இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, September 13, 2007

“நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!” ஒரு அமேரிக்க விமானியின் கதரல்

இக்கட்டுரை தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது "ஈஸா குர்-ஆன்" தளத்தில் பதிக்கப்போகும் கட்டுரையல்ல. ஈஸா குர்-ஆன் தளம் "பைபிள் குர்-ஆன்" வசன அடிப்படை, கொள்கை அடிப்படை சம்மந்தப்பட்ட கட்டுரைகளை வெளியிடும். இக்கட்டுரையை மற்றவர்கள் தங்கள் தளங்களில் மறுபதிவு செய்யலாம், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள தொடுப்பை மூலமாக கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. Faith Freedom.org தளத்தில் கீழ்கண்ட குறிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.

This letter has been floating on the internet for a while. Though the origin and authorship of the letter cannot be determined with any certainty, and perhaps, its content has been altered several times, the letter conveys a message that many Americans wish to say publicly. – FFI

Source : YOU WORRY ME


"நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!"
"YOU WORRY ME!"


அமெரிக்கா விமானி - Captain John Maniacalco எழுதியது

நீ என்னை துக்கப்படுத்துகிறாய். நீ அப்படி செய்யமாட்டாய் என்று நான் விரும்புகிறேன். நான் நேசிக்கும் இந்நாட்டின் தெருக்களில் நான் நடக்கும் போது, உன்னுடைய கலை மற்றும் கலாச்சாரம் இன்னும் இந்நாட்டின் மனித வள அழகைப்போல மாறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், நீ இன்னும் எங்களோடு கலவாமலேயே இருக்கிறாய். நான் இதை கவனித்தேன். நீ என்னை துக்கப்படுத்துகிறாய்.

என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது, அதனால் உன்னை வெறும் கவனிக்கச் செய்கிறேன். உன் தாய்நாட்டிலிருந்து வரும் முஸ்லீம்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள், என் உடன் பிறந்த குடிமக்களையும், நண்பர்களையும் கடந்த 20 ஆண்டுகளாக தாக்கிக்கொண்டு, கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கை என்ன என்றும், வெறுப்பு எதற்கு என்றும் எனக்கு புரியாத புதிராக உள்ளது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும், அவர்களுடைய இந்த மனிதாபமற்ற செயலுக்கு காரணமாக எதைச் சொல்லியும் அவர்கள் நியாயப்படுத்த முடியாது.

செப்டம்பர் 11ம் தேதி, 19 அரேபிய முஸ்லீம்கள் எங்கள் நாட்டின் நான்கு விமானங்களை கடத்தினார்கள். அவர்கள் பல பிள்ளைகளுக்கு முன்பாக பல பெண்களின் தொண்டைகளை அறுத்தார்கள். பலபேரை மிகக்கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றார்கள். அவர்கள் அந்த நான்கு விமாங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உயரமாக கட்டிடங்களில் அவைகளை மோதவிட்டு, பல ஆயிரமான கர்வப்படக்கூடிய தகப்பன்களை, நேசிக்கின்ற மகன்களை, அனுபவமிக்க தாத்தா பாட்டிக்களை, பெருமைப்படக்கூடிய மகள்களை, உயிர் நண்பர்களை, பிரியமான ஆசிரியர்களை, பயிற்சியாளர்களை, பயமில்லாத அரசாங்க ஊழியர்களை மற்றும் பல பிள்ளைகளின் தாய்மார்களை கொன்றார்கள். பாலஸ்தீன நாட்டினர் விழாக்கொண்டாடினார்கள், ஈராக்கியர்கள் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார்கள், இப்படி பல அரேபிய நாடுகள் மகிழ்ந்தார்கள்.

ஆகையால், நான் உன்னை இப்போது கவனித்தேன், இனி நான் துக்கப்படப்போவதில்லை. இப்படிப்பட்ட தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரமான மனிதர்களைப் போல இனியும் இதே போல வெறுப்புடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும் இப்போதுள்ள மனிதர்கள் அழிக்கப்பட நான் விரும்பவில்லை. ஆனால், எனக்கு உன்னுடைய உதவி வேண்டும்.

ஒரு சாதாரண அமெரிக்க குடிமகனாக, என் தாய் நாட்டையும், குடும்பத்தையும் இந்த நியாயமற்ற உலகத்திலிருந்து பாதுகாப்பதற்காக, நான் ஒன்றை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, உனக்கும், அரேபிய/முஸ்லீம் தீவிரவாதிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நான் எப்படி தெரிந்துக்கொள்வது?

