இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 5, 2014

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்


 
2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்


முந்தைய மூன்று தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படியுங்கள்:
முஹம்மதுவும், முஸ்லிம்களும் மக்கா வியாபாரிகளை வழியில் மடக்கி கொள்ளையிட்டது நியாயமா? என்று கேட்டதற்கு, என் தம்பி கீழ்கண்ட பதிலை கொடுத்தான்:

  1. முதன் முதலில் மக்காவினர் தான் முஹம்மதுவை தாக்கினார்கள். எனவே, அவர்களுக்கு முஹம்மது பதிலடி கொடுத்தார்.
  2. முஸ்லிம்கள் மக்காவில் விட்டுவந்த செல்வங்களை மக்காவினர் எடுத்துக்கொண்டனர். அச்செல்வங்ளை மீட்டுக்கொள்ள அல்லாஹ் முஸ்லிம்களுக்கு போர் புரிய அனுமதி அளித்தான்.
மேற்கண்ட இரண்டு விவரங்களில் முதலாவது விவரத்திற்கு, மூன்றாம் பாகத்தில் பதில் அளித்துள்ளேன்.  இந்த கட்டுரையில் நாம்  இரண்டாவது விவரத்திற்கு பதிலைக் காண்போம்.
--------------------------------

அன்புள்ள தம்பிக்கு,

நான் என் முந்தைய கடிதத்தில் சொன்னது போல, இந்த கடிதத்தில், செல்வங்களை மீட்டுக்கொள்ள முஸ்லிம்கள் போர் புரிந்தார்கள் என்று நீ சொன்ன விவரத்திற்கு என் பதிலை இப்பொது தருகிறேன். நிதானமாக படித்துப் பார்த்து சிந்தி.

பதிலுக்கு பதில்: குறைஷிகளே! நீங்கள் ஒரு முறை கொள்ளையடித்தீர்கள், முஸ்லிம்களாகிய நாங்கள் அனேக முறை கொள்ளையடிக்கிறோம்

1) வழிப்பறி கொள்ளையில் ஈடுபட அல்லாஹ் அனுமதியளித்தார்:

மதினாவிற்கு முஹம்மது சென்றபிறகு, அனேக வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார். அதாவது, குறைஷி வியாபாரிகள் தங்கள் வியாபார பொருட்களோடு நாடு திரும்பிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் வழியில் பதுங்கியிருந்து, அவர்கள் மீது திடீர் தாக்குதல் செய்து, சண்டையிட்டு, கொலை செய்து, பொருட்களை அபகரித்தார்கள். இப்படி முஸ்லிம்கள் கொள்ளையடிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்டால், "இதற்கு அல்லாஹ் எங்களுக்கு அனுமதி அளித்தான், முஸ்லிம்களை வீடுகளிலிருந்து துரத்தி, அவர்களின் பொருட்களை அபகரித்த மக்காவினரிடமிருந்து தங்கள் பொருட்களை மீட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்தான். இது நியாயமானது தான்" என்று முஸ்லிம்கள் பதில் அளிப்பார்கள்.

முதல் முறை இவைகளை கேள்விப்படுபவர்கள், "ஆம் முஸ்லிம்கள் சொல்வது சரியானது தான் என்று நினைப்பார்கள்". ஆனால், இவைகளை ஆழமாக ஆராய்ந்தால், இஸ்லாம் இறைவனால் உண்டான மார்க்கம் அல்ல என்பதை புரிந்துக்கொள்ளலாம். 

2) உழைத்து வாழவேண்டும், பிறரை அழித்து வாழக்கூடாது – முஸ்லிம்களின் வறுமையை அல்லாஹ் எப்படி நீக்கினார்?

