இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, January 27, 2009

Mail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் - 1



 

ஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்

 

அப்துல் மஜீத்

 

முன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், இந்த என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, இவைகளை இங்கு பதிக்கிறேன்.


 
அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1
 
// Abdul Majeeth said:

அன்புள்ள ந‌ண்ப‌ர் ஈஸா குரான் அவ‌ர்க‌ளூக்கு உங்க‌ள் பெயர் தெரியாத‌தால் இப்ப‌டி குரிப்பிடுகிறேன்.த‌ங்க‌ளூடைய‌ க‌ட்டுரைக‌லை எல்லாம் ப‌டித்தேன் ந‌ல்ல‌ முய‌ற்சி. பாராட்டுக்க‌ள். //
 
 
அன்பான சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே, உங்கள் மெயிலுக்காக நன்றி.

என்னுடைய தளத்தின் பெயர் ஈஸா குர்‍ஆன் மற்றும் என் புனைப்பெயர் "உமர்". நீங்கள் இணையத்திற்கு புதியவராக இருந்திருப்பீர்கள், அதனால், என் பெயர் தெரியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். மற்றும் புதியவர்களுக்கு என் பெயர் தெரியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமிய தளங்களாகும், அவர்கள் எழுதும் கட்டுரைகளில் என் தளத்தின் பெயரையும் என் பெயரையும் குறிப்பிடுவதில்லை, அதற்கு பதிலாக, "கிறிஸ்தவர்கள்" என்ற ஒரு பொதுப்படையான பெயரை குறிப்பிடுகிறார்கள். எங்கள் தளங்களின் தொடுப்பையும் கொடுக்கமாட்டார்கள், அவ்வளவு பயந்துள்ளார்கள், இஸ்லாமுக்காக இணையத்தில் உழைக்கும் அறிஞர்கள். எங்கே உங்களைப் போன்ற புதியவர்கள் எங்கள் தளங்களை படித்துவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம்.
 
 
// Abdul Majeeth said:

தங்க‌ளூடைய‌ கீழ்க்கண்ட க‌ட்டுரையில் அதில் முஸ்லிம்க‌ள் ப‌தில் சொல்வ‌தில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளீர்க‌ள். ஆனால் ந‌டைமுரையில் த‌மிழக‌த்தில் முஸ்லிம்க‌ள் ம‌ட்டும்தான் இஸ்லாம் ஒரு இனிய‌ மார்க்கம் மற்றூம் கேள்வி பிறந்தது இன்றூ ( IFT-PERAMBUR ANSWERS BY DR.K.V.S.HABEEB MOHAMMED) போன்ற நிக‌ழ்ச்சிக‌ளீன் மூல‌ம் முஸ்லிம‌ல்லாத‌வ‌ர்க‌ளூக்கு இஸ்லாத்தை ப‌ற்றீய‌ கேள்விக‌ளூக்கு ஒரு ச‌பையில் ப‌ல்வேறூ த‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் முன்னிலையில்,அழகிய‌ முரையில், த‌குந்த ஆதார‌ங்க‌ளோடடு ப‌தில் அளீக்கின்றார்க‌ள். //
 
 
உங்களின் இந்த மெயிலுக்கு சம்மந்தப்பட்டு நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன், அதனை இங்கே படிக்கவும்: "ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? ".

இந்த கட்டுரையில் இஸ்லாமியர்கள் ஏன் மேடைகள் போட்டு, இஸ்லாம் பற்றி விவரிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளேன் படிக்கவும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் நிகழ்ச்சிப் பற்றி தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

நீங்கள் மேற்கோள் காட்டிய என் வரிகள் கீழ் கண்ட கட்டுரையிலிருந்து எடுத்துள்ளீர்கள்.

பின் ஏன் இந்த கட்டுரையில் இப்படி எழுதினேன் என்று நீங்கள் யோசிக்கலாம். நான் எழுதிய வரிகளை நன்றாக கவனிக்கவும்.
 
முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

 
நான் மேலே எழுதிய வரிகள் முழுக்க முழுக்க இணையம் வைத்து எழுதுபவர்களுக்கு என்பதை கீழ் கண்ட வரிகளிலிருந்து நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.

// சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "...." என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். //
 
 
அதாவது, இணையம் வைத்து இஸ்லாம் பர‌ப்புவர்கள் நாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, "விஷமிகள், கோழைகள், தொடை நடுங்கிகள்" என்று வசை பாடுகிறார்கள். மற்றும் "இஸ்லாமுக்கும், எங்கள் நபிக்கும்" அவதூறு செய்கிறார்கள் என்றுச் சொல்கிறார்களே தவிர அறிவுடமையோடு பதில் சொல்வதில்லை. அப்படி பதில் சொல்ல விரும்புபவர்கள் கூட,

யாருக்கு பதில் சொல்கிறார்கள்?

அவர்களின் தளத்தின் பெயர் என்ன?

எந்த கட்டுரைக்கு பதில் சொல்கிறோம்?

என்று நியாயமான முறையில் பதில் சொல்வதில்லை.
 
 
// Abdul Majeeth said:

உங்க‌ளீட‌ம் ச‌த்திய‌ வேதாக‌ம‌ம் இருப்ப‌தாக‌ சொல்லும் நீங்க‌ள் (அல்ல‌து உங்க‌ள் போதகர்க‌ள்) இது போன்ற ஓர் நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்த‌லாம் அல்ல‌வா? முஸ்லிம்க‌ளாகிய‌ நாங்க‌ள் அத‌னை மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறோம். //
 
 
நான் மேலே கொடுத்த கட்டுரையை நீங்கள் படித்தால் உங்களுக்குப் புரியும் ஏன் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், இதற்கு பல காரணங்களை நான் கொடுத்துள்ளேன். மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நான் அக்கட்டுரையில் குறிப்பிட்ட அவசியங்கள் இல்லை, எனவே, நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆனால், அனேக இணையங்கள், புத்தகங்கள் எங்களுக்கு உண்டு, அதாவது இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு பதில் தருவதற்கு. தமிழில் கடந்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் காலம் செல்லச் செல்ல அனேக தளங்கள், கேள்வி பதில் தளங்கள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே எழுதிய கட்டுரையை படித்துவிட்டு, இந்த என் பதிலை(கடிதத்தை) படிப்பீர்களானால், உங்களுக்கு நான் சொல்வது நன்றாக புரியும்.

மற்றும் எங்களுக்கு இஸ்லாமில் உள்ளது போல (உபயோகமில்லாத) சடங்காச்சாரங்கள் இல்லை, அதாவது, இத்தனை முறை தொழுதுக்கொள், இத்தனை முறை கைகளை இப்படி கழுவு, நமாஜ் படிக்கும் போது இப்படி விரலை ஆட்டு போன்ற பழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லாததால், கிறிஸ்தவர்களுக்கும் பெரும்பான்மையாக "இறைவனை தொழுதுக்கொள்ளும்" முறைப்பற்றி அதிக சந்தேகங்கள் வருவதில்லை. எனவே, கிறிஸ்தவர்களுக்காக நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தத்தேவையில்லை.
 
// Abdul Majeeth said:

மேலும் என‌க்கு த‌ங்க‌ளால் ஒரு விஷய‌ம் தெரிய‌வேண்டும் அதாவ‌து பைபிளீன் வ‌ர‌லாறூ, புதிய‌ ம‌ற்றூம் ப‌ழய‌ ஏற்பாடு இய‌ற்றப்பட்ட‌து யாரால்?எப்பொழுது? தொகுக்க‌ப்ப‌ட்ட‌து யாரால்?எப்பொழுது? கால‌ங்க‌லை (கி.மு,கி.பி) தெளீவாக‌ குறீப்பிட‌வும். //
 
 
உங்களுக்கு பைபிள் பற்றிய விவரங்கள் தேவையானால், அவைகளை கீழ் கண்ட தொடுப்புகளில் சென்று ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளவும், தமிழில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அதே நேரத்தில், எந்த கேள்வியை நீங்கள் பைபிளுக்கு எதிராக கேட்பீர்களோ, அதே கேள்விக்கு நீங்கள் குர்‍ஆனுக்காகவும் பதில் சொல்லியாக வேண்டும்.