ஒரு உண்மையான "அரேபிய/முஸ்லீம் - அமெரிக்க குடிமகனையும்", "அரேபிய/முஸ்லீம் - அமெரிக்க தீவிரவாதியையும்" எப்படி நான் வேறுபடுத்துவது அல்லது கண்டுபிடிப்பது. இந்த "அரேபிய முஸ்லீம் அமெரிக்க தீவிரவாதிகள்", நாங்கள் செல்லும் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள், எங்கள் அழகிய தோட்டங்களையும் (Parks) இரசிக்கிறார்கள், எங்கள் நாட்டு அரசியல் சட்டத்தின் பாதுகாப்பின் கீழ், எங்கள் சமுதாயங்களில் எங்களோடு ஒன்றுகலந்து வாழ்கிறார்கள், ஆனால், அதே நேரத்தில் தனக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் நல்ல குடும்பங்களையும், பிள்ளைகளையும் கொல்லும் அடுத்த தீவிரவாத தாக்குதல் பற்றி திட்டம் தீட்டுகிறார்கள். இந்த செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ச்சி, இதற்கான பதிலை மாற்றிவிட்டது. என் உயர்ந்த நாட்டையும், அதன் எல்லா மதநம்பிக்கையையும், அதன் குறைபாடுகளையும் பார்த்து இந்நாட்டில் வாழும் நீங்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது அல்ல. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு அரப்-முஸ்லீமும் தான் யார் என்பதை நிர்ணயிக்க இது தான் சரியான நேரம். இதை நீங்கள் தான் கண்டுபிடித்து எனக்குச் சொல்ல வேண்டும்.

நான் தெரிந்துக்கொள்ளவேண்டும், உரிமையுடன் கேட்கிறேன், நீங்கள் அமெரிக்காவை நேசிக்கிறீர்களா இல்லையா? நீங்கள் அமெரிக்காவின் தேசியக்கொடிக்கு முன்பாக உறுதிமொழி கொடுத்து அதை மதிக்கிறீர்களா? நம் நாட்டு தேசியக்கொடியை உங்கள் வீட்டின் முன்பும், உங்கள் வாகனத்தின் முன்பும் வைக்க கர்வப்படுகிறீர்களா? உங்களின் தினசரி தொழுகைகளில் இந்த நாட்டை ஆசீர்வதிக்கும்படியும், இந்த நாடு மேலும் வளர்ச்சியடையவும், பாதுகாப்பாக இருக்கவும் வேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறீர்களா?

அல்லது ஏதாவது ஒரு ஜிஹாதில் அழிக்கப்படவேண்டும் என்று அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறீர்களா? இந்த நாடு கொடுக்கும் சுதந்திரத்திற்கு இந்த நாட்டிற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? இந்த சுதந்திரம் பல நூறு ஆயிர தேசபக்தர்கள் தங்கள் உயிரை கொடுத்து, இரத்தத்தை விலையாக கொடுத்து சம்பாதித்தார்கள். அதே போல நீங்களும் உயிரை தியாகம் செய்து இந்த சுதந்திரத்தை பேணிக்காப்பதற்கு விரும்புவீர்களா? அமெரிக்காவை நீங்கள் நேசிக்கிறீர்களா?

நீங்கள் இந்த உறுதி மொழியை எடுத்துயிருந்தால், எனக்கு நீங்கள் வேண்டும், அதைப் பற்றி எனக்கு தெரிவியுங்கள். உங்கள் இஸ்லாமிய தலைவர்கள் இப்போதே உங்கள் நம்பிக்கையைப் பற்றிய உண்மையை மக்களுக்கு தெரிவிக்கட்டும், உங்களின் இந்த உறுதி மொழியையும் தெரிவிக்கட்டும், மற்றும் ஒரு இஸ்லாமிய சமுதாயமாக இந்த அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்காக என்ன செய்ய இருக்கிறீர்கள் என்று உங்கள் "நடைமுறை திட்டங்களை" மக்களுக்கு அறிவிக்கட்டும். தயவு செய்து, ஏற்கனவே மரித்த அப்பாவி மக்களுக்காக நாம் இப்போது கண்ணீர்வடிக்க வேண்டாம், காரணம் உங்கள் அன்பான குணத்தை நான் அறிந்துக்கொண்டேன். அந்த கோர செயலுக்கு நீங்கள் காரணம் அல்ல. நடந்த முடிந்த தாக்குதல் பற்றி நாம் இனி கவலைப்படுவதினால் ஒரு நன்மையும் நமக்கு வராது. நான் இனி கவலைப்பட்டு கலங்குவதில் விருப்பம் காட்டமாட்டேன். இனி நாம் நடைமுறையில் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தான் நான் நாட்டம் கொள்கிறேன்.( I am not interested in any more sympathy. I am only interested in action)