இஸ்லாமுடைய ஆரம்ப காலத்தைப் பார்த்தால் மிகவும் அருமையாக இருக்கும்.  முஹம்மது தனக்கு இறைச்செய்து வந்தது என்றுச் சொல்லுதல், அதனை அவர் தன் மக்களிடம் பகிர்ந்துக்கொள்ளுதல், சிலர் அவரை எதிர்ப்பதும், சிலர் அவரை ஆதரிப்பதுமாக நிகழ்ச்சிகள் தொடர்ந்துக்கொண்டு இருந்தது. முஹம்மது குறைஷிகளின் தெய்வங்கள் பற்றி அதிகமாக விமர்சிக்க ஆரம்பித்தார்,  இவரின் வாயை மூடுவதற்கு குறைஷிகள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது.  எனவே, இவரின் உயிரையே எடுக்க அவர்கள் எண்ணினர், இதர முஸ்லிம்களுக்கு அனேக தொல்லைகளை கொடுத்தனர். இதனால் முஸ்லிம்களும், முஹம்மதுவும் தங்கள் வீடுகளை விட்டும், செல்வங்களை விட்டும், உயிர் தப்ப மதினாவிற்கு சென்றுவிட்டனர்.  இதுவரை நடந்தது எல்லாம், புதிய மார்க்கத்தை பரப்பும் ஒவ்வொருவரும் சந்திக்கும் எதிர்ப்புகளாகும். இஸ்லாமும் இப்படிப்பட்ட எதிர்ப்பிற்கு உள்ளானது ஒன்றும் புதிய விஷயமல்ல.

ஆனால், இதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் தான் இஸ்லாமின் உண்மை முகத்தை நமக்கு காட்டுகிறது.

அ) மதினாவிற்கு முஸ்லிம்கள் வெறுங்கையோடு வந்து சேர்ந்தார்கள்.  இவர்களின் வறுமையை எப்படி நீக்குவது?  பொதுவாக தங்கள் வறுமையை போக்கிக்கொள்ள மக்கள் கடினமாக உழைப்பார்கள். 

ஆ) ஒரு மனிதன் பக்தியுள்ளனோ அல்லது பக்தியில்லாதவனோ, எவனாக இருந்தாலும் சரி, "உழைப்பு உயர்வு தரும்" என்ற சொல்லுக்கு இணங்க, அவன் கடினமாக உழைத்தால் அவனுடைய வறுமை நீங்கி அவன் உயருவான்.

இ) ஆனால், முஸ்லிம்களின் கதையை கண்டால்,  உழைப்பு மீது  அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது போல் உள்ளது.  தம்பி, இந்த கேள்விகளுக்கு பதில் தர உன்னால் முடியுமா? 

மதினாவில் முஹம்மதுவும், அவரோடு இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் என்ன தொழில் செய்தார்கள்?  உழவுத் தொழில் செய்தார்களா? ஆடுகளையும், ஒட்டகங்களையும் மேய்த்து தங்கள் குடும்பத்துக்கு தேவையான உணவை சம்பாதித்தார்களா?  வேறு நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்து, அதன் மூலம இடைத்த செல்வங்களினால் தங்கள் வறுமையை போக்கிக்கொண்டார்களா?

ஈ) அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், தன்னை நம்பி வெறுங்கையோடு மதினா வந்த முஸ்லிம்களை உழைக்கச் சொல்லி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவன் ஆசீர்வதித்து இருந்திருப்பான்.

உ) குறைஷிகள்  உங்களை துரத்தி, உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டார்கள், ஆகையால், அவர்களின் வியாபாரிகளை வழிகளில் திடீரென்று தாக்கி, அவர்களின் உடைமைகளை நீங்கள் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா? இப்படி கூறுபவன் இறைவனா?

ஊ) அவன் உன்னை கொள்ளையிட்டான், ஆகையால் நீயும் அவனை கொள்ளையிடு – இதுவா இஸ்லாமின்  கோட்பாடு.  தம்பி, அல்லாஹ்வின் இந்த செயல்  மிகவும் கேவலமாக உள்ளது. 

எ) முஸ்லிம்களின் வறுமையை போக்க, அல்லாஹ் கொடுத்த  இந்த வழிமுறை கேவலமானதாகும், இது அநியாயமாகும். நல்ல முஸ்லிம்களை திருடர்களாக அல்லாஹ் மாற்றியது அநீதியாகும்.  மக்காவில் நல்ல பெயரோடு வாழ்ந்து வந்த முஹம்மதுவை ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாக  அல்லாஹ் மாற்றியது அநீதியாகும். 