உங்கள் குர்‍ஆன் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் படிக்கவும், உங்களுக்கு உண்மை அப்போது விளங்கும்.

குர்‍ஆன் முழுமையானதா?

குர்‍ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது அவைகள் என்ன?

ஏன் குர்‍ஆனின் பிரதியை எரித்தார்கள்?

இப்போதுள்ள குர்‍ஆன் பிரதிகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று பல கட்டுரைகள் உண்டு.
 
 
முதலாவது, குர்‍ஆன் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள், பைபிள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் ஒரு முழுமையான நிலைக்கு வரமுடியும், உங்கள் இமாம்கள், அறிஞர்கள் சொல்வதை மட்டும் நம்பினால், நீங்கள் எதையும் முழுவதுமாக புரிந்துக்கொள்ளமாட்டீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொன்னதால், நான் விவாதம் பற்றிய சில விவரங்களை தரவிரும்புகிறேன்.

விவாதம் என்றுச் சொன்னால், அதற்கு ஒரு தலைப்பு வேண்டும், நீங்கள் எந்த தலைப்பையும் தெரிந்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு,
 
1) பைபிளின் வரலாறு மற்றும் குர்‍ஆனின் வரலாறு

2) இயேசுவின் வாழ்க்கை மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை

3) முஹம்மதுவின் திருமண வாழ்க்கை

4) இயேசு தேவ குமாரனா? மற்றும் முஹம்மது இறைத்தூதரா?

5) இஸ்லாம் அமைதி மார்க்கமா?

6) இஸ்லாம் எப்படி பரவியது?

7) பைபிள் முரண்பாடுகள், குர்‍ஆன் முரண்பாடுகள்

 
இத்தலைப்புக்கள் ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன், நீங்கள் உங்கள் சொந்தமாகவும் தலைப்புக்களைத் தரலாம். ஆனால், நீங்கள் பைபிள் பற்றி ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், நான் என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் நான் குர்‍ஆன் பற்றி கேள்விகள் எழுப்புவேன்.

நீங்களும் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அல்லது விளக்கலாம், இப்படி நாம் தொடருவோம்.

அதை விடுத்துவிட்டு, கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தால், அது விவாதம் என்று சொல்லமாட்டார்கள். என் பழக்கமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் குர்‍ஆனுக்கும், முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் கேள்விகள் கேட்பது தான்.

இதனை என் எல்லா கட்டுரைகளையும் படித்தால் உங்களுக்கு புரியும், படிக்கவும்,

என் தளங்கள்:

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளம்:

மற்றும் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலும் என் கட்டுரைகள் வெளியாகின்றன.

மேற்கொண்டு விவாதம் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிவிக்கவும்.

 
1. எழுத்து விவாதத்தை மட்டுமே நான் ஏற்பேன்.

2. மெயில் மூல‌ம் ந‌ட‌ந்தாலும் ச‌ரி, அல்ல‌து

3. த‌மிழ் கிறிஸ்டிய‌ன்ஸ் போர‌ம் (www.tamilchristians.com) த‌ள‌த்தில் நாம் விவாதித்த‌லும் ச‌ரி.

4. மெயில் மூலம் நடந்தாலும், என் தளங்களில், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலும் உங்கள் பதிலும் என் பதிலும் பதிக்கப்படும், இதனால் எல்லா மக்களும் நம் உரையாடலை அறியா வாய்ப்பு உண்டாகும்.

 
உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும்.

உண்மையிலேயே நீங்கள் புதியவராக இருந்தால், என் தள அனைத்து கட்டுரைகளையும் படிக்கும் படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் கிறிஸ்தவம் பற்றியும், இஸ்லாம் பற்றியும் ஓரளவிற்கு உங்களுக்குப் புரியும்.

