாகிஸ்தான் )

(The Great Deception: Author Bishop T Nasir)


தமிழாக்க முன்னுரை: நான் பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட்(Pakistan Christian Post ) என்ற தளத்தில் பல மாதங்களாக கட்டுரைகளை படித்துவருகிறேன். இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து நம் தளங்களில் பதிக்க அனுமதி கொடுக்கிறீர்களா? என்று, பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு கடிதம் எழுதிய போது, இந்த ஒரு கட்டுரைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எனக்கு அனுமதி அளித்தார். அதற்காக முதலாவது நான் தேவனுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிக்கையின் ஆசிரியர், Dr. Nazir S Bhatti அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழாக்கம் தொடர்கிறது...

அக்டோபர் 2007ல் உலகம் அனைத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்களில் 138 பேர் ஒரு குழுவாக சேர்ந்து பாகிஸ்தான் உட்பட, "உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us) " என்ற கடிதத்தை வெளியிட்டார்கள்.

இந்த கடிதம், கிறிஸ்தவ உலகத்தில் ஒரு சராசரி கிறிஸ்தவன் முதல், போப் பெனடிக்ட் XVI (Pope Banedict XVI) வரை உள்ள எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. இக்கடிதத்தில் அழுத்திச் செல்லப்பட்ட கருப்பொருள் என்னவென்றால், இயேசு கிறிஸ்து போதித்த " ஒருவரை ஒருவர் நேசித்தல் - Neighborly Love " என்பதே. இவர்கள் (இந்த இஸ்லாமிய அறிஞர்கள்) "ஒருவரை ஒருவர் நேசித்தல்" என்பது கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் இருக்கும் ஒரு பொதுவான "கோட்பாடு" தான் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்த கடிதத்தை இங்கு படிக்கலாம் : A Commom Word

நான் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி(Radical Christian) கிடையாது, இருந்தாலும் என் அனுபவத்தையும், எனக்கு தெரிந்த விவரங்களையும் முன்வைத்து, கீழ் கண்ட கேள்வியை கேட்க விரும்புகிறேன்:

இஸ்லாமிய கோட்பாடுகளில், "ஒருவரை ஒருவர் நேசித்தல்" என்ற வார்த்தைகள் "இஸ்லாமியர்-அல்லாத" மக்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா?


(The word "Neighborly Love" for a Non-Muslim, does exist in Islamic ideology?)

இக்கடிதம், உலமனைத்திலும் உள்ள எல்லா முஸ்லீம்களுக்கு, அவர்கள் புரிந்துக்கொள்ளும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தை அனுப்புவதினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதாவது முஸ்லீம் அறிஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும், கருப்பருக்கும், வேறு யாருக்கும் இக்கடிதம் மூலமாக எந்த நன்மையும் விளையப்போவதில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் " இஸ்லாம்‍-அல்லாதவர்களை" வெறுக்கவேண்டும் மற்றும் கொல்லவேண்டும், அவ்வளவு தான். இந்த 138 இஸ்லாமிய அறிஞர்கள் உலகம் அனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பிய இந்த கடித அழைப்பைப் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், முதலாவது அவர்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்கள் இப்போது கடிதத்தில் எழுதின "அன்பு (Love‍)" என்பதைப் பற்றி கற்றுக்கொடுக்கட்டும். பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களையும், மற்றும் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களையும் நேர்மையாகவே நடத்துகிறது. இப்படி இருந்தும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், மற்ற இஸ்லாம் அல்லாத சிறும்பான்மை இனத்திற்கு எதிராகவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொடுமை நடந்தவண்ணமாகவே உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், "அயலகத்தாரிடத்தில் அன்பு கூறுதல்" என்ற வார்த்தைகளின் பொருளை, முஸ்லீம்களை விட அதிகமாகவும், தெளிவாகவும் புரிந்துவைத்துள்ளோம்.

இந்த இஸ்லாமிய அறிஞர்கள் முதலாவது உலகமனைத்திலுமுள்ள இஸ்லாமியர்களிடத்தில் செல்லட்டும், இஸ்லாமியர்களின் அடிபாக மக்கள் வரை செல்லட்டும், அதாவது எல்லா மதரசாக்களுக்கும், எல்லா மசூதிகளுக்கும் செல்லட்டும் . அவர்கள் "ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது" என்றால் என்ன என்று மசூதிகளில் கற்றுக்கொடுக்கட்டும். தங்கள் மதரசாக்களிலிருந்து "அன்பு கூறுதல்" என்றால் என்ன என்று சாதாரண சராசரி முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கட்டும். இஸ்லாமியர்கள் "ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது" என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்ட பிறகு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களாகிய யூதர்களுக்கும், இந்துக்களுக்கும், காதியானியர்களுக்கும், இன்னும் உள்ள பெரிய சிறிய முஸ்லீம் அல்லாத மக்களுக்கும் அழைப்பு விடுக்கட்டும். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே " ஒரு பொதுவான வார்த்தைகளைப் A Common Word " பற்றி நாம் உட்கார்ந்து பேசுவோம்.

இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய "உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)" என்ற ஏமாற்று கடிதத்தை படித்த பிறகு நான் கீழ் கண்ட முடிவுக்கு வந்தேன். அதாவது, சர்க்கரையில் தோய்த்து எடுக்கப்பட்ட இனிய‌வார்த்தைகளை பயன்படுத்தி "கிறிஸ்தவ உலகை" ஏமாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இது. இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க போகும் முன்பு அனுப்பப்பட்ட "மூன்று அம்ச செய்தி (Three Point Message) " போல, முஸ்லீம்கள் இப்போது கிறிஸ்தவர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு இது ஏற்ற‌ நேரம் இல்லை.

அந்த மூன்று அம்ச செய்தி கீழே கொடுக்கப்பட்டது போல் அல்லவா இருந்தது:

1. இஸ்லாமை ஏற்றுக்கொள் (அ) இஸ்லாமுக்கு மாறு

2. அப்படி மாறவில்லையானால், முஸ்லீம்களுக்கு " அடங்கி இருந்து", பாதுகாப்பு வரி என்னும் ஜிஸ்யா வரி கட்டு.

3. இவை இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லையானால், அப்போது "எங்கள் வாள்கள் முடிவெடுக்கட்டும் ".


( 1. Accept Islam or convert to Islam .

2. If not, then become "Humble Subject" of Muslims and pay "Jazia" (Protection Tax )

3. If the first two offers are not acceptable, then "Let the Sword Decide ". )

இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் மேலே சொல்லப்பட்டது போல செய்திகளை அனுப்பமுடியாது, எனவே, தான் அன்பு என்ற வார்த்தைய முஸ்லீம்கள் நம்பவில்லையானாலும் அவர்கள் "அன்பின் " செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். உலகமனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான், அதாவது இந்த கடிதத்திற்கு பதில் கொடுக்க நீங்கள் முடிவு செய்தீர்களானால் அல்லது இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் இதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தீர்களானால் அப்போது இவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

இந்த அறிஞர்களின் இதயத்திலும், உள்ளத்திலும் கிறிஸ்தவர்களின் மீது திடீரென்று எரிமலை குழம்பு போல "அன்பு" பெருக்கெடுத்து ஓடியது என்ற காரணத்தால் இவர்கள் இந்த கடிதத்தை தயாரிக்கவில்லை.

"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)" என்ற போர்வையின் கீழ் இருந்துக்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையை தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி தான் இது. நிச்சயமாக நமக்கும்(கிறிஸ்தவர்களுக்கும்) அவர்களுக்கும்(முஸ்லீம்களுக்கும்) இடையே பொதுவாக எதுவும் இல்லை (There is absolutely nothing common Us (the Christians) and Them (the Muslims).

அந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட இஸ்லாமிய அறிஞர்களில், இரண்டு பேரைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவர்கள் :

1. Amb. ஆரிஃப் கமல், முஸ்லீம் இன்டலெக்சுவல், பாகிஸ்தான். (Amb. Aref Kamal, Muslim Intellectual, Pakistan )

2. நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி (Allamah Justice Mufti Muhammad Taqi Usmani Vice President, Darul Uloom Karachi, Pakistan)


நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி அவர்கள் தீவிரமாக கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர். இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்களுக்கு நான் மறுப்பு(பதில்) உருது மொழியில் எழுதியுள்ளேன், அவைகள், "கலாம்-ஈ-ஹக்(Kalam-e-Haq) " என்ற, மாதம் ஒரு முறை பாகிஸ்தானில் வெளியாகும் கிறிஸ்தவ உருது பத்திரிக்கையில் வெளியானது.

கடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், "முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்".

( In my very early response to this "Document", I requested these 138 Muslim scholars to "Let Christians build a Church in Saudi Arabia. We can sit in Saudi Arabian Church and sort all the "Common Words". )

ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் ( Bishop Timotheus Nasir )

மூலம்: http://www.pakistanchristianpost.com/newsdetails.php?newsid=1055


தமிழாக்கம் முற்றிற்று

http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/bishoptnasir/greatdeception.htm

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்