3) செல்வங்களை மீட்டுக்கொள்ள போர் புரியுங்கள் என்று குர்-ஆன் (2:217) சொல்லவில்லையே!

தம்பி, நீயும் முஸ்லிம்களைப் போலவே இஸ்லாமுடைய தர்மசங்கடமான செயல்களிலிருந்து அதனை காப்பாற்ற   சாக்குபோக்குகளை சொல்லிக்கொண்டு இருக்கிறாய். 

அந்த காலத்தில் "புனித மாதங்கள்" என்று சில மாதங்களை (நான்கு) கருதினார்கள். இந்த மாதங்களில்  போர் புரிவதோ, இதர வன்முறைகளில் ஈடுபடுவதோ கிடையாது.  ஆனால், இதனையும் மீறி முஸ்லிம்கள் குறைஷிகளை இம்மாதங்களில் கொள்ளையடித்தார்கள்.   குறைஷிகள் இதனை  மற்றவர்களிடம் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.  முஸ்லிம்களுக்கும், முஹம்மதுவிற்கும் மிகவும் அவமானமாகிவிட்டது. இதனால், முஹம்மது ஒரு வசனத்தை இறக்கி முஸ்லிம்களின் செயல்கள் நியாயமானவைகள் தான், என்று அல்லாஹ் சொல்வது போல வசனத்தை இறக்கிவிட்டார்.  இதனை குர்-ஆன் 2:217ம் வசனத்தில் காணலாம்.

2:217 புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். 'அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும்   அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (2:217) பீஜே தமிழாக்கம்

2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்) 

இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால்,   குறைஷிகளிடமிருந்து தங்களின் செல்வத்தை திரும்பபெற போர் செய்வதாக முஸ்லிம்கள் சொல்வது எல்லாம் பொய்யாகும். இந்த வசனம் அதைப் பற்றிச் சொல்லவில்லை.  ஒட்டு மொத்த குறைஷிகளின் செயல்களுக்கு பதிலடியாக இந்த வழிப்பறி கொள்ளைகள் நடக்கின்றன என்று மேற்காணும் குர்-ஆன் வசனம் கூறுகிறது. 

புனித மாதங்களில் போர் செய்வது பெருங்குற்றமாகும் என்று  அல்லாஹ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், குறைஷிகளின் செயல்கள் அவைகளை விட பெருங்குற்றம் என்று அல்லாஹ் சொல்கிறார். 

அதாவது, முஸ்லிம்கள் பெருங்குற்றங்களைச் செய்ய அனுமதி அளித்துள்ளார், அவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறார். 

ஆக, வெறும் செல்வங்களை திரும்ப பெறத் தான் வழிப்பறி கொள்ளைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள் என்றுச் சொல்வது தவறாகும். இதனை நாம் மேற்கண்ட வசனத்தின் மூலம் அறியலாம்.

தம்பி, நீ சொல்வது போல ஒரு பேச்சுக்காக நாம் ஏற்றுக்கொண்டாலும், அதிலும் அனேக சிக்கல்கள் உள்ளன:

அ) விட்டு வந்த செல்வங்களை திரும்பப் பெற வேண்டுமென்றால், ஏன் நேரடியாக மக்காவிற்குச் சென்று, போர் புரிந்து செல்வங்களை மட்டும் கொண்டு வந்து இருக்கக்கூடாது?

ஆ) ஏன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு, தீடீர் தாக்குதல் நடத்தவேண்டும்?

இ) விட்டுவந்த செல்வங்களை திரும்ப பெறுவதற்கு பதிலாக, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு, ஏன் மனிதர்களை கொல்லவேண்டும்?

ஈ) செல்வங்களுக்காக மனிதர்களை கொலை செய்வது இஸ்லாமில் நியாயமானதா?

உ) வெறும் பணத்திற்காக மனிதர்களை கொலை செய்ய அனுமதிக்கும் இறைவன் ஒரு இறைவனா?