நம்முடைய மிகப்பெரிய நாட்டிற்கு, இந்த பிரச்சனைகளின் காலங்களில், யுத்தங்களின் காலங்களில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என் நாட்டின் தேசியக்கொடியை அரப்-முஸ்லீம்கள தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, அதை அசைத்துக்கொண்டு வீரமாக நடப்பதை காணவிரும்புகிறேன். நீங்கள் "அல்லா அமெரிக்கவை ஆசீர்வதிப்பார்" என்று தொடர்ந்து சொல்வதை நான் கேட்கவிரும்புகிறேன். என் நாட்டின் இராணுவத்தில் வாலிப அரப்-முஸ்லீம்கள் சேவை செய்வதை நான் காண விரும்புகிறேன். இந்த பாதிப்பில் நம்பிக்கை இழந்த மக்களுக்கு உங்கள் மூலமாக பணத்தாலோ, நேரத்தாலோ இன்னும் அன்பான வார்த்தைகளாலோ அவர்களுக்கும், இந்த நாட்டிற்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்ற உறுதிமொழியை எதிர்பார்க்கிறேன். நம் நாட்டின் FBI இந்த உலக வர்த்தக மையம் தொடர்பாக 400 பேரிடம் பேசவேண்டுமென்று விரும்புகிறது. இவர்களில் பலபேர் உங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் மத்தியில் இன்றும் வாழ்கிறார்கள், பழகுகிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களை இப்போதே எங்களிடம் ஒப்படையுங்கள். இப்படிப்பட்ட செயல்களை உங்களிடமிருந்து நான் இதுவரை காணவில்லை. இதற்கு பதிலாக அவர்களை இன்னும் பாதுகாப்பாக இரகசியமாக உங்கள் சமுதாயத்திலேயே பதுக்கி வைத்துள்ளீர்கள். நீங்கள் தெருக்களிலிருந்து மாயமாகிவிட்டீர்கள். உங்கள் வீடுகளின் கதவுகளின் பக்கத்தில் பாதுகாப்பு வீரர்களை வைக்கவேண்டிய நிலை வந்தது. உங்கள் மீது வழக்கு தொடருவோம் என்று பயமுறுத்தப்படுகிறீர்கள். உங்களை பழிவாங்குவார்கள் என்று திடீரென்று கதறிஅழுகிறீர்கள்.

சில அரப்-முஸ்லீம் பிரதிநிதிகள் மக்களின் மத்தியில் மேடையில் தோன்றி, அவர்களின் இந்த கொடூரச் செயலை பாதுகாக்கவே பேசுகிறார்கள். எந்த காரியம் செய்தாலும், அதற்கு முன்பு ஜாக்கிரதை படுவது அமெரிககாவின் பொறுப்பு என்று சொல்கிறார்கள். அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் தங்கள் இஸ்லாமிய சகோதரர்களின் பாதுகாப்பே அவர்களுக்கு பெரிதாகத்தெரிகிறது. மற்றும் அமெரிக்காவை ஆதரிப்பதாகச் சொல்கிறார்கள், மற்றும் பல இஸ்லாமிய தலைவர்களகிய Khadafi, Hussein, Farrakhan, and Arafat போன்றவர்களை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையிலேயே இஸ்லாம் "சகிப்புத்தன்மையையும்", "அமைதியையும்", மற்றும் மற்ற "எல்லா மக்களை நேசிக்கவேண்டும்" என்றும் சொல்வது உண்மை என்றுச் சொன்னால், எனக்கு இப்படிபட்ட வசனங்கள் எந்த அதிகாரத்தில், எந்த வசனத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று தெரிய விரும்புகிறேன். மற்றும் அந்த அருமையாக வாக்கியங்களுக்கு சில இஸ்லாமிய தலைவர்கள், இமாம்கள் என்ன பொருள் கூறுகிறார்கள் அல்லது அவர்களும் குர்-ஆன் சொல்வது போலவே "சகிப்புத்தன்மை", அமைதி போன்றவற்றை வழி மொழிகிறார்களா என்று தெரிந்துக்கொள்ள ஆசையாக உள்ளது. உண்மையிலேயே குர்-ஆனின் போதனைகள் நன்மையாயும், தூய்மையாயும், உண்மையாயும் இருக்கும் போது, இஸ்லாமிய தலைவர்கள் அவைகளுக்கு தீவிரவாத, சகிப்புத்தன்மையில்லாத பொருள் கூறுவதினால் என்ன நன்மை என்றுச் சொல்லுங்கள்?