கீழ் கண்ட இஸ்லாமிய அறிஞர்களுக்கு(தளங்களுக்கு) கிறிஸ்தவர்களின் பதில்கள்

டாக்டர் அஹமத் தீதத்
டாக்டர் ஜாகிர் நாயக்
பி. ஜைனுல் ஆபீதீன்
இஸ்லாம் கல்வி தளம் மற்றும் எம். எம். அக்பர்
தமிழ் முஸ்லீம் (இது தான் இஸ்லாம் தளம்)
நேசமுடன் தளம்
அபூமுஹை தளம்
ஏகத்துவ தளம்
சுவர்ன தென்றல் தளம்
இஸ்லாம் இணைய பேரவை தளம்

இப்படிக்கு உங்கள் சகோதரன்

உமர்



 

 
 

பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்

 
கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்:

சுவிசேஷத்தின் தேவை இஸ்லாமியர்களுக்கு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு இயேசு என்னும் சத்தியத்தை நாம் சொல்லவில்லையென்றால், அவர்கள் ஒரு நாள் இஸ்லாமின் உண்மை முகத்தை அவர்களாகவே கண்டுபிடித்து, நாத்தீகர்களாக மாறிவிடுகிறார்கள்.

இதோ இஸ்லாமின் உண்மை முகத்தை க‌ண்டுக்கொண்ட ஒரு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண், எப்படி இஸ்லாமை விட்டுவெளியேறுகிறார் என்பதை விவரிக்கிறார். இந்த‌ ச‌கோத‌ரி சொல்லும் விவ‌ர‌த்தை ஒரு ஆண் சொன்னால் அவ்வ‌ள‌வு எடுப‌டாது, ஆகையால் ஒரு இஸ்லாமிய‌ பெண் சொல்வ‌தை நீங்க‌ளே கேளுங்க‌ள்.

Faith Freedom என்ற தள நிர்வாகியாகிய அலி சினாவிற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண் எழுதிய கடிதம். நான் என் கட்டுரைகளில் எழுதும் விவரங்களை, ஒரு இஸ்லாமிய பெண் எழுதுவதை படியுங்கள்.
இந்த கட்டுரையை இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்டாக்க பதிக்கப்படுகிறது.

---------------

I am ashamed to have ever been a Muslima

பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்




திரு சினா,

நான் என் வாழ்க்கையில் இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌டித‌த்தை எழுதுவேன் என்று நினைத்துக்கூட‌ பார்க்க‌வில்லை. நீங்க‌ள் ஒரு இஸ்லாமிய‌ பெண்ணோடு விவாதித்த‌ க‌ட்டுரையை நான் முத‌ன் முத‌லில் ப‌டித்தேன் ( FrongPage Magazine Article: http://www.frontpagemagazine.com/Articles/Read.aspx?GUID=3DDB4AD9-F928-4EF8-ADEC-8A9C90594254)


நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது, இஸ்லாமில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றி அறிந்து எனக்கு வேதனை உண்டானது. அதாவது, சொத்துரிமை மற்றும் விவாகரத்து சம்மந்தப்பட்ட விவரங்களும் இதில் அடங்கும். ஆனால், என் வாழ்க்கையில் இதுவரையில், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்பதையும், அதனை நபி அனுமதித்தார் என்பதையும் நான் அறிந்ததேயில்லை என் வாழ்க்கையில் நான் படித்த அனைத்து இஸ்லாமிய புத்தகங்களும் போரில் பிடிப்பட்ட கைதிகளை முஸ்லீம்கள் மிகவும் கண்ணியத்தோடு நடத்தினர் என்று சொல்வதை நான் படித்துள்ளேன். ஆனால், பிடிப்பட்ட பெண்களை கற்பழிப்பதில் என்ன கண்ணியம் இருக்கிறது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெக்காவை கைப்பற்றிய போது மட்டுமே இரக்கத்தோடு நடந்துள்ளார்கள். மெக்கா என்பது நபி என்று அழைக்கப்பட்டவர் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் அங்கு அவரது உறவினர்கள் இருந்தார்கள் என்பதாலும், மெக்காவிற்கு மட்டும் இரக்கம் காட்டியிருக்கலாம்.


ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். பாகிஸ்தானில் இருக்கும் மௌலவிகள் எங்களுக்கு வினோதமான விஷயங்களைச் சொல்வார்கள். அதாவது, கண்ணாடியிலே நம்முடைய முகத்தை பார்க்கும் போது இந்த சூராவை ஓதவேண்டும், வீட்டில் நுழையும் போது இதை ஓதவேண்டும், பிராயாணம் செய்ய புறப்படும் போது, இந்த துவாவை(ஜெபத்தை) செய்யவேண்டும் என்று பல விவரங்களைச் சொல்வார்கள். இப்படிப்பட்ட விவரங்களை எங்களுக்கு அவர்கள் போதிப்பார்கள். ஆனால், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்ற மிகப்பெரிய விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள்? ஆம், இதனை நாம் "கற்பழிப்பு" என்று தான் அழைக்கமுடியும். எப்படி ஒரு பெண் தன் சகோதரர்கள், அல்லது தந்தை அல்லது கணவனை கொலை செய்த அந்த ஆணோடு உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பாள். இந்த சூழ்நிலையில் என்னையோ அல்லது என் சகோதரியையோ அல்லது என் தாயையோ நான் கற்பனை கூட செய்து பார்க்க என்னால் முடியவில்லை. இந்த விவரம் என் மனதை கலக்கிவிடுகிறது. அலி சினா நீங்க‌ள் என் க‌ண்க‌ளை திற‌ந்துவிட்டீர்க‌ள். ஈராக்கில் பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌ இராணுவ‌ வீர‌ர்கள் செய்த தவறைப் பற்றி நான் மிக‌வும் வேத‌னை அடைந்தேன். ஆனால், இங்கு க‌வ‌னிக்க வேண்டிய‌து விவ‌ர‌ம் என்ன‌வென்றால், முஸ்லீம்க‌ள் இவ‌ர்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளா? முஸ்லீம்க‌ள் த‌ங்க‌ளால் முடிந்த‌ பெண்க‌ளை எல்லாம் க‌ற்ப‌ழித்தார்க‌ள். இப்போது, இஸ்லாமிய‌ கோட்பாட்டின் ப‌டி, ஈராக் ஒரு போர்க்க‌ள‌மாக‌ உள்ள‌து, என‌வே, இஸ்லாமிய‌ போத‌னைக‌ளின் ப‌டி, ஈராக்கை ஆக்கிர‌மித்த‌ இராணுவ‌ங்க‌ள், ஈராக் பெண்க‌ளை க‌ற்ப‌ழிப்ப‌து நியாய‌ம் தானே?


மற்றும் இஸ்லாமிய லாஜிக் படி, ஈராக் போரில் தோற்றுவிட்டது, இஸ்லாமின் லாஜிக் படி, ஈராக்கின் மக்கள் அனைவரும் பெண்கள் குழந்தைகள் உடபட‌ அமெரிக்காவிற்கு அடிமைகள். ஆனால், ஈராக்கில் சில எண்ணிக்கையுள்ள பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டார்கள், மற்றும் கற்பழித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், சிறைச்சாலைக்குச் சென்றார்கள். இதையே நாம் வேறு வகையில் பார்க்கலாம், அதாவது இஸ்லாமியர் அல்லாத நாட்டை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்தால், அங்குள்ள அனைத்து பெண்களும் போரில் பிடிப்பட்ட சொத்துக்களாக பெண்கள் கருதப்படுவார்கள், அவர்களை இஸ்லாமிய இராணுவம் எல்லா பெண்களையும் கற்பழித்து இருப்பார்கள்.

என்னுடைய 6 வயது மகள் அல்லது எந்த ஒரு 6 வயது சிறுமி, 50 வயதான ஒரு ஆணை திருமணம் செய்துக் கொள்வதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது, அந்த 50 வயது ஆண் ஆன்மீகத்தில் மத விவகாரங்களில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி.

நான் ஒரு பெண். முஹம்மது சொன்னது போல நான் அறிவில் குறைந்தவள் இல்லை. எனக்கு ஞானத்திலும் குறைவு இல்லை. என் வாழ்க்கையில் அறிவில் பல ஆண்களை நான் ஜெயித்து இருக்கிறேன். நான் படித்து பட்டம் பெற்றேன், இப்போது இரண்டாவது பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். இப்படி இருக்கும்போது எங்கள் நபி எப்படி "பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள்" என்றுச் சொன்னார்? முஹம்மதுவின் இவ்வார்த்தைகள் விஞ்ஞானத்தின் படி பிழையானதாகும்.