ஊ) பணத்திற்காக உயிரை எடுக்கும் மார்க்கத்தில் எப்படி மேன்மையான நல்ல குணங்கள் உள்ள மனிதர்களைக் காணமுடியும்?

எ) மதினாவில் முஹம்மது மற்றும் அவரது குழுவின் வறுமையை போக்க, அல்லாஹ்விற்கு இப்படி கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியே தெரியவில்லையா?

ஏ) பல இலட்ச மக்களின் பசியை போக்க வானத்திலிருந்து தினமும் உணவை கொண்டு வந்தவன், சில நூறு மக்களின் உணவுப் பிரச்சனையை தீர்க்க, வழிப்பறி கொள்ளையை தெரிவு செய்வது கேவலமாக இல்லையா? 

முடிவுரை: தம்பி, மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,  முஹம்மதுவிற்கு ஆட்களின் பலம் அதிகமானதும்,  அவர் வலியச் சென்று சண்டையிட்டார், கொள்ளையிட்டார்.  இப்படிப்பட்ட   கோட்பாடுகள் உடைய மார்க்கத்தில் நீதி எங்கேயிருந்து வரும்? மன்னிப்பு எங்கேயிருந்து வரும்?  இதனை பின்பற்றும் மக்கள் எப்படி சமுதாயத்திற்கு நன்மை செய்யும் மக்களாக இருக்கமுடியும்?

நீ என்னை அடித்தாய், இதோ நான் உன்னை கொலை செய்கிறேன்.
எனக்கு ஒரு தீமையை புரிந்தாய், இதோ நான் உனக்கு அனேக தீமைகளை செய்கிறேன்.
நீ என்னையும், என் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகையால் உன்னை அழித்துவிடுகிறேன்.

இப்படியெல்லாம் கோட்பாடுகளை கொண்டுள்ள இஸ்லாம் எப்படி ஒரு அமைதி மார்க்கமாக மாறும்.  

தம்பி, சிறிது சிந்தித்துப் பார்.  குறைஷிகளின் இடத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக கற்பனை செய்துக்கொள். உங்கள் இடத்தில் குறைஷிகள் இருப்பதாக கற்பனை செய்துக்கொள். அவர்களிலிருந்து ஒரு நபி தோன்றி உங்கள் அல்லாஹ்வை விமர்சிக்கிறார் என்று வைத்துக்கொள்.  அப்போது முஸ்லிம்கள் எப்படி செயல்படுவார்கள்? அமைதியாக இருப்பார்களா? குறைஷிகள் எப்படி நடந்துக்கொண்டார்களோ, அதைவிட 100 மடங்கு அதிகமாக நீங்கள் நடந்துக்கொள்வீர்கள்.   இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

தம்பி, நான் மேலே சொன்ன விவரங்களை சிறிது நேரம் ஒதுக்கி சிந்தித்துப்பார். சத்தியத்தை அறிந்துக்கொள், அது உன்னை விடுதலையாக்கும்.

தம்பி ஒரு முக்கியமான விஷயத்தை உனக்கு கடைசியாக சொல்ல விரும்புகிறேன்.

முஹம்மது உயிருக்கு பயந்து மதினாவிற்கு  தப்பித்துச் சென்றுவிட்டபிறகு, அலி மூன்று நாட்கள் மக்காவில் தங்கியிருந்து. முஹம்மதுவிற்கு வரவேண்டிய பணத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டாராம்:

Ali stayed in Mecca for three days and nights until he had restored the deposits which the apostle held.  (Ibn Ishaq/Hisham 335, page 227 – The Life of Muhammad, A translation of Ibn Ishaq's Sirat RAhul Allah by A. Guillaume)

இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்




--
7/15/2013 10:07:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 3 - தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார்? முஹம்மதுவா? மக்காவினரா?

 2013 ரமளான் நாள் 3
தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார்? முஹம்மதுவா? மக்காவினரா?