What good is it if the teachings in the Koran are good, and pure, and true, when your "leaders" are teaching fanatical interpretations, terrorism, and intolerance?

உண்மையிலேயே இஸ்லாம் நல்ல மதமாக இருந்தாலும், உலகத்தில் உள்ள பெரும்பான்மையான முஸ்லீம்கள் முகமதுவுடைய போதனைகளை தவறாகவும், இஸ்லாம் மதத்திற்கு "களங்கம்" விளைவிக்கும் வகையிலே பொருள் கூறுவது, ஒரு முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. இஸ்லாமின் இந்த தோற்றத்தைத் பலமுறை நமக்கு இவர்களால் காட்டப்பட்டுள்ளது.

இந்த தோற்றத்தின் அஸ்திபாரம் வன்முறையும், மரணமும், தற்கொலைபடையுமாகும். இந்த தோற்றத்தின் உறுப்பினர்கள் உலக சிறைச்சாலைகளிலிருந்து வருகிறார்கள். இந்த தோற்றத்தின் உறுப்பினர்கள் (5 வயதிற்கு உட்பட்டு கூட இருப்பார்கள்), இவர்கள் ஒவ்வொரு நாளும், வாரமும், வருடமும் உலகத்தின் தெருக்களில் சென்று, எங்கள் ஜனாதிபதிகளின் உருவப்படத்தை எரிப்பதிலும், அமெரிக்க தேசியக்கொடியை எரிப்பதிலும், காற்றிலே வானத்திற்கு நேராக துப்பாக்கிச் சூடு செய்வதிலும் ஈடுபடுகிறதை காண்கிறோம். இந்த தோற்றத்தின் உருப்பினர்கள், ஒரு அமைதியான மதத்திலிருந்து மாறி, தான் பிறந்த தன் தாய் நாடான அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதங்களை தூக்குகிறார்கள். இந்த தோற்றம் அதன் சட்டங்கள் வித்தியாசமானவைகள், பயணம் செய்யும் இவர்களில் சிலர் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தங்கள் முகத்தை காட்ட மறுக்கிறார்கள், இஸ்லாமின் பெயரால்.

செப்டம்பர் 11 மற்றும் இது போல உள்ள தாக்குதலை இனி நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இது எங்கள் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமையாகும்.

நான் தெரிந்துக்கொள்ள விரும்புவேன், நான் மட்டுமல்ல இந்த நாட்டில் உள்ள உண்மையாக ஒவ்வொரு குடிமகனும் தெரிந்துக்கொள்ள வேண்டும், அதாவது இந்த நாட்டில் வாழும் "அரப்-இஸ்லாமியர்களாகிய" நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? (உங்கள் அபிப்பிராயம் என்ன?) உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும் இந்த நாட்டின் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமை, இந்த உரிமைக்காக பல ஆயிரமாயிர நம் சகோதரர்கள், சகோதரிகள் தங்கள் இரத்தத்தை சிந்தியுள்ளார்கள். நான் உன்னிடத்தில் இறைஞ்சுகிறேன். நீ என்னுடன் என் சகோதரனாக, என் அயல் வீட்டுக்காரனாக, என் நண்பனாக, என்னுடன் வாழும் சக குடிமகனாக இந்நாட்டில் இருக்க நான் விரும்புகிறேன். ஆனால், இதில் எந்த உள்நோக்கமோ இருக்கக்கூடாது. உனக்கு இந்நாட்டின் மீது அக்கரை அல்லது பக்தி எவ்வளவு உள்ளது என்று நிருபிப்பது இனி உன்னை சார்ந்தது. நீ எங்கே நிற்கிறாய் என்று எனக்கு சொல் .



அதுவரைக்கும் "நீ என்னை துக்கப்படுத்துகிறாய்!"
Until then... "YOU WORRY ME!"
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்