இப்போது ஒரு பெண் கற்பழிக்கப்படுவதைப் பற்றி கவனிப்போம். தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதற்கு 4 ஆண்களை, அந்தப் பெண் உலகத்தில் எந்த நாட்டிலிருந்து சாட்சிகளாக கொண்டுவருவாள். கற்பழிப்பு என்பது சர்கஸ் இல்லை, எல்லாரும் வந்து பார்த்து சிறப்பித்து தாருங்கள் என்று அழைப்பிதழ் கொடுப்பதற்கு. கற்பழிப்பு என்பது மனிதன் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்தில் நடத்தப்படுவது. உதாரணத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கற்பமாகிவிட்டாள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். தான் தற்பழிக்கப்பட்டாள் என்பதை நிரூபிப்பதற்கு தனக்கு 4 ஆண்களின் சாட்சிகள் தேவை, ஆனால், அவளுக்கு சாட்சி சொல்ல ஒரு ஆணும் கிடைக்கமாட்டான். ஆனால், திருமணத்திற்கு வெளியே தான் "உடலுறவில் ஈடுபட்டாள் என்பதற்கு மட்டும் ஆதாரத்தை தன் கர்ப்பத்தில் சுமந்துக்கொண்டு இருப்பாள்". இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய சட்டப்படி என்ன நடக்கும்? தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதை நிருபிக்க தன்னால் ஒரு ஆதாரத்தையும் அவளால் காட்டமுடியாது? ஆக, அவள் விபச்சாரம் செய்தாள் என்பதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்லெறியுண்டு மரிப்பாள். இது நியாயமானதாகவும் அல்லது லாஜிக்காகவும் (அறிவுடமையாகவும்) தெரிகின்றதா? இல்லை இல்லை, இதயம் மற்றும் மூளை என்பது ஒருவனுக்கு இருந்தால், அவனுக்கு இவைகள் நியாயமானதாக தெரியாது.


ஜூலியா ரோச் என்ற பெண்மணியோடு உங்களின் உரையாடல் என்னை அசைத்துவிட்டது. இதைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், மூளை குழம்பிவிட்டதாக உணருகிறேன். என் வாழ்க்கை முழுவதும் நான் பின்பற்றியது என்ன? இஸ்லாமிய அறிஞர்கள் நமக்கு வெறும் நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், ஆனால், இந்த உண்மைகளைச் சொல்லமாட்டார்கள்.


பாகிஸ்தானில் இருக்கும் நாங்கள் குர்‍ஆனை மிகவும் கூர்ந்து கருத்தோடு படிக்க கவலைப்படுவதில்லை. எங்கள் பள்ளிக்கூடங்களில் சொல்லப்பட்டவைகளை மட்டுமே நாங்கள் தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறோம். மீதமுள்ள விவரங்களுக்கு நாங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் மீது ஆதாரப்பட்டு இருக்கிறோம், இவர்கள் நம்மிடம் பொய்களைச் சொல்வார்கள், இஸ்லாமில் உள்ள நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், அடிமைகள் பற்றியும், கற்பழிப்பது பற்றிய விவரங்களும் சொல்லமாட்டார்கள்.


இந்த விவரங்களை நான் என் குடும்ப நபர்களுக்குச் சொன்ன போது, என்னை அவர்கள் "காபிர்" என்று சொல்லி கேலி செய்தார்கள். நான் பாகிஸ்தானில் இருக்கும் வரை நான் இப்படியே இருந்துவிடுகிறேன். இஸ்லாமுக்கு எதிராக சொல்லப்படும் எதையும் நான் கேட்கக்கூடாது. என் கண்களையும் காதுகளையும் நான் மூடிக்கொள்ளவேண்டும். நான் இஸ்லாமை விட்டு வெளியே வரக்கூடாது, அப்படி வந்தால் என்னைப்பற்றி என் பெற்றோர்கள் முஸ்லீம்களிடையே வெட்கமடையவேண்டி வரும். நான் இனி இஸ்லாமை பின்பற்றப்போவதில்லை. ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைத்து என் தோழிகளுக்கு நான் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.


இப்படிக்கு
கோமல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Source: http://www.faithfreedom.org/2009/01/20/i-am-ashamed-to-have-ever-been-a-muslima/

Tamil Christians Source:  http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=27823#27823

 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்