முந்தைய இரண்டு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படியுங்கள்:

இப்போது ரமளான் மூன்றாவது நாள் தொடர் கட்டுரையை படிப்போம். என் தம்பி எனக்கு எழுதிய பதிலை முதலாவது படியுங்கள். அதன் பிறகு என் பதில் கடிதத்தை படியுங்கள்.

உமரின் தம்பியின் வாதம்: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது மக்காவினர் தான்!

அன்புள்ள அண்ணாவிற்கு,

உங்கள் அருமை தம்பி எழுதும் கடிதம்.

உங்களது இரண்டாவது கடிதம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இஸ்லாமிய புத்தகங்கள் எங்கு இருந்தாலும், அவைகளைத்  தேடி கண்டுபடித்து நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்துக்கொண்டேன்.  

நீங்கள் அறிமுகம் செய்த "ரஹீக்" புத்தகத்திற்காக மிக்க நன்றி. இதுவரை அதனை நான் படிக்காதது வேதனைக்குரிய விஷயம் தான்.  சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று நிகழ்ச்சிகள் நடந்தவைகள் தான். ஆனால், அவைகளுக்கு நீங்கள் பூசிய முலாம் தான் சரியில்லை.   இப்போது நான் அதனை உங்களுக்கு விளக்குகிறேன்.

ஏன் இறைத்தூதர், குறைஷிகளின்(மக்காவினரின்) வியாபாரிகளை தாக்கி அவர்களிடமிருந்து செல்வங்களை கைப்பற்றினார்:

1) மக்காவில் இருக்கும் போது எங்கள் இறைத்தூதர், அமைதியாக  இறைச்செய்தியை பிரசங்கித்தார்.

2) மக்காவினரின் எதிர்ப்புகளை, கொடுமைகளை சமாளித்துக்கொண்டு வாழ்ந்தார், அதே போல, இதர முஸ்லிம்களும் சகித்துக்கொண்டு இருந்தார்கள். மக்காவினரின் தொல்லைகளுக்கு எல்லை இல்லாமல் போனது.

3) மக்காவினர் வன்முறையில் ஈடுபட்டு, கொலை செய்யும் அளவிற்கு சென்ற போது, அவரும் இதர முஸ்லிம்களும் தங்கள் வீடுகளை விட்டு, மற்ற பொருட்களை விட்டுவிட்டு,  ஒன்றுமில்லாத நிலையில் மதினாவிற்கு சென்றார்கள்.

4) தங்கள் செல்வங்களை மக்காவில் விட்டுவிட்டு, மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள், தங்கள் நாட்களை வறுமையிலும், துக்கத்திலும் கடத்தினார்கள்.

5) முஸ்லிம்களின் செல்வங்களை அபகரித்துக்கொண்டு, அவர்களை கொடுமைப்படுத்தியதினால்,  மக்காவினரிடமிருந்து தங்களது செல்வங்களை மீட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்தான்.

6) மக்காவினரோடு முஸ்லிம்கள் சண்டையிடுவதற்கு காரணம் அந்த மக்காவினரே, அவர்கள் தான் முதன் முதலாக முஸ்லிம்களை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்கள், கொலை செய்ய முயற்சித்தார்கள். எனவே தான் அல்லாஹ் இறைத்தூதருக்கு இவைகளைச் செய்யஅனுமதி அளித்தார்.

மேற்கண்ட விவரங்களை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்,  இரண்டு விஷயங்களாக கூறலாம். 

முதலாவதாக, அமைதியாக இருந்த இறைத்தூதர் மீதும், முஸ்லிம்களின் மீதும் வன்முறையை தூண்டி, அவர்களை கொடுமைப்படுத்தியது,  கோபப்படுத்தியது மக்காவினர்.  அதாவது, அமைதியாக இருக்கும் தேன் கூட்டின் மீது கல்லெறிந்தது அந்த மக்காவினர்,  அதன் பிறகு தேனீக்கள் எங்களை விரட்டி விரட்டி கடிக்கின்றதே என்று அவர்கள் ஒப்பாறி வைத்தால் எப்படி நியாயமாகும்? தேன் கூட்டின் மீது ஏன் முதலாவது கல்லெறியவேண்டும், அதன் பிறகு தேனீக்கள் எங்களை கடிக்கின்றன என்று ஏன் கவலைப்படவேண்டும்?

 இரணடாவதாக,  முஸ்லிம்கள் மக்காவில் விட்டுவந்த செல்வங்களை மீட்டுக்கொள்ள அல்லாஹ் முஸ்லிம்களுக்கு போர் புரிய அனுமதி அளித்தான். 
மதினாவிற்கு சென்ற பிறகு ஏன் இறைத்தூதர் போர் புரிந்தார் என்பதை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இதற்கு மேலும் இந்த நிகழ்ச்சிகளை காரணம் காட்டி  எங்கள் இறைத்தூதர் மீது  உங்களால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கமுடியாது என்று நம்புகிறேன்.  

என் அருமை அண்ணே, இந்த அடி (விவரம்) போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

இப்படிக்கு, 
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும், 
உங்கள் தம்பி
-----------------------

[என் தம்பியுடைய மேற்கண்ட கடிதத்திற்கு, நான் எழுதிய பதில் கடிதத்தை இப்போது படியுங்கள்]

உமரின் வாதம்: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது முஹம்மது தான்!

அன்புள்ள தம்பிக்கு,

அண்ணன் உமரின் வாழ்த்துதல்கள். 

உன் விவாதங்களில் கொஞ்சம் சூடு (விஷயங்கள்) அதிகமாகிக்கொண்டு இருக்கிறதை என்னால் காணமுடிகின்றது.  இதற்காக என் வாழ்த்துதல்களை மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன்.  என் முந்தைய கடிதத்தில் நான் மேற்கோள் காட்டிய 3 வழிப்பறி கொள்ளைகள் பற்றி உன்னால் பதில் சொல்லமுடியாது என்று நான் நினைத்தேன், ஆனால், ஒரு முஸ்லிமுக்கே இருக்கும் தனிச்சிறப்போடு நீ  பதில் சொன்னது என்னை சிறிது நேரம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இஸ்லாமிய புத்தகங்களை எதிராளி படித்து இருக்கமாட்டான் என்ற நினைப்போடு பேசுவதும், எழுதுவதும் முஸ்லிம்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. அதே நிலையில் இருந்துக்கொண்டு நீயும் என்னிடம் சவால் விட்டாய். உங்களால் ஆதாரங்களை தரமுடியாது என்று சிங்கம் போல கர்ஜித்தாய். ஆனால், நான் ஒரு விஷயத்தை  வேண்டுமென்றே சொல்லாமல் இருந்தால், அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும் என்பதை நீ அறியாமல் இருந்தாய்.  நீ இனியாவது என்னை சரியாக புரிந்துக்கொள்.  

இப்போது, உன் கடிதத்தில் நீ முன்வைத்த விவரங்களை சிறிது ஆராய்வோம், நீ சொன்னவைகளில் உண்மை இருக்கின்றதா என்பதை உரசிப் பார்ப்போம்.

நீ இரண்டு விவரங்களை முன்வைத்தாய், 1) முதன் முதலாக தேன் கூட்டின் மீது கெல்லெறிந்தது மக்காவினர் தான் என்று நீ சொன்னாய். 2) முஸ்லிம்கள் விட்டுவந்த செல்வங்களை மறுபடியும் மீட்டுக்கொள்ளவே, மக்காவினரின் வியாபாரிகளை முஸ்லிம்கள் தாக்கினார்கள் என்று  கூறினாய். 

நீ முதலாவது கூறிய விஷயத்தைப் பற்றி இப்போது  நான் உனக்கு எழுதுகிறேன்.

தேன் கூட்டின் மீது கல்லெறிந்தது முஹம்மது தான்

மக்காவினர் தான் முஹம்மதுவையும், முஸ்லிம்களையும் முதலாவது தொந்தரவு செய்தார்கள் என்பது உண்மையல்ல. முதலாவது முஹம்மது தான் சும்மா இருந்த மக்காவினர் மீது கல்லெறிந்தார், அவர்களை தொந்தரவு செய்தார், அதன் பிறகு தான் அவர்கள் இவருக்கு பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனை நான் சொல்லவில்லை, இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன. இப்போது அவைகளை பார்ப்போம்.

முஹம்மதுவின் ஆரம்பகால  பிரச்சாரம் பற்றி அல்-தபரி தன்னுடைய சரித்திர நூலில் கீழ்கண்ட விவரங்களை கொடுக்கிறார்:

அ)  முஹம்மது தம்முடைய ஜனங்களுக்கு இறைச்செய்தியை வெளிப்படையாக அறிவித்தார்.  இப்படி அவர் அறிவிக்கும் போது, மக்காவினர் இவரை எதிர்க்க வில்லை. ஆனால், முஹம்மது அவர்களது தெய்வங்களை விமர்சித்து,  மதிப்பு குறைவாக பேசும் போது மக்காவினர் இவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

ஆ) முஹம்மது இப்படி குறைஷிகளின் தெய்வங்களை விமர்சிக்கும் போது, அவர்கள் நேரடியாக முஹம்மதுவின் தந்தையின் சகோதரர் அபூ தலிப் அவர்களிடம் வந்து கீழ்கண்டவாறு முறையிட்டார்கள். 

"அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும்,அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94.

இ) ஆனால், அபூ தலிப் அவர்களோ,  முஹம்மதுவை ஆதரித்து பாதுகாத்து வந்தார்கள்.

ஈ)  தங்களுக்கு நீதி கிடைக்காததால், குறைஷிகள், அபூ தலிப் மரிக்கும் வரை காத்திருந்தார்கள்.

உ) அவர் மரித்ததும், தங்கள் தெய்வங்களை கேவலப்படுத்திய முஹம்மதுவை கொலை செய்ய முயற்சி எடுத்தார்கள். இதிலிருந்து தப்பித்து அவர் மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்.  (பார்க்க http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm

முஹம்மதுவிற்கு குறைஷிகள் செய்தது தவறு ஆகும் மேலும் அது அநீதியாகும் என்று நீ சொல்லலாம். அப்படியானால், கீழ்கண்ட விவரங்களை படித்து அதையும் தவறு என்றும், அநீதி என்றும் உன்னால் சொல்லமுடியுமா?

இன்று மக்காவின் ஒரு புதிய நபி எழும்பினால், இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்?

மக்கா என்பது முஸ்லிம்களின் புனிதஸ்தலம் என்று உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்த காலகட்டத்தில், மக்கா நகரில் பிறந்த ஒருவர், திடீரென்று ஒரு நாள், காபாவின் அருகில் வந்து, கீழ்கண்ட விதமாக கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்:

அ) நான் ஒரு நபியாக இருக்கிறேன்.

ஆ) முஸ்லிம்களாகிய நீங்கள் பின்பற்றும்  தொழுகை முறைகள், ஹஜ் சட்டங்கள் அனைத்தும் தவறானவது. இவைகளை பின் பற்றினால் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்.

இ) அல்லாஹ் என்னை நபியாக ஆக்கியுள்ளான். நீங்கள் பின்பற்றும் அனைத்தையும் மாற்றும் படி எனக்கு அறிவித்து உள்ளான். முஹம்மது சொன்னது அனைத்தும் பொய்யானவைகளாகும். அவைகளை பின் பற்றினால் நரகம் நிச்சயம். 

ஈ) எனவே,  என்னை பின் பற்றுங்கள், நான் உங்களுக்கு நேரான வழியை காட்டுவேன்.

மேற்கண்ட விதமாக  ஒருவர் மக்காவில் இன்று பிரச்சாரம் செய்தால், அவனை முஸ்லிம்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள். மேலும் இந்த மனிதர், ஒரு நல்லவராக  நீதியுள்ளவராக இதுவரை வாழ்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.   இதர மக்கள் சொல்வதை எதையும் கேட்காமல், தான் சொன்னது தான் உண்மை என்று இவர் வாதிக்கிறார், மேலும், இவரது இறைச்செய்தியைக் கேட்டு சிலர் இவரை நபி என்று நம்பி, இவரை பின் பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 

இப்போது இவரைப் பற்றி மக்கா முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்?  என்னைக் கேட்டால், இவர் கூடிய சீக்கிரமே முஸ்லிம்களால் கொல்லப்படுவார் என்றுச் சொல்வேன். தம்பி, இது தானே உன்னுடைய பதிலாகவும் இருக்கும்.

இப்போதுச் சொல், இவருக்கு முஸ்லிம்கள் செய்வது தவறு இல்லையா? அநீதி இல்லையா?  

அன்று குறைஷிகள், இன்று முஸ்லிம்கள்:

இன்று இவருக்கு முஸ்லிம்கள் என்ன செய்வார்களோ, அதே செயலை அன்று குறைஷிகள் முஹம்மதுவிற்கு செய்ய முடிவு செய்தார்கள்.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று தான்.   அன்று முஹம்மது, இன்று இந்த புதிய நபி. அன்று குறைஷிகள், இன்று முஸ்லிம்கள். அன்று குறைஷிகளின் புனித ஸ்தலம், இன்று முஸ்லிம்களின் புனித ஸ்தலம்.

தம்பி, முதலாவது குறைஷிகளை தன் வார்த்தைகளால் தாக்கியது முஹம்மது. அவர்களின் தெய்வங்களை கேவலப்படுத்தியது முஹம்மது. அவர்களின் மனதிற்கு துக்கத்தைக் கொடுத்தது முஹம்மது.  முஹம்மது சொன்னது உண்மையோ, பொய்யோ அதுவல்ல பிரச்சனை,  மக்களின் நம்பிக்கையை தாக்கி நாம் பேசும் போது, எதிர்ப்புக்கள் வரத்தான் செய்யும். பல நூற்றாண்டுகளாக உண்மை என்று நம்பிக்கொண்டு வாழும் மக்களிடம் வந்து, உன் மூதாதையர்கள் செய்தது எல்லாம் வீண், அவைகளால் உங்களுக்கு நன்மையில்லை என்றுச் சொன்னால், எந்த  மனுஷன் தான் சும்மா இருப்பான்?  இப்படி எதிர்ப்பு வேண்டாமென்று விரும்புகிறவர்கள், வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவேண்டும். 

ஆக, முஹம்மதுவின் விஷயத்திற்கு வந்தால், தேன் கூட்டின் மீது முதலாவது கல்லெறிந்து அதை கலைத்தது முஹம்மது ஆவார்.  மக்காவினர் அனேக வழிமுறைகள் மூலமாக முஹம்மதுவோடு சமாதானம் செய்துக்கொள்ளலாம் என்று விரும்பினார்கள், அபூ தலிப் அவர்களிடம் முறையிட்டார்கள், ஆனால், நன்மை ஒன்றும் ஏற்படவில்லை, முஹம்மது, அவர்களின் தெய்வங்களை தாக்கி பேசுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. எனவே, இன்று முஸ்லிம் செய்யும்  வேலையை அன்று குறைஷிகள் செய்தார்கள். இன்றுள்ள முஸ்லிம்களும், அன்று இருந்த குறைஷிகளும் ஒரே படகில் தான் பிரயாணப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். 

எனவே, முஹம்மதுவின் செயல்கள் தான், குறைஷிகளை வன்முறையில் ஈடுபடவைத்தது. எனவே, இங்கு குற்றவாளி முஹம்மது தானே தவிர  குறைஷிகள் அல்ல. 

தம்பி, உன்னுடைய முதலாவது கேள்விக்கு நான் பதில் சொல்லியுள்ளேன். உன் இரண்டாவது கேள்விக்கு அடுத்தமுறை பதில் எழுதுகிறேன். அதாவது முஹம்மது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது, தான் விட்டுவந்த செல்வங்களை மீட்டுக்கொள்ளவே என்ற உன் விளக்கத்திற்கு பதிலை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

இந்த கடிதத்திற்கு நீ பதில்களை எழுதுவாய் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்






--
7/13/2013 10:23:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்